gowri panchangam Sprituality

சிம்ம ராசி – ஓவ்வொரு நாளும் கவனம்

சிம்ம ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் ஒவ்வொரு நாளையும் கடக்க நேரிடும் ஜாக்கிரதை..

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சிம்ம  ராசியில் ராகு, 2 ஆம் இடமான

ரிஷப ராசியில் செவ்வாய்,  6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ம் இடமான

துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில்

சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான

விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த

மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய

பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன்

பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன்

பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில்

சிம்ம ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம் 

சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயற்சிக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி சூரிய பகவான், சனி பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஒன்றாக சேர்வது உங்கள் தொழில், வேலை சார்ந்த விஷயங்களுக்கு நல்ல வளர்ச்சியை தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு அல்லது நீங்கள் விரும்பிய இடமாற்றம் அமையும். அது மட்டும் இல்லாமல் பணி இடங்களில் ஒரு சில கருத்து வேறுபாடு இருக்கலாம்.




திருமணம் ஆகாத நபர்களுக்கு தீர்க்கமான முடிவுகள் அமையாமல் இருக்கும். திருமணமான தம்பதிகள் அந்யோனியத்துடன் இருப்பீர்கள். கருத்து வேறுபாடு இருந்தாலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தங்களின் இலட்சியத்தை நோக்கிய பாதையில் முயற்சிகளை செய்து கொண்டே இருப்பது மாணவர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். அதே போல் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் பெரியவர்கள் அல்லது பெற்றோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது உத்தமும்.

குடும்ப பெண்களுக்கு ரெஸ்ட் எடுக்க நேரம் இல்லாத அளவிற்கு அடுத்தடுத்து செயல்கள் வரும். நீங்க இல்லாமல் குடும்ப இருக்காது என்ற அளவுக்கு உங்களை தயார் செய்து கொள்வதற்கான காலம். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாமல் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வயதில் மூத்தவர்கள் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவதை அறவே தவிர்த்து விடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1,3, 6

சந்திராஷ்டம நாள்: 23, 24

பரிகாரம்: தினசரி விநாயகருக்கு சூடம் ஏற்றி வழிபட்டு அன்றைய நாளை தொடங்கினால் வரும் பிரச்சனை கூட உங்களை விட்டு விலகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!