Beauty Tips

 மின்னல் போல் பளீச் சருமம்  – ஹனி ஃபேஸ் பேக்




           மின்னல் போல் பளீச் சருமம்

                     ஹனி(தேன்) ஃபேஸ் பேக்

ஃபேஸ் பேக்குகள் சருமத்தை சரிசெய்யவும், புத்துணர்ச்சியூட்டவும் மற்றும் ஆழமாக சுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த  ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை சரி செய்து முகத்தை  பொலிவுடன் இருக்க உதவுகிறது.  இந்த ஃபேஸ் பேக்கை வீட்டிலயே முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி பச்சை தேன்

 ½- எலுமிச்சை சாறு

 2-3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்







தயாரிக்கும் முறை

  • முதலில் ஒரு கற்றாழையை எடுத்து  கத்தியால் கீறி அந்த ஜெல்லை ஒரு ஸ்பூனில் எடுத்து பௌலில் வைத்துக் கொள்ளுங்கள்.

  • 1  தேக்கரண்டி பச்சை தேன், ½ எலுமிச்சை சாறு மற்றும் 2-3 தேக்கரண்டி கற்றாழை ஜெல் எடுத்து பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • கலந்த பேஸ்டை  முகத்தில் பேக் போல் போடவும்.

  • சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.

  • பின்பு ஈரமான கைகளால் சிறிது மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

  • பின் முகத்தை மென்மையாக கழுவுங்கள்.

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தவும். தினமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!