Serial Stories காதல் இளவரசி

காதல் இளவரசி – 11

11TH CHAPTER

சத்யா தன் லேப்டாப்பின் வழியே பரத்தின் மெயிலைப் படித்துக் கொண்டு இருந்தான். அந்தமானில் நடக்கும் பவளப்பாறைகளை காக்கும் பணி நிகழ்வுகளை அந்த மெயில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் உள்வாங்கியிருந்தது. எதிர்பார்த்தபடி திருப்தியாகத்தான் இருந்தது. பரத்திடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அது நிச்சயம் வெற்றிதான், இனி ரேடார்ஸ் மூலம் யுரேனியம் மெல்ல மெல்ல உருக ஆரம்பிக்கும். செயற்கைத் திட்டுக்கள் அமைக்கும் பணியும் ஆரம்பித்து விட்டால் உருகும் யுரேனித்தை சேமித்துக் கொள்ளலாம் நிக்கோலஸ்க்கு எல்லாத்தகவல்களையும் மெயில் பண்ணினான் தான் இன்னும் சில தினங்களில் அந்தமானுக்கு வருவதாய் பரத்துக்கும் தகவல் அனுப்பிவைத்தான்.

நிக்கோலஸிடம் பண பரிமாற்றத்திக்கான மெயில் வந்தது குதூகலித்தபடியே சந்தோஷமாய் லேப்டாப்பை மூடினான் சத்யா. அந்தமானில் வேலைகள் முடிந்ததும் அடுத்தது இந்தோனேஷியாவின் பாலித்தீவிற்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்கும் முயற்சியில் இயங்கினான் அதற்கு பரத்தை சந்திக்க வேண்டும் முதலில் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் சீட்டியடித்தபடியே சந்தோஷமாய் கிளம்பினான் சத்யா.

தன் விரல்கள் ஒவ்வொன்றையும் நெட்டி முறித்தாள் உத்ரா பக்கத்திலிருந்த பரத் அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் பார்த்துக்கொண்டே மாலைநேர உணவை ருசித்துக்கொண்டு இருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது. வெறுப்புடன் தலையினைத் திருப்பிக்கொண்டவள், மீண்டும் மானிட்டரில் குழுவின் செய்கைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். நேற்று தன் பணியினைத் தொடங்கிய குழுவினர் சற்றே இளைப்பாரிவிட்டு மேற்கொண்டு இன்று மாலை வரையில் தன் பணியினைத் தொடர்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்தக் கொண்டிருந்தாள்.




ஆழ்கடலில் ஆழமும் நீலக்கடலின் அடியில் கண்ணிற்கே இதுவரையில் புலப்படாத உயிரினங்கள் சிலவற்றைப் பார்க்கும் போதும் படர்ந்திருந்த பவளப்பாறைகளின் நிறமும் அழகும் மனதைக் கொள்ளை கொண்டது. நட்சத்திர வடிவில் உள்ள மீன் பவளப்பாறையை மறைத்திருந்ததை போலயிருக்க அதன் முட்கள் தன் மேல் பட்டு விடாமல் லாவகமாய் மருந்தை செலுத்து பணியாளர்களைப் பார்க்கும்போது தன்னையறியாமல் ஒரு சபாஷ் சொல்லத் தோணியது உத்ராவிற்கு

பத்மினியும் அந்தக் குழுவில் தான் இருந்தாள். அவளின் நீச்சல்திறன் அதிசயிக்க வைத்தது. கேமரா பதிவு செய்திருந்த இன்னொரு விஷயம் சற்றே நகைப்புரியதாய் இருந்தது. அருகருகே இரண்டு குழிக்குள் பதுங்கியிருந்த இரண்டு மீன்கள் ஒன்றோடு ஒன்று ஆனந்தமாய் தங்களுக்குள் விளையாடிக்கொண்டு இருந்தன. நெருங்கி வந்து முத்தமிட்டுக் கொள்வதைப் போல,

