Serial Stories காதல் இளவரசி

காதல் இளவரசி – 13

13TH CHAPTER

 

170டன் எடையுள்ள சிமெண்ட் தட்டுக்கள் 200 கொண்டுவந்து வைக்கப்பட்டு இருந்தது அங்கே, கடலுக்கு அடியில் அதை இறக்கிவைக்க தானியங்கி இயந்திரமும் அதை ரிமோட் மூலம் இயக்கும் வசதியோடு, சிமெண்ட் தட்டுகள் ஒன்றோடு ஒன்றாக இறக்கிவைக்கப்பட்டு இருந்தது. நீருக்குள் அந்த பாரம் அமிழ்வதும் அதனால் ஏற்படும் குமிழ்கள் ஒன்றாய் கலைவதும் பின் சேர்வதும் என ஒரு சுவாரஸ்யமான விளையாட்டைப் போல இருந்தது.

நீந்த செல்வதாக சொல்லிவிட்டு நீண்ட நேரமாகியும் ராமல் இருந்த பரத் நினைவலைக்குள் வந்துவந்து போய்கொண்டு இருந்தான்..

         இன்னும் கொஞ்ச நாளுக்குள்ளே இங்கே பவளப்பாறைகளின் தோற்றம் கிடைக்கும் அதை சுற்றிலும்மீன்களின் கூட்டமும் இந்த தடவையும் நம்ம முயற்சி வெற்றியடையப்போகுது ப்ரியன் உற்சாகமாய் சொல்லிக் கொண்டேபோக பத்மினி மீண்டும் ஸ்மிங்சூட்டோடு வந்து நின்றாள் நான்போய் பவளத்திட்டுகளைப் பார்க்கணும் உத்ரா நீயும் வர்றீயா ?

 

ம்…..! உத்ராவிடம் சுரத்தேயில்லாமல் பதில் வந்தது நானும்

வர்றேன் உத்ராவும் உடைகளை மாற்றிடச் சென்றாள்

 

இப்போ ஏன் கடலுக்கு உள்ளே போகணும் உத்ராவையும் ஏன் கூப்பிடறே ?

 

சும்மா சைட்சீயிங்தான் முதன்முதலா ஒரு நல்லவேலை பண்றோம் அதை லைவ்வா சூட் பண்ணப் போறேன் இப்போது   சிமெண்ட் திட்டுகளை பதிப்பதை பார்வையிடப்போறேன் அது எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சேகரிப்போறேன் மீன்களின் வரத்து கூட இப்போது அங்கே கேமிரா பிக்ஸ் பண்ணப்

போறேன்

 

அம்மாதிரிவிஷயங்களைகண்காணிப்பதற்காகத்தான்9மீட்டர்நீளம்கொண்டசேலன்ஞர்என்னும்நீர்மூழ்கிக்கப்பலைகடலுக்குஅடியில்செலுத்தியிருக்கிறேன்இந்நேரம்சிலஅதிர்வலைகள்அந்தப்பகுதியைச்சுற்றிஏற்பட்டிருக்கிறதுஎன்றுரேடார்கருவிதெரிவித்துஇருக்கிறதுஅதுஎன்னஎன்றுதெரியவிலைஅதனால்ஏதும்ஆபத்துஏற்படலாம்அதனால்நீங்கள்இப்போதுநீந்தபோகவேண்டாம்என்பதுஎன்கருத்துதவிரவும்பரத்தும்அதைவிரும்பமாட்டார்அந்தஅதிர்வலைகளுக்கானகாரணத்தைஅறியத்தான்அவரும்சென்றிருக்கிறார் உத்ராவும்கொஞ்சம்பயந்தசுபாவம்உடையபெண்வீண்ரிஸ்க்வேண்டாம்பத்மினி

 

எல்லாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வெளித்தோற்றத்தில் வேண்டுமானால் உத்ரா பயப்படுபவளாக இருக்கலாம்

ஆனால்அவள்மனதளவில்தைரியசாலிரொம்பநேரம்எடுத்துக்கொள்ளமாட்டோம்அப்படியும்நீங்கள்கடல்மட்டத்தைகண்காணிக்கும்போதுஎங்களையும்கண்காணியுங்களேன்சாதாரணமாகவேபெண்களைப்பார்க்கும்போதுஇருக்கும்திரில்லைவிடவும்,இப்படிநனைந்தஉடைகளோடுமீன்களோடுமீன்களாய்விளையாடும்பெண்களைப்பார்ப்ரியன்நேரம்போவதேதெரியாதுஎன்றுகிண்டலாய் பத்மினி பேசிக்கொண்டு இருக்கும் போதே உத்ராவும் தயாராகி வெளியே வந்தாள்

