Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது – 7

7

 

அட சாமி இது என்ன ?எங்கே கிளம்பிட்டீங்க ? ” சுகந்தி மாடசாமியை வியப்புடன் பார்த்தாள் .

.

” ட்யூட்டிக்குத்தான் டாக்டர் .இனி வெளியே போகும் போது , முக்கியமாக ஆஸ்பத்திரியில் இது போல் முக கவசம் அணிந்து கொள்ள சொல்லியிருக்கிறார் உங்கள் அப்பா ”

 

கொரோனா இந்தியாவிலும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவதுறை இருக்கும்  சில நாட்களாக , சுந்தரபுருசன் இப்படித்தான் அனைவருக்கும் ஜாக்கிரதை சொல்லிக் கொண்டிருக்கிறார் .அவரும்  முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்றுகிறார் .

 




” நீங்கள் எப்போது ட்யூட்டிக்கு வருகிறீர்கள் டாக்டர். ? ”

 

சுகந்தியின் முகம் இறுகியது .அவள் இரண்டு நாட்களாக விடுமுறையில் இருக்கிறாள் .

 

” இன்னமும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறேன் சாமி ”

 

” நீங்கள் இந்த வேலையை விட்டு விடலாமே டாக்டர் ? ”

 

” ஏன் ? ”

 

” வந்து …அங்கே நி…நிலைமை சரியில்லையே , டாக்டர் மேடமும் , அவர் மகனும் சேர்ந்து உங்களை வேண்டுமென்றே …”

 

” ப்ச் , அதெல்லாம் ஒன்றுமில்லை சாமி .மேடமிற்கும் எனக்கும் எப்போதும் இருக்கும் பிரச்சனைதான் . நான் …எ…எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாததால்தான் லீவ் எடுத்திருக்கிறேன் ”

 




” உடம்பு சரியில்லையா ? என்னம்மா ?காய்ச்சல் எதுவும் இருக்கிறதா ?” தந்தையின் கேள்விக்கு விடை சொல்லத் தெரியாமல் விழித்தாள் . மகளின் நெற்றியை தொட்டுப் பார்த்தவரிடம் சிறு பதட்டம் தெரிந்தது.

 

” அப்பா …அதெல்லாம் ஒன்றுமில்லைப்பா .சும்மா அசதிதான் .இரண்டு நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் ”

 

” ஓ…சரிம்மா .இரண்டு நாட்களில் வேலைக்கு போய்விடுவாய்தானே ? ”

 

” சார் ,  உங்கள் மகளுக்கு அங்கே மருத்துவமனையில் நிறைய பிரச்சனைகள் சார் ”

 

” சும்மாயிருங்க சாமி .அதெல்லாம் ஒன்றுமில்லைப்பா .நான் சமாளித்துக் கொள்வேன் ”

 

” ம் …பிரச்சனையில்லாத இடம் எது மாடசாமி ?.எந்தப் பிரச்சனையையும் சமாளிக்கும் திறன் கொண்ட பாரதியின் புதுமைப்பெண்ணாகத்தான் என் மகளை நான் வளர்த்திருக்கிறேன் .அப்படித்தானேம்மா ? ”

 

அப்பாவின் கேள்விக்கு மகளுக்கு தானாக தலை நிமிர்ந்துவிட்டது .” அப்படியேதான்பா ”

 

இந்த நிமிர்வுடன்தான் மறுநாள் மருத்துவமனை சென்றாள் .

 

” எக்ஸ்டிரா வேலை செய்வதென்றால் முதலிலேயே சொல்லிவிட வேண்டும் சார் .திடீரென்று நள்ளிரவு வரை இரு என்று ஒரு பெண்ணைப் பார்த்து கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது .நைட் ஷிப்ட் தவிர முன்னறிவித்தல் இல்லாத இரவு பணிக்கு பெண்கள் கட்டுப்பட வேண்டியவில்லை .இது உங்கள் மருத்துவமனை ரூல்ஸ் புக்கிலேயே உள்ளது .போய் படித்து பாருங்கள் ”




”  சகாயம் சார் .குப்பை டிபார்ட்மென்ட் உங்களோடது .டாக்டர் சாரிடம் இனி தினமும் கணக்கு காட்ட வேண்டியது நீங்கள் .கவனம். இனி சகாயம் சாரிடமே விபரங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் சார் .எனக்கு டாக்டர் ஷியாமுடன் ஒரு ஆபரேசன் ”

 

இப்படி நிமிர்வாக , குற்றக் குறுகுறுப்பு குறைந்து பதில் சொல்ல பாரதியின் கவிதைகள் துணையிருந்தது அவளுக்கு .

 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்;

அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்

உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! ” 

 

” இப்படி பாரதியார் சொல்லியிருக்கிறார் .நம்மைப் போல் வேலைக்கு போகும் பெண்களுக்கு நிமிர்ந்த நன்னடையும் , திமிர்ந்த ஞானச்செருக்கும் நிச்சயம் வேண்டும் . அப்போதுதான் சில குப்பைகளிடமிருந்து தப்பிக்க முடியும் ” புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த தாரிணியிடம் தேவைக்கு அதிகமான குரல் உயர்வுடன் சுகந்தி பேசிக் கொண்டிருந்ததை கேட்டபடி இறுகிய முகத்துடன் அவளைக் கடந்தான் சாத்விக் .

