Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 21

21

” அதோ நதியின் மையத்தில் ஒரு பாறை தெரிகிறேதே …அது பார்க்க சிறியதாக தெரிந்தாலும் ,நீருக்கடியில்  மிக நீளமானது .எங்கள் சிமெண்ட் பாக்டரியின் பின்புறம் வரை இந்த பாறை நீண்டு இருக்கிறது ….”

” ஓ…இங்கே ஓடை போல் ஓடும் நீர்தான் பேகடரியின் பின்னால் ஆறு போல் விரிந்திருக்கிறதா …? “




” ஆமாம் …நாங்கள் சிறு பிள்ளையாக இருந்த போது இந்த ஓடை இன்னமும் அகலமாக இருந்த்து .லீவ் நாடகளில் நாங்கள் இங்கே …பண்ணை வீட்டிறகு வந்து சமைத்து சாப்பிட்டு , இந்த ஆற்றில் குளித்து…ம் …அது ஒரு அருமையான காலம் ….” சிவபாலனின் குரல் நெகிழ்ந்திருந்த்து .

” நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது பெரியவர்களாக வளர  நினைப்போம் .பெரியவர்களானதும் சிறு பிள்ளையாகவே இருந்திருக்கலாமே என்று நினைப்போம் .இது எல்லோர் வாழ்விலும் நடப்பதுதானே சிவா …”

” இல்லை கைலாஷ் …என் வாழ்க்கை வித்தியாசமானது .நான் அப்போதும் …இப்போதும் அந்த சிறுபிள்ளை பருவத்திலேயே இருந்து விட வேண்டுமென்றுதான் நினைத்தேன் .ஏனென்றால் அந்த சிறு பிராயம்தான் என்னையும் , ஜீவிதாவையும் ஒன்றாக பேச ..பழக அனுமதித்திருந்த்து .”

” ம் …இன்ட்ரெஸ்டிங் ….”

” கொஞ்சம் பெரிய பிள்ளைகளானதும் நாங்கள் கண்கொத்தி பாம்பாய் கவனிக்கப்பட்டோம் .எங்களது தனிமை பொழுதுகள் எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டு விட்டன .எங்களது தோழமை எள்ளி நகையாடப்பட்டது .தடுக்கப்பட்டது ….அதனால்தான் நான் மீண்டும் அந்த குழந்தை பருவத்திற்கே போய்விட ஆசைப்படுகிறேன் .”

இதே பாறை ….எங்கள் பேக்டரி பின்னால் இருக்கிறதே …நானும் ஜீவாவும் ஒரு சின்ன பரிசல் வைத்துக் கொண்டு அந்த பாறைக்கு போய் உட்கார்ந்து கொள்வோம் .அங்கேதான் எங்கள் பாடங்களை படிப்போம் .சுற்றிலும் தண்ணீர் இருக்க , அந்த அமைதியான , குளிர்ந்த சூழல் எங்களது தெளிவான கல்விக்கு மிக உதவியது ….”

” ம் …இந்த மாதிரி சூழல்களெல்லாம் என்னை போல் சிட்டி பிள்ளைகளுக்கு கிடைக்காது ….”




” உண்மைதான் இயறகையும் , நட்பும் பிண்ணி பிணைந்திருந்த்து எங்கள் குழந்தை பருவம் .ஜீவாவிற்கு அந்த பாறை மீது ஒரு சிறு கோவில் கட்ட வேண்டுமென்று ஆசை .அதுவும் சிவன் கோவில் .எனது பெயரை வைத்து அவள் அந்த முடிவை எடுத்திருக்கலாம் .சிவன் எனது இஷ்ட தெய்வமென்பாள் அடிக்கடி .இங்கே குட்டியாக ஒரு சிவன் கோவில் கட்ட போகிறேன் பாலா .இப்போது அல்ல …நான் பெரியவளானதும் .ஏனென்றால் அந்த கோவில் முழுக்க ….முழுக்க என் சம்பாத்தியத்தில் கட்டப்பட ஙேண்டும் என்றாள் .நானும் உன்னோடு சேர்ந்து கொள்கிறேனே ஜீவா …நாம் இருவரும் நமது சம்பாத்தியத்தில் அந்த சிவனுக்கு இங்கே ஒரு கோவில் கட்டுவோம் …இப்படி பேசி முடிவு செய்து வைத்திருந்தோம் ….”

சிவபாலனின் உள்ளார்ந்த பேச்சுக்களை கைலாஷ் விழி விரித்து கேட்டுக் கொண்டிருந்தான் .” உனது அனுபவங்கள் அற்புதமானவைகளாக இருக்கின்றன சிவா …”

” கொஞ்சநாள் முன்பு வரை எனது வாழ்வும் அற்புதமானதாகத்தான் இருந்த்து கைலாஷ் ….”