 

கவனிக்க வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதால் அவர்களிடம் பேச்சை விடுத்து உத்ராவிடம்மட்டும்வெகுதூரம்சென்றுவிடவேண்டாம்பத்திரம்என்றுசொல்லிவிட்டுபரத்வருவதற்குள்அந்தநீர்மூர்கிக்கப்பலைசோதனைசெய்துவிட்டுஇறக்கவேண்டுமேஎன்றகவலையோடுநகர்ந்தான் ப்ரியன்

 

வெகு உயரத்தில் இருந்து பந்து எம்பிக் குதிப்பதைப்

போல இருபெண்களும் தண்ணீருக்குள் நுழைந்தார்கள்

சூட்டையும் மீறிய குளிர் மனதைத் தாக்கியது உத்ராவும் ராஸ்கடலைப் பற்றிப் படித்திருக்கிறாள் பிரிட்டிஷ் ஜப்பானியபோராட்டத்தின் போது ஜப்பானியர்கள் ஆயிரம்பேர் ப்ரிட்டிஷ்ஷாரிடம் சிக்கி தவித்தது அருகில் உள்ள குட்டித்தீவில் முதலைக்கு இரையாகி மொத்தமே 20பேர் தான் தப்பித்தார்கள் அவர்களும் தீவில் இருந்து வெளியே வரமுடியாமல் இறந்துபோயிருக்கிறார்கள் என்று அவளுமே படித்திருக்கிறாள் அப்படிப்பட்ட அபாயகரமான கடலில் தான் தானும் இப்போது நீந்தப் போகிறோம் என்பது திகைப்போடு கூடிய சுவாரஸ்யத்தைத் தந்தது.

 

பத்மினியும் உத்ராவும் வெகு லாவகமாகவே நீந்தினார்கள் நீச்சல் உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமாகவே இருந்தது கண்ணுக்கு முன்னால் நீந்தும் மீனிற்கு இணையாகவே நகரும்போதும் மிக அருகில் பலவகையான மீன்களைப் பார்த்ததும்வெகு திகைப்பாக இருந்தது இத்தனை வண்ணங்கள் இருக்கிறதா என்று பிரமிப்புடனே உத்ராவும் பத்மினியும் நகர்ந்து கொண்டே இருக்கும் போது பெரும் இரைச்சலோடுசீரான வேகத்தில் நீரைக்கிழித்துக்கொண்டு அந்த நீர்முழ்கிக்கப்பல் அவர்களின் இருப்பிடத்தை வந்தடைந்தது சமநிலையான கடலின்நீரை அது கலக்கி விட்டதில் சில மீன்கள் கலவரத்தில் ஓடும் மக்கள் கூட்டத்தினரைப் போல கலைந்துபோயின

 

பெண்களிருவருக்கும் அதுபெரும் வியப்பாய் இருந்தது இன்னும் எத்தனை அதிசயங்களை உள்ளடக்கி

வைத்திருக்கிறதோ இந்த ஆழ்கடல் என்று நீர்முழ்கிக் கப்பலின் அருகில் செல்ல முற்படும் போது அருகில் இருந்து சிறு சமிக்கைகள் மூலம் அவர்கள் ஈர்க்கப்பட்டார்கள் அந்த உடைக்குள் இருந்தது பரத் என்றும் தங்களை உடனே அந்த இடம் விட்டு நகரச் சொல்லி அவன் சைகை செய்வதையும் உணர்ந்து பரத் இருக்கும் இடம் நோக்கி நீந்தினார்கள்

 

மீண்டும் நீருக்கடியில் பெரிய நீர்த்திவலைகள் பெண்களிருவரையும் வேகமாக அருகில் இருந்த பாறைகளுக்கு அருகில் இழுத்துச் சென்றார் பரத் மேற்கொண்டு அங்கிருப்பதே மிகவும் ஆபத்து என்பதைப் போல இருந்தது அந்த அசுரவேக நீச்சல் கடல் மட்டத்தின் மேற்புறம் நீந்தி வந்து சற்றே அவர்களின் கப்பல் அருகில் வரும் வரையில் அவர்கள் மூவரும் இடை விடாமல் நீந்தி வந்து கொண்டு இருந்தார்கள்

 

கரையை அடைந்ததும் தன் நீச்சல் உடையைக் களைந்து விட்டுவேகமாய் வந்து பத்மினி அறைந்தான் பரத்

 

பரத் என்னயிது முட்டாள்தனமான காரியம் எதற்கு உத்ராவின் எந்த கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை மாறாக அவன் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது வேகமாய் அங்கிருந்து

