Beauty Tips அழகு குறிப்பு

இயற்கையான ஹேர் பேக்

இதுவரைக்கும் இந்த ஹேர் பேக் யூஸ் பண்ணாதவங்க உடனே ட்ரை பண்ணி பாருங்கஉங்க முடி மட்டுமல்ல நீங்களும் சைன் ஆகிடுவீங்க.




இயற்கையான இந்த ஹேர் பேக்  தயாரிக்க

 தேவையான பொருட்கள்

 கற்றாழை-1 (பெரியது)

ஒரு கைப்பிடி வேப்பிலை

கருஞ்சீரகம் -2 டேபிள் ஸ்பூன்

செம்பருத்தி இலை-10

செம்பருத்தி பூ-10

 இவையெல்லாம் அரைக்க தண்ணீருக்கு பதிலாக அரிசி களைந்த தண்ணீர்.




தயாரிக்கும் முறை:

  • கற்றாழையை மேல் தோல் நீக்கி உள்ளிருக்கும் ஜல்லை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் (ஒரு பெரிய மடல் கற்றாழை எடுத்தால் சரியாக இருக்கும்).

  • இத்துடன் கருஞ்சீரகம், வேப்பிலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள்.(அரிசியை பத்து நிமிடம் ஊற வைத்த பிறகு கழுவிய அந்த அரிசியை தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்).




  • இப்போது இதை நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக்கொள்ளுங்கள்.

  • இந்த பேஸ்டை ஒரு பவுலில் மாற்றி ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இல்லாத பட்சத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம். ஷாம்புக்கு பதிலாக தலைக்கு இதை தேய்த்து குளித்தால் முடி வழு வழுப்பாக பட்டு நூல் போல் அவ்வளவு சைனான இருக்கும்.

இந்த பேக்கை தேய்த்த உடனே உங்களுக்கு தலை குளிர்ச்சி ஆவதை நன்றாக உணர முடியும்.  தலை உஷ்ணத்தை குறைத்தாலே முடி வளர்ச்சி அதிகமாகும். அதுமட்டுமின்றி இதில்  சேர்த்து இருக்கும் அனைத்துமே முடி வளர்ச்சி அதிகப்படுத்த கூடிய பொருட்கள் தான்.




What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!