” கொஞ்சநாளென்றால் …நான்கு வருடம் முன்பு வரையா …? “

சிவபாலன் அமைதியானான் .

” இவ்வளவு தோழமையாக பழகிவிட்டு ஏன் ஜீவிதாவை விட்டு விட்டாய்  சிவா …? “

” ப்ச் ..சூழ்நிலை …”

” முதலில் இருந்தே உங்களது வீட்டில் உங்களுக்கு  மிக சாதகமான சூழ்நிலை கிடையாதே . நான் சௌதாமினி ஆன்ட்டியை சொல்கிறேன் ….”

” சௌதாமினி அத்தையை எப்போதும் எங்கள் எதிரியாக நான் நினைத்ததில்லை கைலாஷ் .இப்போதும் கூட .அவர்களை சமாளிக்கும் வழியை நான் அறிவேன் …” 

” தென் …சமாளிக்க வேண்டியதுதானே …அதை விட்டு கட்சி மாறவேண்டிய அவசியம் …ஐ மீன் வீடு மாற வேண்டிய அவசியம் என்ன ?

சிவபாலன் மீண்டும் மௌனமானான் .




” சொல்ல மாட்டாய்  ….?நீ  பரவாயில்லை .ஜீவிதா இந்த அளவு கூட வாயை திறக்க மாட்டாள் .நன்றாக ஜோடி சேர்ந்திருக்கிறீர்கள் ….” சலித்துக்கொண்டான் .

” உனக்கு ஜீவிதா மேல் நிறைய அக்கறையா கைலாஷ் ….? உன்னுடைய இந்த பரிதவிப்பை நான் எப்படி எடுத்துக்கொள்ள …? ஒரு தோழனுடையதாகவா …இல்லை அதற்கும் மேலே …” சிவபாலன் இழுத்துக் கொண்டிருக்கும் போதே கைகளை மேலே உயர்த்தி சோம்பல் முறித்தபடி எழுந்து விட்டான் கைலாஷ் .

” உடம்பெல்லாம் வலி சிவா .நான் ஒரு அரைமணி நேரம் உள்ளே படுக்கிறேன் ….” போய்விட்டான் .

————————

” உன் பாலாவின் வாயை கொஞ்சம் கிளறி பார்த்தேன் ஜீவிதா .மனுசன் சரியான கல்லுளிமங்கன் .வாயை திறப்பேனா என்கிறார. …”

” உன்னை யார் அவரிடம் பேச சொன்னது …? “

” ஈஸி ஜீவிதா .உன்னை விட்டு அவர் உன் தங்கையை திருமணம் செய்ததற்கான காரணம் எனக்கு தெரியவேண்டாமா …? அதறகுத்தான் ….”

” அது எதறகு உனக்கு …? அதெல்லாம் சொல்ல முடியாது …? “

” சொல்ல முடியாதுன்னா ….அப்போ அந்த காரணம் உனக்கு தெரியுமா …? ” கைலாஷின் விழிகள் ஜீவிதாவை கூறு போட்டன .

” எ…எது …அ….அதெல்லாம் எனக்கு தெரியாது …நீ போ ….” ஜீவிதா வேகமாக வெளியேறினாள் .

” ம் …உனக்கு சிவாவே தேவலாம் .கொஞ்சம் கொஞ்சமாவது பேசினார் ….ஆனால் நான் உண்மையை தெரிந்து கொள்ளாமல் விடமாட்டேன் ….” கைலாஷ் சபதம் போல் எடுத்துக் கொண்டான் .

க்ளினிக்கில் இருந்த பேஷனட்ஸ் உடம்பில் நல்ல முன்னேற்றம் தெரிய , திருப்தியானாள் ஜீவிதா .

” அப்புறம் …ஜீவிதா ..அன்னைக்கு நம்ம சிவா …” என்று துருவல் பார்வையுடன் வந்த கைலாஷை முறைத்தாள் .

” நீ ஒரு தடவை எல்லா பேஷன்ட்ஸையும் செக் பண்ணிட்டு , வீட்டுக்கு அனுப்பலாங்கிறவங்களை அனுப்பு .நான் கொஞ்சம் ப்ரெஷ் அப் பண்ணிட்டு வர்றேன் ….” மாடியேறினாள் .

தனக்கென மாடியில் இருந்த தனி அறையில் குளித்து வேறு உடையணிந்தாள் .மனதை அழுத்திய பாரம் இறங்கி விட்டதால் , முகம் இயலபாகி ஜொலித்தது .தனது சுருண்ட கூந்தலை அழகாக காதோரமும் , முன் நெற்றயிலும் இழுத்து விட்டுக் கொண்டவள் தன்னைத்தானே கண்ணாடியில் ரசித்தாள்.பாலாவை பார்க்கனும் வாய் விட்டு சொல்லிக் கொண்டாள் .




