Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 20

20

 

 

 

“நாம் கோவிலில் வைத்து திரும்பவும் தாலி கட்டிக் கொள்ளலாமா சகி..?” முணுமுணுப்பாய் அவள் தோள்களில் தன் நாடி பதித்து கேட்டான் பாலகுமரன்..
சஸாக்கி திடுக்கிட்டு திரும்பி அவனை பார்த்தாள்.. அவள் கண்கள் பௌர்ணமிகளாயின.. பின் சுருங்கி கருவிழிகள் அங்குமிங்கும் அசைந்து துடித்தன..
“ஈஸி டியர்.. எதற்கிந்த அதிர்ச்சி முன்பு செய்யாததையா.. புதிதாக செய்ய போகிறோம்..?” குறும்பாய் கேட்டு கண்சிமிட்டினான்..
சஸாக்கி இதழ் மடித்து கடித்தாள்.. “தள்ளி உட்காருங்கள்..” முணுமுணுத்தாள்..
“ஏன் சகி.. நான் என் மகனை கொஞ்சிக் கொண்டிருக்கிறேன்..” அவள் மடியில் இருந்த மகனின் கன்னத்தை வருடினான்..




என் மேல் உரசுவதற்கு மகன் ஒரு சாக்கு இவனுக்கு.. நினைத்த சஸாக்கியின் கன்னங்கள் சிவந்தன..
“பாலா எல்லோரும் இருக்கிறார்கள்.. ப்ளீஸ் கொஞ்சம் தள்ளுங்கள்..”
அவர்கள் அப்போது ஹால் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களென்றால்.. அபிராமியும், அன்னமும் டிவியில் ஓடிக் கொண்டிருந்த ஏதோ ஒரு சமையல் நிகழ்ச்சியை பார்த்தபடி தங்களுக்குள் பேசியபடி இருந்தனர்.. கார்த்திகா தன் போனில் குறைந்த குரலில் திவாகரனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் அல்லது கொஞ்சிக் கொண்டிருந்தாள்..
சரண்யா அந்த ஹால் ஓரமாக இருந்த ஷோகேஸ் திறந்து பொம்மைகளை தூசு தட்டி திரும்ப உள்ளே அடுக்கி என வேலைக்கார பெண்ணை வேலை ஏவி கண்காணித்தபடி நின்று கொண்டிருந்தாள்..
அப்போதுதான் ஆபிசிலிருந்து வந்த பாலகுமரன் உடையை கூட மாற்ற போகாமல் தனக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்ட காபி கப்பை கையில் எடுத்துக் கொண்டு சஸாக்கி அருகில் உட்கார்ந்து கொண்டான்..
குழந்தையை பார்க்கும் சாக்கில் சஸாக்கியை சீண்டிக் கொண்டிருந்தான்..
“என்ன ஷாம்பு போட்டாய் சகி..? இப்படி மணக்கிறாய்..?” சோபாவில் அவளை சுற்றி தன் கைகளை போட்டு வளையமாக்கி அவளை கைக்குள் வைத்துக் கொண்டு, இதை கேட்டான்..
சஸாக்கி நெளிந்தாள்.. “பாலா.. ப்ளீஸ்..”
“இப்போது மிக அழகாக தெரிகிறாய் டார்லிங்..” குவிந்த அவன் உதடுகள் நிச்சயம் தன் கன்னத்தில் தான் வந்து நிற்க போகின்றன என சஸாக்கி உறுதியாய் நினைத்தாள்..
ஆனால்..




“டேய்..” பாலகுமரனின் காதுகள் திருகப்பட்டன.. அபிராமி அவர்கள் எதிரில் நின்றிருந்தாள்..
“என்னடா பண்ற..?”
“சஸியை பார்த்துட்டு இருக்கேன்மா..”
“என்னது..?”
“ரூபனை.. சசிரூபனை.. பார்த்துட்டு இருக்கேன்மா.. துறுதுறுன்னு எப்படி கையை காலை ஆட்டுறான் பாருங்க..”
பாலகுமரன் கொஞ்சமும் நகர்ந்து கொள்ளவில்லை.. இன்னமும் சஸாக்கியை நெருங்கிக் கொண்டான்..
“ம்.. நம்பிட்டேன்டா மகனே.. போ.. போய் ப்ரஷ்ஷாயிட்டு வா..”
“போறேன்மா.. நீங்க உட்காருங்க.. கொஞ்சம் பேசனும்..”
“என்னடா..?”
அப்போதுதான் தான் மீண்டும் சஸாக்கியை திருமணம் செய்து கொள்ள நினைப்பதை தாயிடம் சொன்னான்..
முதலில் சிறிது யோசித்த அபிராமி பிறகு தலையசைத்து விட்டாள்..
“நம் தொழில் தொடர்பாளர்கள், பேக்டரி ஊழியர்கள் எல்லோருக்கும் சஸாக்கியையும், சசிரூபனையும் அறிமுகம் செய்ய வேண்டுமே.. சிம்பிளாக தாலி கட்டிக் கொண்டு கிரான்டாக ஒரு ரிசப்சன் வைத்து விடலாம்..”
மகனின் திருமணத்தை காணும் ஆவல் அன்னைக்கு இருக்கும்தானே.. மிக உற்சாகமாக திருமண ஏற்பாடுகளை சொல்ல ஆரம்பித்தாள் அபிராமி..
“ஹை அண்ணனுக்கு கல்யாணமாம்மா..? எங்கே புடவை வாங்கலாம்..? என்னென்ன நகை வாங்கலாம்..? உடனே ஒரு லிஸ்ட் ரெடி பண்ணுங்க..” கார்த்திகா பந்தாய் துள்ளினாள்..




