Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 25

25

ஸ்வர்ணகமலம் வாசலை மிதிக்கும் போதே ஏனோ மனது புயல் தோணி போல் ஆடியது கமலினிக்கு .இப்போது என்ன பேசி வைக்க போகிறானோ ? எட்டிப் பார்த்து பார்க்கிங்கில் அவன் கார் இல்லையென்றதும் சிறு நிம்மதி பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தாள் .

” விஸ்வா காலையில் வந்து விட்டார் கமலினி …ஒன்றும் பிரச்சனையில்லை ” பாரிஜாதம் சொல்ல ,

” தெரியுமே ” என்று விட்டு நாக்கை கடித்தாள் .

” உனக்கு எப்படி தெரியும் ? ” பாரிஜாதம் பார்வையை கூராக்கினாள் .

” அ…அது நீங்கள் தேடினீர்களே மேடம் .நான் சாருக்கு போன் செய்தேன் . பேசினேன் .”

” ம் . யாரோ ஆப்ரிக்க மெர்சென்டோடு பிசினஸ் பேசிக் கொண்டே ஹோட்டலில் தங்கி விட்டாராம் .காலையில் வந்துவிட்டார் “




புளுகினிப்பய …எப்படி கூசாமல்  புளுகி வைத்திருக்கிறான் பாரு…மனதிற்குள் பொறுமியபடி வெளியே தலையசைத்து விட்டு பாரிஜாதம் கொடுத்த நகை செட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டாள் .

எப்படி அவனை எதிர்  கொள்வதென படபடத்து நின்று கொண்டிருந்த போது அவளிருந்த தளம் கடந்து மேலேறியது அவனிருந்த லிப்ட் .அதனுள்ளிருந்த அவனின் பார்வை அவள் மேலேயே அப்பிக் கிடந்த்தை கமலினியால் பார்க்க முடிந்தது .

என்ன கெரகத்துக்கு இப்படி பார்த்து தொலையுறான் ? அந்த நிகிதாவை கொஞ்சம் குழைவாக பாருன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன் …? அங்கே ரோபோ மாதிரி பார்ப்பான் .அப்படியே அவளை கோட்டை விட்டுட்டு இங்கே வந்து என் உயிரை வாங்குறான் …கமலினி மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்த போதே …அவனிடமிருந்து அழைப்பு வந்து விட்டது .

” உள்ளே வந்த்துமே தினமும் என்னை உங்கள் அறைக்கு வரச் சொன்னீர்களானால் எல்லொரும் என்ன நினைப்பார்கள் ? ” சண்டையை துவக்கியபடியே உள் நுழைந்தாள் .

” என்ன நினைப்பார்கள் ? ” அவனது நிதானம் அவளது மன அழுத்தத்தை கூட்டியது .

” கேள்வி கேட்டால் பதில் சொல்லனும். திரும்ப கேள்வி கேட்க கூடாது ..”

” இதென்ன கேள்வி கமலினி ? வேலை இருந்த்து .கூப்பிட்டேன. “

” என்ன பொல்லாத வேலை ? “

” பொல்லாத வேலை இல்லை .நல்ல வேலை. உட்கார் சொல்கிறேன் “

கமலினியுனுள் முன்தினம் அவன் முத்தமிட்டது நினைவில் வந்த்து .விழி சுழற்றி பார்த்து முன்தினம் தான் முத்தம் வாங்கிய அதே இடத்தில் நிற்பதை உணர்ந்து கலவரமடைந்து வேகமாக சற்று நகர்ந்து நின்று கொண்டாள் .

” உட்காரவெல்லாம் முடியாது.   எனக்கு வேலை இருக்கிறது . சீக்கிரம் சொல்லுங்கள் போக வேண்டும் …”

அவள் விழிகளை கூர்ந்தவனை தயங்காமல் எதிராக பார்த்தாள் .அவனும் அவளை இமையசைக்காது பார்த்தபடி தனது போனை எடுத்து அழுத்தினான் .” என் ரூமுக்கு வாங்க “

யாரை கூப்பிடுகிறான் …ஒரு வேளை அந்த நிகிதாவோ ….? அவளுக்கு இங்கே என்ன வேலை …? ஆனால் இவன் ஏன் அவளை இப்போது கூப்பிடுகிறான் …?

” இங்கே இல்லை …அங்கே …” திடுமென அவன் அவளுக்கு சற்று தள்ளி கை நீட்டி காட்ட , கமலினி குழப்பமாக அ வனை பார்த்தாள் .

” ஒரு இஞ்ச் கூட மாற்றாமல் எனக்கு தெரியும் ..நீ முதலில் நின்ற இடமும் இல்லை ்இப்பொது நகர்ந்து நின்ற இடமும் இல்லை .இரண்டிற்குமிடையே சரியாக சற்றே வலது கோணத்தில் …அதோ அங்கேதான் நேற்று …” முடிக்காமல் இதழ்களை அவன் குவித்து காண்பிக்க , ஏனோ சிலிர்த்த கமலினியின் உடல் அவளிடமே கோபித்துக் கொண்டு விலகி நின்றிருந்த்து. 