புத்துணர்ச்சியுடன் படியிறங்கி வந்தாள் .” இப்படி பளிச்னு வந்து நிற்கும் போது தானாக மனசு லேசாகுதும்மா …” பாட்டி ஒருவர் அவள் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார் .

” இப்போ உங்க பேத்திக்கு எப்படி இருக்குது பாட்டி …? “

” நல்லா மூச்சு விடுறாம்மா .வாந்தியெல்லாம் நின்னுடுச்சு .டாக்டர் தம்பி எங்களை வீட்டிக்கு போக சொல்லிட்டார் .கிளம்பிட்டோம்மா …”

” போயிட்டு வாங்க பாட்டி .இரண்டு நாள் கழித்து ஒரு தடவை வந்து செக் பண்ணிக்கோங்க …” பேசியபடி நிமிர்ந்தாள் .சிவபாலன் சற்று தள்ளி நின்று இவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் .அவசரமாக பாட்டியின் மருந்தை செக் செய்து அனுப்பினாள் .

குளிர் தடவும் தென்றலாய் மித்ந்து  நடந்து சிவபாலனின் அருகே போய் நின்று என்னவென்று கண்ணால் கேட்டாள் .

” ஏய் …நாங்கெல்லாம் இங்கே நேற்றிலிருந்து குளிக்காமல் , ஷேவ் செய்யாமல் இப்படி அழுக்காக நின்று கொண்டிருக்கிறோம் .நீ  மட்டும் இப்போதுதான் பூத்த பூ மாதிரி குளித்து முடித்து வந்து நிற்கிறாயே …நியாயமா இது …? ” ஐஸ்க்ரீமை ரசித்து உண்ணும் குழந்தையாய் அவன் கண்கள் சொக்கிக் கிடந்தன .

” பொய் ….” சிணுங்கினாள் ஜீவிதா .

” என்ன பொய் …? “

” தினமும் ஷேவ் பண்ணகிறீர்களாக்கும் நீங்கள் …? ” ஜீவிதாவின் விழிகள் அடர்ந்திருந்த அவன் தாடியில் பதிந்த்து .வேண்டாமென ஜாடை செய்த்து .

” ஷேவ் பண்ணிடவா …? ” தன் தாடியை வருடியபடி கேட்டான் .

கண்களை அகற்றி …உதட்டை குவித்தாள் …” ம் …எனக்கு பிடிக்கலை …” மழலையாய் கொஞ்சினாள் .

” இதோ கிளம்பிட்டேன் …” பரபரப்பாய் கிளம்பியவனை மறையும் வரை ரசித்தபடி நின்று கொண்டிருந்தாள் .

” மேடம்  கொஞ்சம் ரூம்ல போய் உட்கார்ந்து பேஷன்ட்ஷை கவனிச்சீங்கன்னா , நான் போய் பின்னால் அந்த கால்வாயில் குளித்து விட்டு வந்து விடுவேன் ….” அவள் முகத்தின் முன்கை கையை ஆட்டி அவளை மீட்ட கைலாஷ் , பணிவு போல் கை கட்டிக் கொண்டான் .




” கைலாஷ் உதை வாங்க போகிறாய் …? போ …போய் குளித்து விட்டு வா …” ஜீவிதா விரலாட்டி அவனை எச்சரித்து விட்டு உள்ளே போய் அமர்ந்தாள் .ஜெயந்தியை வீட்டிற்கு போய் குளித்துவிட்டு வா என அனுப்பி வைத்தாள் .தனது ரோலிங் சேரில் சுழன்றபடி சிவபாலனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் .

சிவபாலன் வீட்டிற்கு போய் குளித்து ஷேவ் செய்து , ஜீவிதாவின் பாலாவாக திரும்பி வருவதற்குள் , அந்த ஊரில் இருந்த அடுத்த மீத்தேன் கிணற்றில் கசிவு ஏற்பட்டிருந்த்து .அந்த கிணறு இருந்த பகுதியில் வசித்த மக்கள்வாந்தி மயக்கமென  பாதிக்கப்பட்டு ஜீவிதாவின் க்ளினிக்கிற்கு கொண்டு வரப்பட்டனர் .

மீண்டும் க்ளினிக் புலம்பல்களாலும் , கூச்சல்களாலும் நிரம்ப ஆரம்பித்தது .

What’s your Reaction?
+1
9
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
ஆயிஷா. கே
ஆயிஷா. கே
3 years ago

அடுத்த ஆட்டம் தொடங்கிவிட்டது… வாழ்த்துகள் மா

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!