Samayalarai

பால் பன்

தேவையான பொருட்கள்:

மைதா -1  கப்

சர்க்கரை-1  கப்

ஏலக்காய் -2

தயிர்- ¼  கப்

சோடா உப்பு- ¼ ஸ்பூன்

 நெய்-1 ஸ்பூன்

உப்பு -1 சிட்டிகை

செய்முறை விளக்கம்:




  • முதலில் சர்க்கரையில் இருந்து 3 ஸ்பூன் மட்டும் எடுத்து ஏலக்காய் விதைகளையும் சேர்த்து மிக்ஸியில் பவுடர் போல் அரைத்துக் கொள்ளவும்.

  • பின்பு மைதா,  ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை பவுடர், ஒரு ஸ்பூன் நெய்,  தயிர்,  சோடா உப்பு ஆகிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கிளறி மிருதுவாக மாவு வரும்வரை பிசைந்து வைத்துக் கொள்ளவும். .

  • அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற விட்டால் நன்றாக இருக்கும்

சர்க்கரைப் பாகு

  • மீதமுள்ள சர்க்கரையில் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறு கம்பி பதம் வரும் வரை மட்டும் கொதிக்க விட்டால் போதுமானது.

பன் தயார் செய்தல்:

  • எண்ணையை மிதமான சூட்டில் வைத்து மாவுகளை சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.




  • அனைத்து பக்கமும் சிவந்தவுடன் பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்தால் சுவையான பால்பன் தயார்.

 டிப்ஸ்:

  • சர்க்கரைப்பாகு பிசுபிசுப்பு இருந்தால் போதுமானது. ( இரண்டு விரல்களில் நடுவில் வைத்து பார்த்தால் பிசுபிசுப்பு போல் தெரியும் அது இருந்தாலே போதுமானது)

  • மாவை கண்டிப்பாக அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்தால் மிருதுவாக இருக்கும்.

  • எண்ணெயயில்  பொரிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து பொரிதல் வேண்டும்.




 

 

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!