இ…இவனை என்ன செய்யலாம் …? இவனுக்கு எவ்வளவு தைரியம் ..? கமலினிக்கு அவன் மண்டையை உடைக்கும் வேகம் வந்த்து .செய்த்து பொறுக்கித்தனம் .இதில் பெரிய ஹீரோ மாதிரி என்ன பாவனை ?

” முதலில் நம் தொழிலை கொஞ்சம் கவனிக்கலாம் .பிறகு ஒருவர் மண்டையை ஒருவர் உடைத்துக் கொள்ளலாம் …” அவளை வெறுப்பேற்றும் எண்ணம் தவிர விஸ்வேஸ்வரனிடம் வேறு இருப்பதாக தெரியவில்லை .

இந்த சீண்டலில் வெகுண்டு கமலினி வெளியே போக திரும்புகையில் பாரிஜாதம் அறையினுள் வந்தாள் .” என்ன விசயம் விஸ்வா …? ” என்றபடி .

” உங்க ஸ்டாப் ஒண்ணும் சரியில்லையே அண்ணி “

” யாரை. …கமலினியை சொல்கிறீர்களா ?




” ம் …ஒரு முக்கியமான ஆர்டர் வந்திருக்கிறது .உட்காருங்கள் பேசலாம் என்றால் முடியாது என்று ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் . “

” ஏன் கமலினி …? ” பாரிஜாத்ததின் கேள்விக்கு  கமலினிக்கு கோபம் வந்த்து .

” உங்களுக்கு புதிதாக வந்த ஆர்டரை பற்றி எனக்கு என்ன கவலை மேடம் ? அதற்கு நான் ஏன் உடகார்ந்து பேச வேண்டும் .என் வேலை அது இல்லையே “

படபடத்தவளை வியப்பாக பார்த்தாள் பாரிஜாதம் . அவளறிந்த கமலினி இவள் இல்லை ்இதுதான் என் வேலை .இதனை மட்டும்தான் நான் செய்வேன் என எந்த வேலையையும் அவள் பிரித்து பார்த்ததில்லை . ஆர்வமாக எல்லா வேலைகளையுமே செய்வாள் .

” விஸ்வாவுடன் சண்டையா கமலினி ? இருவருக்குள்ளும் எ …என்ன பிரச்சனை …? ” கலக்கம் தெரிந்த பாரிஜாத்த்தின் கண்களில் தன்னைத் தானே நொந்து கொண்டாள் கமலினி .

” நான் எந்த சண்டையும் போடவில்லை .ஒன்றாக கூடி ஒத்து போகத்தான் நினைக்கிறேன் …” குரல் உயர்த்தி தேவையான  வார்த்தைகளை அழுத்தமும் , திருத்தமுமாக  அறிவித்தவனை முறைத்தாள் .இப்போது இந்த அறிவிப்பு ரொம்ப தேவை பார் …முந்திரிக்கொட்டை …

” எங்களுக்குள் எந்த பிரச்சனையுமில்லை மேடம் .புது ஆர்டர் பற்றி பேசும் போது நான் எதற்கென்றுதான் …”

” தேவையிருப்பதால்தானே அழைக்கிறேன் …” பாரிஜாத்த்திற்கு சாதாரணமாக தெரிந்த இந்த வார்த்தைகளில் கமலினிக்கு நிறைய அர்த்த பொதிதல்கள் தெரிந்த்து .இப்போது திரும்பி அவன் முகம் பார்க்க விரும்பவில்லை அவள் .

” விஸ்வாவுடன் சண்டை வேண்டாம் கமலினி ” யாசகம் தெரிந்த பாரிஜாத்த்தின் குரலில் தானே மெனமையானது கமலினியின் முகம் .

” எந்த சண்டையும் இல்லை மேடம் .வாங்க வேலையை பார்க்கலாம் . அப்படி என்ன எனது தேவை இருக்கும் ஆர்டரென பார்க்கலாம் ? ” சவால் விட்டவளின் கண்களை தயங்காமல் சந்தித்தான் விஸ்வேஸ்வரன் .

” உனது தேவை அவசியமதான் .மிகவுமே …” பேசி நிறுத்தி அவள் முகம் பார்த்து சில நொடி இருந்து விட்டு , தன் லேப்டாப்பை பெண்கள் புறம் திருப்பினான் .

” இதை பாருங்கள் ” அங்கே லேப்டாப்பில் திருவானைக்காவல் கோவில் இருந்த்து . அதன் மூலவரான சிவலிங்கத்தின் முழு உருவமும் தெளிவான போட்டோவாக இருந்த்து .

” நான் விரும்பிய ஆர்டர்.எதிர்பார்க்காமல் கிடைத்து விட்டது .ஏதும் திடீர் அதிர்ஷ்டமாக இருக்குமோ …? ” சட்டென தன் இதழில் பதிந்து விட்ட அவன் பார்வையில் திணறினாள் கமலினி .

