Samayalarai

பச்சை பயறு வடை

பச்சை பயறு வடை

WhatsApp Image 2022-11-01 at 13.59.27.jpg




தேவையான பொருட்கள்

பச்சை பயறு -1 கப்

பச்சை மிளகாய் -3

பூண்டு -4 (தோல் உரித்தது)

இஞ்சி -2 துண்டு

சீரகம் -1 ஸ்பூன்

வெங்காயம் -2 கைப்பிடி

உப்பு -தேவையான அளவு

மல்லி இலை- சிறிதளவு

 

செய்முறை விளக்கம்




  1. முதலில் ஒரு கப் பச்சைப்பயிறை தண்ணீரில் 5 மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்து விட வேண்டும்.

  1. ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகத்தை  கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும்  அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பின்பு மல்லி இலையை போட்டு பிசைந்து கொள்ளுங்கள்.

  1. நமக்கு தேவையான மாவு தயாராகி விட்டது.  மாவை எடுத்து மசால் வடை போல் தட்டி அப்படியே எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான பச்சை பயறு வடை தயார்.

டிப்ஸ்:




  • வடை மாவு பக்குவம் கொஞ்சம் நீர்த்து விட்டால் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

  • இந்த பச்சை பயிரை ஊற வைத்து முளை கட்டிய பின் அதே செய்முறையில் செய்தால் புரோட்டீன் சத்து மிக அதிக அளவில் கிடைக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
Anonymous
Anonymous
1 year ago

Visitor Rating: 3 Stars

0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!