kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 11

11

 

 

” உன் அக்கா எப்போதெல்லாம் உன்னிடம் பேசுகிறாள். நன்றாக உன் உள்மனதை கவனித்து எனக்கு பொறுமையாக பதில் சொல் மிருதுளா ” மயிலிறகின் மென் வருடலாய்  கேட்டது அந்தக் குரல் .இரு விழி மூடி படுத்து இருந்த மிருதுளாவிற்கு அந்த குரலை மறுக்கும் எண்ணம் வரவில்லை.

 




” கனவில் என்னுடன் பேசுகிறாள் ” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் கண்ட கனவு காட்சிகள் மூளைக்குள் ஓட ஆரம்பிக்க மிருதுளாவின் உடல் தூக்கிப் போட துவங்கியது .இரு வலிய கரங்கள் துடித்துக்கொண்டிருந்த அவள் கைகளை மென்மையாக அழுத்திக்கொண்டன. வசீகரமான  அந்த குரல் தனது கேள்விகளை தொடர்ந்தது.

 

” கனவில் வரும் மதுரா உன்னிடம் என்ன சொல்கிறாள் ? “

 

” ஒன்றும் சொல்ல மாட்டாள் .என்னை கோபமாக பார்ப்பாள். சில நேரம் அவள் முகம் கொடூரமாக தெரியும். கையில் ஏதாவது ஆயுதத்தை வைத்துக்கொண்டு என்னை தாக்கக் கூட முயற்சிப்பாள் ” 

 

” ஆயுதமாஅது என்ன ஆயுதம் ? ” 

 

” சுத்தியல் .சிறிய ஆணி அடிக்கும் சுத்தியல் இல்லை .ரொம்ப பெரியது. அதை வைத்து ஒரு ஆளின் தலையை பிளந்து விடலாம் ” படுத்தபடி பேசிக் கொண்டிருந்த மிருதுளாவின் முகம் பயத்தில் வெளிறியது.

 

அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டிருந்த மகிபாலன் இப்போது மென்மையாக அவள் நெற்றியை வருடி கன்னத்தை தடவி என அவளை ஆசுவாசப் படுத்தினான் .ஆழ்மன உறக்கத்திற்கு ஆட்படுத்த பட்டிருந்தாலும் இந்த வருடல் மிருதுளாவை பெருமளவு ஆறுதல் படுத்தியது.

 

” அப்படியானால் கனவில் வருபவள் உன்னை மிரட்ட மட்டும்தான் செய்கிறாள் ” அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டிருந்த டாக்டர் மாலதி தனது கேள்விகளை தொடர்ந்தாள்.

 




” ஆமாம் வரும்போதெல்லாம் என்னை மிரட்டத் தான் செய்வாள் .ஆனால் சிலநேரங்களில் அழுவாள் .காப்பாற்று என்பதுபோல் பார்ப்பாள் .நான் அவளை மறந்து விட்டேன் என்பதற்காக என் மீது கோபப்படுகிறாள் என்று நினைக்கிறேன் ” 

 

” உன்னுடைய எண்ணங்கள் தவறு மிருதுளா .இப்போது நான் சொல்வதை கவனி .நீயும் மதுராவும் பல வருடங்கள் ஒன்றாக ஒற்றுமையாக தோழமையோடு வாழ்ந்து இருக்கிறீர்கள் .திடீரென்று அவள் உங்களை எல்லாம் விட்டு பிரிந்து போய் விட்டாள் .அவளுடைய பிரிவு உன் மனதை ஆழமாக பாதித்து இருக்கிறது .பாதுகாப்பான உங்கள் வீட்டை விட்டு தனக்கென ஒரு வாழ்வு தேடி போய்விட்ட உன் அக்காவின் உயிருக்கு ஆபத்து என்று நீ நினைக்கிறாய்.

 

ஏனென்றால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி உங்கள் அம்மா அவர்களுடைய கட்டுப்பாடுகளைக் கடந்து வெளியேறினால் உங்கள் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று சிறுவயதில் இருந்தே உங்கள் மனதில் புகுத்தி வளர்த்து வந்திருக்கிறார்கள் .உன் அக்கா முதன்முறையாக வெளிநாட்டு பயணத்திற்கு திட்டமிடும் பொழுதே உன் மனதில் இந்த பாதுகாப்பற்ற உணர்வு தோன்றிவிட்டது .இந்த பயணம் வேண்டாம் என்று நீ அவளுக்குச் சொல்ல அவள் அதனை கேட்கவில்லை.

