Sprituality

மகரஜோதி ரகசியம்

சபரிமலை மகரஜோதி ரகசியம் இதோ… யார் ஏற்றுகிறார்கள் தெரியுமா? – மகர ஜோதி சரியான நேரம்

 சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14 மாலை 6.30 மணிக்கு நடக்கும். மகர ஜோதி என்றால் என்ன, அது மர்மம் இல்லை, அதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பதை இங்கு பார்ப்போம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி காட்சி மிக முக்கிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள், மகர விளக்கு பெருவிழா மகர ஜோதியுடன் நிறைவடைவது வழக்கம்.




அந்த வகையில் வரும் தை மாதம் தொடங்குகிறது. அதாவது கேரளா முறைப்படி மகர ராசியில் சூரியன் வரும் இந்த மாதத்திற்கும் மகர மாதம் என்று பெயர். இந்த மாதத்தின் முதல் நாள் சபரிமலையில் மகர ஜோதி காட்சி கிடைப்பது வழக்கம்.

பந்தளத்தில் இருந்து கிளம்பும் ஆபரணங்கள்:
ஐயப்ப சுவாமி பந்தளம் அரண்மனையில் வளர்ந்தவர். அதன் பின்னர் அவர் சபரிமலையில் யோக நிலையில் அமர்ந்து உள்ளார். இந்நிலையில் ஆண்டுதோறும் அவரை காண பந்தள மகாராஜா சென்று வந்தார். அவர் செல்லும் போது பந்தளத்திலிருந்து ஆபரணங்கள் எடுத்து சென்று அதை ஐயப்பனுக்கு அணிவித்து வழிபடுவது வழக்கமாக வைத்திருந்தார்.




பந்தளத்திலிருந்து 13ஆம் தேதி பகல் 1 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கக் கூடிய ஆபரணங்கள் கிளம்பும். 14ஆம் மாலை ஆபரணம் சபரிமலை சென்றடையும். ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட நிலையில் மகர ஜோதி காட்சி கிடைக்கும்.

அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், சபரிமலை ஐயப்பனுக்கு மகரஜோதி தினத்தில், பந்தளத்தில் இருந்து வரும் ஆபரணங்களை அணிவிப்பது வழக்கம்.

மகர ஜோதி:


அன்றைய தினம் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி காட்சி கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தை மாதம் முதல் நாள் மாலை 6.30 மணி அளவில் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். இதைப் பார்க்க கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவது வழக்கம்.

மகர ஜோதி உண்மை:





சபரிமலைக்கு எதிரே உள்ளது கொசுபம்பா எனும் ஊர். இந்த ஊருக்கு அருகில் உள்ள பொன்னம்பலமேடு மலைப்பகுதியில் தான் மகர ஜோதி காட்டப்படுகின்றது.

மகர ஜோதி நேரத்தில் இங்குள்ள பெரிய மேடையின் மீது கற்பூரங்களை கொளுத்தப்படுகிறது. இதுவே மகர ஜோதியாக தெரிகிறது. இதனைத் தான் ஐயப்ப பக்தர்கள் மகர ஜோதியாக வணங்குகின்றனர்.

பின்னர் இது ஈர சாக்கு பைகளால் அணைக்கப்பட்டு, மீண்டும் அந்த கற்பூரத்தை ஏற்றி மூன்று முறை இந்த தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தரப்படுகிறது.

மனிதர்கள் தான் காரணம்
இந்த மகர ஜோதியை கேரளாவை சேர்ந்த மின் ஊழியர்கள் தான் ஏற்றுவதாக கூறப்படுகிறது. இந்த பொன்னம்பல மேட்டுக்கு அருகில் தான் கொச்சபம்பா மின்னேற்று நிலையம் உள்ளது. இங்குள்ள அணையில் இருந்து நீர் மின்சாரம் தயாரிக்கப்பட்டு கேரளா மக்கள் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகின்றது.




இந்த கொச்சபம்பா வழியாக தான் பொன்னம்பலமேட்டில் செல்ல முடியும். இந்த பகுதி கேரளா வனத்துறை மற்றும் கேரளா காவல்துறையினரின் வசம் உள்ளது. அதனால அந்நியர்கள் யாரும் இந்த பகுதிக்கு பிரவேசிக்க முடியாத அளவிற்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!