 




சிறு தவறான புரிந்து கொள்ளல் .அதற்காக நீ என்னை அப்படிக் கேட்பாயா ? கடந்த நான்கு நாட்களாக  அவள் மனதிற்குள் புயலுக்கு முன்னதான ஊழிக்காற்றின் ” உய் ” சத்தம் சதா .

 

குப்பைகளை அள்ளிப் போடச் சொல்லி பழி வாங்கியவன் , கிடைத்த தனிமையில் அல்லது ஏற்படுத்திக் கொண்ட தனிமையில் அவளிடம் கேட்ட கேள்வி …

 

” வரும் ஞாயிறு பெரிய ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறேன் .வருகிறாயா ? ”

 

எவனோ ஒருவன் இந்தக் கேள்வி கேட்டிருந்தானானால் கன்னம் பெயர்ந்திருக்கும் .ஆனால் அடுத்தொருவளுடன் தவறான தொடர்புக்கு முயன்றானென்ற எண்ணங்களிருந்த நிலையிலும் அவன் மீது தீராக் காதலுடன் இருந்தவளை , அந்தக் காதலுக்குரியவனே கேட்கும் பொழுது ….

 

” சை …” என்ற ஒற்றையெழுத்து அருவெறுப்புடன் அவனை விட்டு தள்ளியிருக்க முனைந்தாள் .இன்றிலிருந்து தந்தையின் அறிவுறுத்தலோடு , அந்த மகா கவியின் வார்த்தை துணைகளோடு சாத்விக்கின் கோணல் பாதைகளை வெல்ல துணிந்திருக்கிறாள் .

 

” என்ன பேபி ? யாருக்கோ பயங்கர புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தாய் போல ? ” கிண்டலாக கேட்ட சேதுபதியை கேள்வியாக ஏறிட்டாள் .

 




” என் ரூம் வாசலில்தான் உன் புத்திமதி மழை சத்தமாக பொழிந்தது. கொஞ்சம் ரூமுக்குள் சாரல் அடித்ததே ”

 

” ஆமாம் அங்கிள் .சும்மா பொதுவாக தாரிணிக்கு உத்வேகம் சொல்லிக் கொண்டிருந்தேன் .அவள் புதிதாக வேலைக்கு சேர்ந்தவள் .அதனால் ….”

 

” ம் …ஆனால் அவளுக்கென்பது போல் தெரியவில்லையே .இங்கே உனக்கு எதுவும் பிரச்சனையா பேபி ? ”

 

சுகந்தி மௌனமாக சேதுபதிக்கு காய்ச்சல் செக் செய்தாள் .

 

” ஸ்வேதா அகம்பாவி , திமிர் பிடித்தவள் , தற்பெருமையும் உண்டு .ஆனால் ஒழுக்கம் அவளுக்கு முக்கியம் .அவளது கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தில் ஒழுக்கக் குறைபாடு வர வாய்ப்பில்லை .அவள் ஒழுக்கக் குறைவை மன்னிக்கவே மாட்டாள் .அது பெற்ற மகனிடமேயானாலும் …” சேதுபதியின் கூர்பார்வை சுகந்தியின் மனதை துளைத்து உண்மையறிய முயன்றது .

 

கலங்கி வடியத் துடித்த  கண் நீரை கட்டுப்படுத்தி நின்றாள் அவள் .

 

” உமிழ்ந்து தள்ளும் பெண்ணறம் என்னவாயிற்று பேபி ?ஏனிந்த கண்ணீர் ? ”

 




” இது தோற்றுவிட்ட அன்பின் எச்சம் அங்கிள் ” சொல்லிவிட்டு மேலும் அங்கு நிற்க முடியாமல் வேகமாக வெளியேறினாள் .

 

அடுத்த அரை மணியில் ” அங்கிளின் அறைக்கு போயிருந்தீர்களா டாக்டர்  ? ” எனக் கேட்டபடி வந்து நின்றான் சாத்விக் .

 

அதற்கென்ன …என்பது போல் அலட்சியமாக தலை சிலுப்பி நின்றவளைப் பார்த்து தலையசைத்தான் .

 

” நான் இப்போதுதான் போய்விட்டு வருகிறேன் .வண்டி வண்டியாக அவரிடம் திட்டு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன் ”

 




அங்கிள் எனக்காக அவருடைய செல்ல பையனை திட்டினாரா ? குழப்பத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவள் மேலும் குழம்பினாள் .

 

திட்டு வாங்கியவனின் முகமா அது ? மனோகரமான முறுவல் நிறைந்து மலர்ந்திருந்தது அவன் முகம் .

 

What’s your Reaction?
+1
6
+1
6
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!