 

அதன் பிறகு வெளிநாட்டு பயணம் என்ற போர்வையில் அவள் தன்னுடைய  எதிர்கால வாழ்வை தேடி போன பிறகு உன்னுடைய மனதில் அக்காவின் பாதுகாப்பற்ற நிலை முள் போல குத்திக் கொண்டே இருந்திருக்கிறது .உங்களை விட்டு தள்ளிப் போன மதுரா அவளுடைய உயிரை இழந்து விட்டாள் என்று நீ கற்பனை செய்து கொண்டுள்ளாய்அந்த கற்பனையே மதுராவின்  பிம்பமாக அடிக்கடி உன் முன்னால் தோன்றுகிறது. நீ உன்னுடைய கற்பனை உலகத்தில் இருந்து மீண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் ” 

 

தேனின் இனிமையும் பருத்தியின் மென்மையுமாக மாலதியின் குரல் மிருதுளாவின் ஊடுருவி அவள் மூளையை தாக்கி ஆழ் மனதில் புகுந்து பரவியது .துடித்துக்கொண்டிருந்த மிருதுளாவின் ரத்தநாளங்கள் மெல்லமெல்ல அடங்கின.

மிருதுளாவிற்கு கவுன்சிலிங்குகள் தொடர்ந்தன.

 

மிருதுளா மீண்டும் கண் விழித்தபோது தன் உடம்பை மிக லேசாக உணர்ந்தாள் .விழிகளை திருப்பி பார்த்த போது அவள் கையை தனது இரு கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்த மகிபாலனை பார்த்தாள். இதழ் விரித்து புன்னகைத்தாள்.

 

” இப்போது எப்படி இருக்கிறாய் குட்டி ? ” 

 




” மச் பெட்டர் மகி ” ரோஜாவின் மலர்வை ஒட்டிய அவளது புன்னகையின் கீற்று ஒன்று மகிபாலனையும் தொற்றிக்கொள்ள அவன் எழுந்து படுத்திருந்தவளின்  வகிட்டில் தன் இதழ் பதித்தான்.

 

” ஏய் மகி என்ன இதுஎன்னுடைய ஹாஸ்பிடலில் இதெல்லாம் கூடாது .உங்கள் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ” கிண்டலாகப் பேசிய படியே உள்ளே வந்தாள் மாலதி

 

” சாரி டாக்டர் ”  சங்கடத்துடன் மிருதுளா எழுந்து அமர்ந்துகொள்ள உயரமான அந்த படுக்கையிலிருந்து அவள் இடையை தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்தபடி மெல்ல இறக்கி விட்ட மகிபாலன் ” இப்போது உனக்கு இங்கே என்ன வேலை மாலதி ? ” என்றான்

 

” அடப்பாவி என்னுடைய பிரைவேட் ரூமப்பா இது .இங்கே என்னையே எதற்கு வந்தாய் என்று கேட்பாயா ? ” 

 

” எங்கள் பிரைவசிக்குள்  எதற்கு வந்தாய் என்று தான் கேட்டேன் ” 

 

” சரிதான் மிருதுளா உனக்கு கவுன்சிலிங் கொடுத்து உன்னை சரி செய்வதற்கு முன்னால் எனக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டிய தாகிவிடும் போலவே . இந்தப் பயல் என்னை அப்படிப் படுத்துகிறான் ” மாலதி புகார் பதிந்தாள் .

 

” உங்கள் பிரண்டு தானே டாக்டர் .நட்பிற்காக நீங்கள் ஒரு நான்கைந்து கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா  ? ” மிருதுளா கேட்க மாலதி தலையில் கை வைத்துக் கொண்டாள்.