ம்… மீன்கள் கூட கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறது ஆனால் சில மனிதர்கள் தான் …. எந்த உணர்ச்சியும் இல்லாமல்….பேசிய பரத்தை எரித்துவிடுவதைப் போல் பார்த்தாள் உத்ரா

பார்த்து எரிச்சிடாதே நான் சும்மாதான் சொன்னேன் பேச்சுத் துணைக்கு கூட ஆள் இல்லாத ஒரு நிலைமை பேசாம பத்மினியை உனக்குப் பதில் நிறுத்தியிருக்கலாம், பேச்சாவது கொடுத்துட்டு இருப்பா, நான் இப்படி ஒரு உரங்கொட்டான் குரங்கு மாதிரி வெட்டு வெட்டுன்னு மோட்டுவளையத்தைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்து இருக்க வேண்டியிருக்காது.

இப்போ கூட ஒண்ணும் கெட்டுப்போகலை, ஒரு ஸ்மிங் சூட் போட்டுகிட்டு நீங்களும் அவகூட போக வேண்டியதுதானே, உங்களை யார் தடுக்கிறது

என்னைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை நானாக கட்டுப்பட்டால் தான் உண்டு. இப்படி வெட்டு வெட்டுன்னு கம்ப்யூட்டரையே முறைச்சிப் பார்த்துகிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கியே உனக்கு போர் அடிக்கலை ?!

நீங்க சொன்னதைப் போல சிஸ்டமில் ஸ்டோர் ஆகியிருக்கிற படங்கள் வீடியோ எல்லாத்தையும் நான் மெயிலும் அனுப்பிவிட்டேன் வேற ஏதாவது வேலையிருக்கா ?!

ஏன் இங்கிருந்து எங்காயாவது வெளியே போகப் போறியா ? இல்லை யாரையாவது பார்க்கப்போகணுமா ? ஏன் கேட்கறேன்னா பிரியன் இன்னைக்கு வந்திருவான் ராஸ் தீவுக்கு போக பர்மிஷனும் கிடைச்சிருச்சி. என் தொல்லையிலிருந்து விடுதலையும் உனக்கு கிடைச்சிரும்.

பரத்தின் முக மாறுதல்களில் கொஞ்சம் இயல்பாகவே கேட்டாள். நான் ஏன் உங்களைத் தொல்லையா நினைக்கப்போறேன் ?! பேச்சை மாற்றிட எண்ணி ராஸ்தீவு பற்றி படிச்சிருக்கேன் அந்தமானின் துறைமுகமாக முன்பு அதுதான் இருந்ததாமே, நடுவில் ஏற்பட்ட சுனாமியால் அந்த தீவும் மக்களும் பெருமளவு அழிந்து போனதாகவும் அதன்பிறகு, அந்த தீவு தனித்து விடப்பட்டதாகவும் படித்திருக்கிறேன், இப்போ அங்கே செயற்கை திட்டுக்கள் வளரும் அளவுக்கு வளம் இருக்கிறதா ?!




நல்லவேளை அவனுமே ஏதும் கிண்டல் செய்யாமல், செயற்கை மணற்திட்டுக்கள் அமைக்கும் பணி முறையினை அவளுக்கு விளக்கிக் கூறினான். பேச்சு செல்ல செல்ல இருவரும் ஒரு சமநிலைக்கு வந்திருந்தனர். பிளாஸ்கில் இருந்த வெந்நீரில் க்ரீன் டீ கலந்து இருவருக்கும் எடுத்து வந்தாள். பெற்றுக் கொண்ட பரத் அவளையே இமைக்காமல் பார்த்து சிரித்தான்

ஏன் சிரிக்கிறீங்க?

