gowri panchangam Sprituality

சனிப்பெயர்ச்சி 2023:சிம்ம ராசி

சனிப்பெயர்ச்சி 2023: விரிவான பலன்களும், பரிகாரங்களும் 

புதிய அனுபவங்கள், சூழ்நிலைகளுக்கு தயாராகுங்கள்!

சிம்ம ராசி அன்பர்களே!

சிம்ம ராசிக்கு ஆறாமிடத்தில் இருந்துவந்த சனி பகவான் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.




பலன்கள்;

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் புதிய துறை சார்ந்த தேடல்களும் உற்சாகமும் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். முயற்சிகளில் புதிய அனுபவமும், புதுமையான சூழ்நிலைகளும் காணப்படும்.

தொலைதூர புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் செல்வாக்கு மேம்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதினால் எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவீர்கள். குழப்பமான சில செயல்களில் தெளிவான முடிவும், மனதை ஒருமுகப்படுத்தும் தன்மையும் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் ஏற்படும்.

நண்பர்கள் வழியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சில நேரங்களில் எளிமையான பணிகளும் கடுமையாக தெரியும். மனதளவில் இருந்து வந்த தயக்க உணர்வுகள் குறையும். செயல்பாடுகளில் விவேகமும், பொறுமையும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.




சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும்.  வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பழைய இடங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விவகாரத்தில் இருந்து வந்த வில்லங்கம் படிப்படியாகக் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும்.

திருமணம்

சனி ராசிக்கு ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து பழகுவது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

மாணவர்கள்

மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் அவ்வப்போது ஏற்படும் மறதி சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும்.

பொருளாதாரம்




தடைபட்ட தனவரவுகள் சிலருக்கு கிடைக்கும். ஞாபக மறதியால் ஒரு சில இழப்புகள் நேரிடலாம். பணம் கொடுக்கல், வாங்கலை தவிர்ப்பது மேன்மையை ஏற்படுத்தும். பண விவகாரங்களில் விதவிதமான அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து பொருளாதார உதவிகளை மேற்கொள்ளவும்.

உடல் ஆரோக்கியம்

தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையற்ற சிந்தனைகளும் கற்பனைகளும் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அலட்சியத்தை காட்டாமல் ஆலோசனைகளை பெற்று செயல்படவும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் செயல்பாடுகளில் புதிய மாற்றம் பிறக்கும். மேலும் மனதளவில் இருந்து வந்த இனம் புரியாத அச்சம் மற்றும் கவலைகள் நீங்கும். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அதிகரிக்கும்.

கவனம்




நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் எதிலும் தனித்து செயல்படுவதற்கான சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் உண்டாகும். பயணம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். தந்தை வழி உறவுகளிடம் அவ்வப்போது சிறு சிறு மனக்கசப்புகள் தோன்றி மறையும்.

வழிபாடு

  • சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட மன ஒருமைப்பாடு அதிகரிக்கும்.

  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரரை வழிபட சிந்தனைகளில் தெளிவும், செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.

  • உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள்.




What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!