 

” போச்சுடா .மகி இது தேவையா எனக்குபாவம் பார்த்து உனக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க ஒத்துக்கொண்டேன் பார் என்னைச் சொல்ல வேண்டும் ” 

 

” என்ன என் அத்தானுக்கு ட்ரீட்மெண்ட்டா  ? சாரி டாக்டர் இப்படி என் அத்தானை பற்றி தவறாகப் பேசியதற்கு நீங்கள்  மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் ” 

 

” என்னது ட்ரீட்மென்ட்டிற்க்கு மன்னிப்பா ? ” 

 

” காய்ச்சலுக்கு ஊசி போடும் தெருவோர டாக்டரா நீங்கள்பெரிய சைக்கியாட்ரிஸ்ட் .வரதன் குரூப்ஸின் எம்டி என்னிடம் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டார் என்று வெளியில் சொன்னீர்களானால் என் அத்தானின் கவுரவம் என்ன ஆவது ? ” 

 

” மசிபாலா பிரண்டா நீஉன் மாமன் மகள் என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி கொண்டிருக்கிறாள் பேசாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறாயே ” மாலதி அலறினாள்.

 

 அந்த அலறல் மகிபாலனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவன் பார்வை மிருதுளாவின் மேலே அப்பிக் கிடந்தது.

 

” குட்டி என்ன சொன்னாய் அத்தான் என்றா ? ” பரவசத்துடன் மிருதுளாவின் கன்னம் வருடினான் .மெல்லிய சிணுக்கத்துடன் அவன் முகம் பார்த்தும் ”  என்றாள் அவள்.

 

” கடவுளே முருகா என்னை காப்பாற்று ” அலறலுடன் மாலதி வெளியே ஓடிய நொடி மகிபாலனின் இதழ்கள் அழுத்தமாக மிருதுளாவின் கன்னத்தில் புதைந்திருந்தன.

 

 




 

அதோ அங்கே பார் மாலதி வருகிறாள் தன் அருகே மென்மையும் வாசமாக அழகோவியம் ஆக நின்ற மிருதுளாவை உரசியபடி சொன்னான் மகிபாலன்

 

” பாவம் மகி அவர்களை அன்று ரொம்பவே ஒட்டி விட்டோம் ” 

 

” சும்மா கேலி தானே மிருது .மாலதி ரொம்பவும் நல்ல பெண் இதையெல்லாம் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாள் ” 

 

” அவர்களுடைய உதவி இல்லாமல் என் மனக் குழப்பத்திலிருந்து என்னால் வெளிவந்திருக்க முடியாது .அவர்களுக்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன்” 

 

சுற்றி சுழன்று கொண்டிருந்த கேமராக்களுக்கு பயந்து தனது வாயின் மேல் கையை லேசாக மறைத்து வைத்துக் கொண்டு மிருதுளா பேச அன்பளிப்பாக கையில் இருந்த கிஃப்ட் பார்சலை உயர்த்தி பிடித்து லேசாக முகத்தை மறைத்துக்கொண்டு அவள் பேச்சுக்கு கவனமாக தலையை சாய்த்து இருந்தான் மகிபாலன்.

 

” ஹலோ என்ன நடக்கிறது இங்கே ? ” மாலதி அவர்கள் முன் சொடக்கு இட்டாள் .” ஏன் மகி உங்கள் கல்யாணந்தான் முடிந்துவிட்டதே . இன்னமும் இப்படித்தானா …” அவர்களது உடல்களையும்உரைகளையும் குறிப்பிட்டு கேட்டாள்.

 

‘”கல்யாணம் முடிந்துவிட்ட புது  கணவனும் மனைவியும் கொஞ்சம் அப்படி இப்படி இருப்போம் இதையெல்லாம் கண்டு கொள்ளாதே மாலதி ” மகிபாலன் சொல்ல மிருதுளா வெட்கத்துடன் அவன் தோள்களில் தன் தோள்களை  இடித்தாள்.

 

” சும்மா இருங்கள் மகி. கலாட்டாக்களை நிறுத்தங்கள் .டாக்டர் இவ்வளவு சீக்கிரமாக எங்கள் திருமணம் நடக்க நீங்கள்தான் காரணம் உங்கள் உதவியை நாங்கள் மறக்க மாட்டோம். உங்கள் சிகிச்சைக்கு மிகவும் நன்றி ” 

 

” மிருதுளா நான் என்னுடைய வேலையை செய்தேன் .இதற்கெல்லாம் நன்றி எதற்குநீங்கள் இருவரும் அற்புதமான பொருத்தமான ஜோடிகள். உங்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்மாலதி இருவருடைய கைகளையும் பற்றி தனது பரிசை கொடுத்து விட்டு மேடையிலிருந்து இறங்கினாள் .