அந்த துள்ளலில் சந்தேகமுற்ற அபிராமி.. “இந்த புடவை, நகையெல்லாம் யாருக்கு கார்த்தி..?” என்றாள்..
“எனக்குத்தான்மா.. நான்தானே தோழிப்பெண்ணாக சஸாக்கி பக்கத்தில் மேடையில் நின்றாக வேண்டும்..”
“அப்படி எந்த சட்டமும் கிடையாது கார்த்தி..” பாலகுமரன் புன்னகைத்து கூற..
“இல்லை இல்லை.. அதுதான் சம்பிரதாயம்..” என அடித்து பேசி ஒரு புது சட்டத்தை இயற்றினாள்..
தொடர்ந்து சேலைகளையும், நகைகளையும் வரிசையாக லிஸ்ட் போட ஆரம்பித்து அபிராமியிடம் சொல்ல, அவள் பேப்பரில் வரிசையாக எழுதிக் கொண்டிருந்தாள்.. பேசி முடித்து அம்மாவின் கையிலிருந்து பேப்பரை வாங்கி பார்த்த கார்த்திகா கத்தினாள்..
“அம்மா என்ன இது.. நான் சொன்னதை விட்டுட்டு வேறு என்னென்னவோ எழுதி வச்சிருக்கீங்க..?”
“நீ சொன்னதை நான் எங்கேடி எழுதினேன்..? இது சஸாக்கிக்காக எழுதிய லிஸ்ட்.. கிளம்பு நாம் போய் இதெல்லாம் வாங்கி வர வேண்டும்..”
கார்த்திகா எழுந்திரிக்காமல் அந்த லிஸ்டிலிருந்த வற்றை எண்ண தொடங்கினாள்.. லிஸ்ட் போக போக அவளது உதடு பிதுங்கியது..
“எதுக்கும்மா இத்தனை வெரைட்டி அயிட்டம்ஸ்..?”
“கல்யாணப் பெண்ணிற்கு செய்வதுதானே கார்த்தி.. நாம் வழக்கமாக செய்வதில் பாதிதானே எழுதியிருக்கிறேன்..”




கார்த்திகா பதில் சொல்லாமல் தீவிர யோசனையில் ஆழ்ந்தாள்..
“அம்மா இவள் ஏதோ குறுக்குவாட்டில் யோசிக்கிறாளென நினைக்கிறேன்..” பாலகுமரன் சந்தேகமாக தங்கையை பார்த்தான்..
“ச்சு.. சும்மாயிருங்கள் அண்ணா.. இத்தனை சேலைகள், நகைகள் கிடைக்கும் போது, நானும் திரும்பவும் கல்யாணம் செய்து கொள்ளலாமா என யோசிக்கிறேன்..”
“அடிப்பாவி நாலு சேலை, இரண்டு நெக்லசுக்காக இந்த முடிவை நீ எடுக்கலாமா..? ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது..? நம் பண்பாடு கலாச்சாரமெல்லாம் என்னாவது..?? அதை விடு திவாகரனின் நிலைமையை கொஞ்சமாவது யோசித்து பார்த்தாயா நீ..?”
கார்த்திகா அலறினாள்..
“டேய் அண்ணனாடா நீ.. என் குலத் துரோகிடா.. நான் என் திவாகரைத்தான் திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்.. நீ இடையில் புகுந்து என் குடும்பத்தில் குட்டிக் கலாட்டா பண்ணுகிறாயே.. நீயெல்லாம் நன்றாக இருப்பாயா..?
உன் குடும்பம் உருப்படுமா..? நீயும் உன் குடும்பமும் ஒன்றுமில்லாமல்தான் போக போகிறீர்கள் பாருங்கள்..” இரு கை உயர்த்தி கார்த்திகா சாபமிட்டுக் கொண்டிருக்கையில் அவள் கன்னம் அதிர்ந்தது..
கண்களில் பூச்சி பறக்க கன்னத்தை தடவியபடி அவள் நிமிர்ந்து பார்க்க ஆக்ரோசமாக நின்று கொண்டிருந்தாள் சஸாக்கி..
“உன் அண்ணனை இப்படித்தான் சபிப்பாயா..? என்ன பெண் நீ..? பட்டுசேலை நகைகளுக்காக கூடப் பிறந்த அண்ணன் குடும்பத்தையே சபிக்கிறாயே..? அவர் நன்றாக இல்லாவிட்டால் இதோ இப்படி உனக்கு சேலையும், நகைகளும் யார் தருவார்களாம்..?”
அங்கு நடந்து கொண்டிருப்பதை யாராலும் நம்ப முடியவில்லை.. கார்த்திகா கன்னத்தில் வாங்கிய அறையை அனைவருமே மனதில் வாங்கி அதிர்ந்து நின்றிருந்தனர்..
“சொல்லு.. இனி இப்படி சொல்லமாட்டேன்னு சொல்லு.. அண்ணனிடம் மன்னிப்பு கேள்..” சஸாக்கி வெறி வந்தவள் போல் கார்த்திகாவின் தோள்களை பிடித்து உலுக்க, அவள் துவண்டாள்..
இந்த சின்னஞ்சிறு சிறு உருவத்திற்கு இந்த குச்சி கைகளுக்கு இவ்வளவு வலுவா..? கார்த்திகாவின் உடல் குலுங்கியது..
முதலில் சுதாரித்தவன் பாலகுமரன்தான்.. வேகமாக எழுந்த சஸாக்கியை பிடித்து இழுத்தான்..
“சஸாக்கி அவளை விடு இந்தப் பக்கம் வா..”
ஆனால் சஸாக்கியின் வேகம் அபாரமாக இருந்தது.. மேல் விழுந்து குதற துடிக்கும் காட்டு நரி போல் அவள் தெரிந்தாள்.. பாலகுமரனை மீறி மீண்டும் கார்த்திகா மேல் பாய முயன்றாள்.. கார்த்திகா பயந்து அபிராமி பின்னால் மறைய,