இவன் இப்போது என்னதான் சொல்ல வருகிறான் …? என்னை …அதாவது …எனக்கு …வந்து …என் …அவனின் முத்தத்தை மனதில் நினைக்கக் கூட தயங்கியது அவள் மனம் .அ…அதனால்தான் இந்த ….ஏதோ ஆர்டர் எனக் கூறுகிறானா …? சை என்ன இது உள் மன ஓட்டல்களில் கூட சுதந்திரமற்ற இந்த நிலை …? கமலினிக்கு ஆயாசமாக இருந்த்து .

” இந்த ஆர்டரை உன் துணை இருந்தால் மிகச் சிறப்பாக செய்ய முடியுமென நினைக்கிறேன் கமலினி ” விஸ்வேஸ்வரனின் பேச்சில் நினைவு மீண்டவள் என்ன சொன்னானென விழித்தாள் .

” எ …என்ன ஆர்டர் ? “

” என்ன கமலினி …கவனிக்கவில்லையா …சிவலிங்கத்திற்கு தங்க்கவசம் செய்யும் வேலை கிடைத்திருப்பதை சொல்லிக் கொண்டிருந்தாரே …” பாரிஜாதம் கேடகவும் தலையை உதறிக் கொண்டவள் …உணமையான மகிழ்வை முகத்தில் காட்டினாள் .

” மகிழ்ச்சி சார் .நல்ல ஆர்டர் .” பேசியவளுக்கு முன் தன் கையை நீட்டினான் விஸ்வேஸ்வரன்

” எவ்வளவு நல்ல ஆர்டர் …? இருவரும் வாழ்த்து சொல்ல மாட்டீர்களா …? “

கமலினி அவனை முறைத்துக் கொண்டிருக்கும் போதே பாரிஜாதம் அவன் கை பற்றி குலுக்கி ” வாழ்த்துக்கள் விஸ்வா ” என வாழ்த்த , கமலினியும் அவளையே பினபற்ற வேண்டியதானது .

விரல்கள் நசுங்கும் அளவு அவள் கையை பற்றியவன் பற்றியதை விடாமலேயே ”   தங்கத்தகடுகள் பற்றி உனக்கு அதிக விபரங்கள் தெரிகிறது கமலினி .இந்த ஆர்டர் முழுவதையும் நீதான் என்னுடனிருந்து முடிக்க போகிறாய் ” முதலில் நசுக்கிய விரல்களை பின் வெளித் தெரியாமல் நுனி விரல்களால் நீவினான் .

” இதெல்லாம் பெரிய வேலை .எனக்கு அப்படி ஒன்றும் இதில் தெரியாது ” தன் கையை அவனிடமிருந்து கிட்டதட்ட பிடுங்கினாள் .

” உன் ஆலிழை கண்ணன் பரிசை நான் மறந்து விடவில்லை “

” அப்படியா …? இந்த வேலைகளெல்லாம் நீ செய்வாயா கமலினி ? ” பாரிஜாத்த்தின் ஆச்சரிய கேள்விக்கு தனது போனை நீட்டினான் விஸ்வேஸ்வரன் .




” இதை பாருங்க “

அதில் கமலினி சுதாகர் – ப்ரியம்வதாவிற்கு செய்து பரிசளித்த ஆலிழை கண்ணனின் போட்டோக்களும் , வீடியோவும் .இதை எப்போது எடுத்தான் …அவை எடுக்கப்பட்ட நேர்த்தியில் கமலினியுமே விழி விரித்து அவற்றை பார்க்க பாரிஜாதம் ” வாவ் ” என்றாள் .

” நீ நிச்சயமாக இந்த வேலையை விஸ்வாவுடனிருந்து செய்து முடிக்க வேண்டும் கமலினி ” வேண்டுதலும் , உத்தரவும் கலந்து கூறி விட்டு …” சௌமி ஸ்கூலில் ஒரு பங்சன் .நான் கிளம்புகிறேன. ” என்று இவர்கள் பதிலை எதிர்பாராமலேயே வெளியேறி விட்டாள் பாரிஜாதம் .

இதென்ன இப்படி இவனிடம் என்னை மட்டும் தள்ளி விட்டு போய்விட்டார்கள் …கமலினி அதிருப்தியோடு பார்த்த அதே நேரம் விஸ்வேஸ்வரனிடமும் அதே பாவம் .

” ஏதாவது சாக்கிட்டு வேலையிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் இவர்களுக்கு ” முணுமுணுத்தான் .

” விருப்பமில்லாதவர்களை ஏன் வற்புறுத்துகிறீர்கள் ? ” இப்போது கமலினியிடமும் இரட்டை அர்த்த கேள்வி .

” யாருக்கு விருப்பமில்லை ? ” விஸ்வேஸ்வரனிடம் கூர் கேள்வி. 

What’s your Reaction?
+1
29
+1
19
+1
3
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!