எனக்கு கிளியோப்பாட்ரா ஆண்டனி நினைவுக்கு வந்தது, அலெக்ஸாண்டரியா மேல் போர் தொடுக்க வரும் ஆக்டோவிக்ஸிடம் சிக்கிக்கொள்ள கூடாது அதேநேரம் தன்னுடைய இறப்பு அதிக வலியுடையதாக இருக்க கூடாது என்று நினைத்த கிளியோப்பாட்ரா தன் அடிமைகளுக்கு தினமும் ஒரு டெஸ்ட் வைத்தாளாம். ஒவ்வொரு விதமான விஷத்தை பருகக் கொடுத்து எதில் வலி இல்லாமல் உடனே மரணம் நிகழ்க்கிறது என்பதை பரிசோதித்து இருக்கிறாள். முதலில் இதை விளாயாட்டு என்று எடுத்துக் கொண்ட ஆண்டனி காதலியின் செய்கையில் சந்தேகம் கொண்டு தன்னையும் அவள் கொன்றுவிடுவாளோ என்று தோன்ற முதல் நாள் அவள் அளித்த ஒயினை பருக மறுத்து அவளேயே குடித்துவிட்டு தரச்சொல்லியிருக்கிறார்.

ஆண்டனியின் செய்கைக்கான காரணத்தை உடனே கண்டுகொண்ட கிளியோப்பாட்ரா மறுநாள் இரவு இரண்டு மலர் மாலைகளை தனக்கும் ஆண்டனிக்கும் அணிவித்து விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள். ஆண்டனி அணிந்த மாலையில் விஷப்புகை தடவப்பட்டு இருந்தது. ஒயினை அருந்தும் போது தன் மாலையிலிருந்து இரண்டு இதழ்களை எடுத்து ஒயினிற்குள் போட்டு இப்படி குடித்தால் நல்ல நறுமணம் இருக்கிறது என்று சொல்ல, ஆண்டனியும் அதேபோல எடுத்து கோப்பையில் இதழ்களைச் சேர்க்கவும், அது விஷம் தடவப்பட்டது என்று தடுத்தாளாம் கிளியோபாட்ரா ஆனால் நீயாக இருந்தால் குடிச்சிட்டு சாவட்டும் என்று விட்டு இருப்பாய்தானே ?! பரத் குறும்புத்தனமாக பார்வையோடு கேட்கவும், அதே குறும்போடு, உங்களைக் கொல்ல எதுக்கு விஷம்…..?!

உன் கண்களே போதும் உத்ரா என்னைக் கொல்வதற்கு…பரத் விழிகளில் வழிந்திட்ட அந்த உணர்வை உத்ராவின் விழிகள் தீண்டுமுன், ஆர்ப்பரிப்பாய் உள்ளே நுழைந்தாள் பத்மினி…! தோழியைக் கட்டிக்கொண்டாள் ரொம்ப திரில்லிங்கா இருந்தது உத்ரா இந்த அனுபவம் நகர்ந்துவிட்ட சில நிமிடங்கள் தோழியர் இருவருக்கும் மெல்ல இணக்கத்தை கொண்டு வந்ததா அல்லது உத்ராவின் சிறு மாறுபட்ட மனோபாவத்தாலோ என்னவோ உத்ராவும் பத்மினியைத் தழுவிக்கொண்டாள். அடுத்தி சில மணிநேரங்கள் அவர்களின் பணியினைப் பற்றிய பேச்சிலேயேக் கழிந்தது.

அடுத்தநாள் நாம ராஸ் தீவிற்குச் செல்ல வேண்டும் அதனால, இப்போ சீக்கிரம் போய்த் தூங்கலாம். எல்லாரும் தத்தம் அறைகளுக்கு செல்ல உத்ரா பரத்திடம் இரவு வணக்கத்தை சொல்லிவிட்டு சென்றதை பத்மினி ஆச்சரியத்தோடும் பிரியன் ஆத்திரத்தோடும் பார்த்தான்.




What’s your Reaction?
+1
12
+1
13
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!