அறைக்குள் நுழைந்து கொண்டான் ப்ரியன் ஓடிவந்தான் நல்லவேளை உங்களுக்கு ஒன்றும் அசம்பாவிதம் நடக்கவில்லை

 

என்னாச்சு ப்ரியன் பரத் என்ன அவருக்கு எங்களை அடிமைகள் என்று நினைத்துக் கொண்டாரா பத்மினியை அவர் எப்படி அடிக்கலாம் தவறென்று அவள் என்ன செய்தாள்

 

நான் சொல்ல சொல்ல கேட்டாகாமல் நீங்க இரண்டு பேரும் நீந்தப் போனீங்க பரத் வந்து நீங்க இரண்டு பேரும் எங்கேன்னுகேட்டாரு விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு ரொம்பவும்கோபம் வந்திடுச்சு என்னைக் கடிந்துகொண்டு உங்கள் உடைகளோடு கூடிய ரேடார் மூலம் கண்காணிக்கச்சொன்னார் அதற்கான காரணத்தை புரிந்து கொண்டால் நீங்கள் இப்படிகோபப்பட மாட்டீர்கள் உத்ரா ஒருவிநாடி ரேடார் ரூமிற்கு வாருங்கள் என்று கடலில் நடந்த நிகழ்வுகளைபெண்களுக்கு காட்டினான்

 

பெண்களிருவரும் நீந்தச்சென்ற சில மணித்துளிகளுக் கு உள்ளாகவே பரத் ப்ரியன் இருக்குமிடம் வந்து சேர்ந்துவிட்டான்நேற்றைக்கு முன்தினம் கடலில் நீர்தன்மைகளை அறியவும் பவளப்பாறைகளின் செயல்பாட்டை அறிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்பட்ட நீர்மூழ்கிக்கப்பலை கண்காணிக்கவே அவன் நீச்சலை மேற்கொண்டது அப்போது நீர்மூழ்கிக்கப்பலை

ஏதோ ஒரு விலங்கு மிக மோசமாக தாக்கியிருப்பதையும் அநேகமாக அது ஒருதிமிங்கலமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்பதோடு இலேசாய் சிதிலமடைந்த அந்த நீர்மூழ்க்கிக் கப்பலில் பெரிய பற்களும் பதிந்திருந்தது சிரமப்பட்டு

அதை கப்பலில் இருந்து பிரித்து எடுத்து வந்து காண்பித்தார் என்று ப்ரியன் இரண்டு பெரியபாதி உடைந்திருந்த பற்களைக் காண்பித்தான் எனக்கு தெரிந்து இந்த மீனின் எடை 8 டன்னிற்குமேல் இருக்கலாம் ஆனால் இந்த பகுதியில் இம்மாதிரி மீன்கள் கிடையாது இது எப்படி இங்கே வந்திருக்கலாம் என்பதும்தெரியவில்லை, நீங்கள் இருவரும் நீந்த சென்றிருந்தபோது உங்களுக்கு வெகு அருகாமையில் தான் அந்த மீன் இருந்திருக்கிறது ரோடார் கருவி மூலம் ஏதோ ஒரு வித்தியாசமான சப்தத்தை நாங்கள் இருவரும் கவனித்தோம் அப்போதுதான் அந்த மீன் மீண்டும் நீர்மூழ்க்கிக் கப்பலைநோக்கி வந்திருந்தது

 

பரத்தும் உங்களை விசாரித்ததும் அப்போதுதான் அந்த

மீனினால் உங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று உடனேயே கிளம்பியும் விட்டார்

 

அதற்கு எதற்கு பத்மினியை அடிக்க வேண்டும்

 

கடலின் தன்மையும் அதன் ஆபத்தும் தெரியும்போது எதற்காக இருவரையும் தனியே அனுப்பினாய் என்று என்னைக்க டிந்துகொண்டபோது பத்மினிதான் ஆர்வமாய் கிளம்பியதாகவும் அவளே உத்ராவையும் அழைத்துச் சென்றதையும் நான் எச்சரித்ததையும் சொன்னேன் நல்லவேளையாக அவரேஉங்களை அழைத்தும் வந்து விட்டார் சற்றுமுன் அந்தமீன் மீண்டும் நீர் மூழ்கிக் கப்பலின் மேல் தாக்குதல் நடத்தியிருக்கிறதைப் பாருங்கள் என்று திரையை ஒளிப்பரப்பினான் ப்ரியன்

ஆக்ரோஷத்துடன் கப்பலை தன் எதிரியாய் நினைத்து மோதிக்கொண்டிருந்தது அந்த ராட்சத மீன்

 

 

What’s your Reaction?
+1
15
+1
9
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!