 

சிறிது நேரம் கழித்து கொஞ்சம் நகர்ந்த மிருதுளாவின் கையை இறுகப் பற்றினான் மகிபாலன் ”  எங்கே போகிறாய் ? ” 

 

விடுவேனா உன்னை என்ற ஆதிக்கம் மிகுந்திருந்த அவனது பிடியில் சிலிர்ப்போடு சிரிப்பும் வந்தது மிருதுளாவிற்கு.

 

” உங்களை விட்டு எங்கே போகப் போகிறேன் மகிஆனால் பாத்ரூம் போவதென்றால் நான் தனியாகத்தான் போயாக வேண்டும் ” 

மிருதுளா சொன்ன விதத்திற்கு மகிபாலன் சிரித்துவிட்டான் . ” சரி போ ” கையை விட்டான்.

 

அஞ்சலி அங்கே இருப்பது சைக்ரியாட்டிஸ்ட் மாலதி தானே ? ” 

 

” ஆமாம் அந்த பைத்தியக்கார டாக்டர் தான் ” 

 

” அவர்களுக்கு இங்கே என்ன வேலை ? ” 

 

” பைத்தியத்திற்கு வைத்தியம் பார்த்திருப்பாராயிருக்கும் .கல்யாணத்திற்கு அழைத்திருப்பார்கள் .வந்திருப்பார் ” 

 

“. பைத்தியத்திற்கு வைத்தியம்யாரை சொல்கிறாய் ? ” 

 

” இந்த பங்சன்  ஹீரோயினை தான் சொல்கிறேன் .அவள் 15 நாட்கள் தொடர்ந்து மாலதியிடம் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டது எனக்கு தெரியும் .அதன் பிறகுதான் கொஞ்சம் நார்மலாகி இருக்கிறாளாம் ” 

 

 

”  சரியாகி விட்டாளா

 நான் அன்று சொன்னதே இன்று நடந்து விட்டது பார்த்தாயாஆக கடைசியில் மகி அந்த லூஸ்ஸிடமே விழுந்துவிட்டார் ” 

 

” நல்ல புளியங்கொம்பு அந்த  மிருதுளா  அவளிடம். விழுந்ததில் என்ன நஷ்டமாம் மகிக்கு ” 

 

 

” பணம் இருந்தால் மட்டும் போதுமா  ,? வாழ்க்கையில் நிம்மதி வேண்டாமா ? ” 

 

” எப்படியும் கலிவரதனுக்கு மாப்பிள்ளை ஆகிவிட வேண்டும் என்று நினைத்தார் .இதோ முடித்து விட்டார்…” 

 

மாதச் சம்பளத்தில் எண்ணி எண்ணி செலவழித்துக் கொண்டு இருந்தவர் .இப்போது அவருடைய உடையும் பழக்கவழக்கங்களையும் பார்த்தாயா ?பிறப்பிலிருந்தே உயர்குடி கனவான் போல் தெரிகிறார் .இங்கே அவருக்கு எத்தனை மரியாதை இதற்காகவே எந்த தியாகத்தையும் அவர் செய்யலாமே

 

 

” என்ன தியாகமும் செய்யலாம் .தன்னையே தியாகம் செய்யலாமாசரி பெரிய இடத்து விஷயம் நமக்கு எதற்கு நாம் சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம் ” 

 

வரவேற்பிற்கு வந்திருந்த யாரோ சில பெண்களின் பேச்சை கேட்ட மிருதுளாவின் மனம் குழம்ப துவங்கியது.

 

பைத்தியமா நான் ? எனது குழம்பிய மனநிலை தான் இப்படி மதுராவாக என் கண்களுக்குள் தெரிகிறதா?

 

இல்லை உனக்குள் குழப்பங்கள் இல்லை. நீ தெளிவாக இருக்கிறாய் .திட்டமிட்டு குழப்ப படுகிறாய் .என்று அவளுக்குள் ஒரு குரல் ஒலித்தது .அது மதுராவின் குரல் சிறிது நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவளுக்குள் ஒலிக்கத் துவங்கியது.

 

 

 

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!