“வெரிகுட் மச்சான்..” என்ற கத்தலோடு வந்தான் திவாகரன்.. அவன் விழிகள் கனலை கொட்டியது..
“திவா..” கார்த்திகா ஓடிப் போய் கணவன் மார்பில் தஞ்சமடைந்தாள்..
“உங்களது நெடுநாள் திட்டம் இன்று பழித்து விட்டது..”
“திவாகர் என்ன சொல்கிறீர்கள்..? இது ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது.. பாவம் சஸாக்கி சின்ன பெண்…”
“ஓ உங்கள் மனைவி விபரமில்லா சின்னபெண்.. என் மனைவி குடி கெடுக்க வந்தவள்.. அப்படித்தானே..?”
“உங்கள் மனைவியா..? அவள் அதற்கு முன்பே என் தங்கை திவாகர்..”
“ஓ.. அப்படியா..? தங்கையை மனைவியை விட்டு அடிக்க வைப்பது உங்கள் குடும்ப வழக்கமோ..?”
“அவள் தப்பாக பேசினாள்.. அடித்தேன்.. அப்படித்தான் அடிப்பேன்..” கன்னறு கொண்டிருந்த நெருப்பிற்க்கு சஸாக்கி மேலும் நெய்யூற்ற பாலகுமாரனின் முகம் சிவந்தது..
“சஸாக்கி உள்ளே போ.. ஆன்ட்டி உங்கள் மகளை உள்ளே கூட்டிப் போங்க..”
“முடியாது.. நான் போக மாட்டேன்.. நான் எதற்கு பாலா போகனும்..? தப்பு செய்தது அவள்தான்.. அவளை வீட்டை விட்டு போக சொல்லுங்கள்..” கையை பிடித்து இழுத்த அன்னத்தை உதறிக் கொண்டு சஸாக்கி கத்த, அபிராமியின் முகத்தில் தனல் படர்ந்தது..
பாலகுமரன் பொறுக்க முடியாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த சஸாக்கியின் வாயை அடக்க அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்..




“ஆஹா எல்லாமே அருமையான நாடகம்.. உங்கள் நாடக நோக்கம் நிறைவேறிவிட்டது.. இனி நடிப்பு போதும்.. நாங்கள் போகிறோம்..” திவாகர் நிறுத்தாமல் கத்த,
“போகலாம் திவா..” கார்த்திகா விம்ம, இருவருமாக வீட்டை விட்டு வெளியேறுவதை கண்டு அபிராமி பதறியபடி அவர்கள் பின்னால் ஓடினாள்..
ஒரே அறையில் சுருண்டு கீழே விழுந்து விட்ட சஸாக்கியை கண நேரம் தயங்கி நின்று பார்த்த பாலகுமரன், பிறகு அவளை அப்படியே விட்டு விட்டு தங்கையை சமாதானப்படுத்த வாசலை நோக்கி நடந்தான்..
அன்னலட்சுமி மட்டுமே அழுகையுடன் மகளை தூக்கி மடியில் போட்டுக்கொண்டு அவளை நினைவிற்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தாள்..

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!