karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 3

3

 

 

 

 

“வாட்ஸ் யுவர் நெகஸ்ட் மூவ் ஸ்டூடண்ட்டிஸ்..?” கேட்ட காலேஜ் கரஸ்பாண்டன்டை திகைப்பாய் பார்த்தனர்.. தோழர்கள் மூவரும்..
“சார்..” ரஞ்சித் தயக்கமாய் இழுக்க,
“யுவர் ப்ராஜெக்ட் இஸ் அன்ப்ளீவபுலி குட்.. வாட்ஸ் யுவர் நெக்ஸ்ட் ஐடியா..?” கரஸ்பாண்டன்ட் தனது இடது கை மோதிரத்தை வலது கை இரு விரலால் சுற்றியபடி பேசினார்..
“சார் வீ ஆர் அன்டர் யுவர் அட்வைஸ் சார்..” ஆராத்யா பணிவாய் பதில் சொன்னாள்.
“ம்.. அது ஓகே பட்.. உங்களுக்கென்று ஒரு டிசிசன் இருக்கும்தானே..?”
“யெஸ் ஸார்.. ஒரு கம்பெனி ஆரம்பித்து இந்த ஹெல்மெட்டுகளை நாங்களே தயாரிக்கும் ஐடியா இருக்கிறது சார்..” ரூபிணி சொன்னாள்..




“ம்.. நாட் பேட்.. பட் அது இப்போது சரியா வருமா..?”
“நிச்சயம் சரியாக வரும் சார்.. நாங்கள் மூவருமே எங்கள் உழைப்பை போட தயாராக இருக்கிறோம்..”
படபடத்த ஆராத்யாவை நிமிர்ந்து பார்த்த கரஸ்பாண்டன்ட் புன்னகைத்தார்.
“பணம் யார் போடுவார்கள்..?”
அவரது கேள்வி தங்களை அலட்சியம் செய்வதாக உணர்ந்தாள் ஆராத்யா..
“அதுவும் நாங்கள்தான் சார்..” ரோசமாக சொன்னாள்..
“உங்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா என்ன..?” இல்லை இவர் நக்கல் பேசவில்லை, விழி மூடி தன்னை அடக்கி கட்டுப்படுத்தினாள்..
“லோன் வாங்கலாம்னு நினைக்கிறோம் சார்..” ரஞ்சித் தயக்கமாக சொன்னான்.
“லோன்..? அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுமா..?”
“என் அம்மா..” பேங்கின் பெயரை சொல்லி, “அங்கே ப்ரான்ஞ் ஹெட் சார்.. அந்த பேங்கில் டிரை பண்ணலாம்ன்னு நினைக்கிறோம்..”
ஆராத்யா தங்கள் முயற்சியை அழுத்தம் திருத்தமாக விவரிக்க கரஸ்பாண்டன்ட் இருக்கையை விட்டு எழுந்தார்.
“குட்.. டிரை யுவர் பெஸ்ட்.. பெஸ்ட் ஆப் லக்..” கையசைத்துவிட்டு போய்விட்டார்..
“ஏன் இவர் ஒரு மாதிரியே பேசுகிறார்..?”
“நம்மால் இதனை செய்ய முடியாதுன்னு நினைக்கிறாரா..?”
“ரொம்ப சின்ன பசங்கன்னு நினைக்கிறாரோ..?”
“இவர் முன்னாடியே நாம் கம்பெனி ஆரம்பித்தே தீரனும்..”
“கவலைப்படாதீங்கப்பா.. நான் இன்னைக்கே என் மம்மிகிட்ட பேசிடுறேன்..” தோழர்கள் மூவருமாக பேசி முடிவெடுத்து பிரிந்தனர்..
“எனக்கு இதில் தப்பேதும் இருப்பதாக தெரியவில்லை..”
“எனக்கு இதில் எல்லாமே தப்பாகத்தான் தெரிகிறது..”
“உங்களுக்கு பிடிக்கலைங்கிறதுக்காக நான் என் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை..”
“நீ திமிர் பிடித்தவள் என்றுதான் எனக்கு தெரியுமே..”
வீட்டிற்குள் நுழையும்போதே தாய் தந்தையின் வாக்குவாதங்கள் கேட்க, ஆராத்யாவிற்கு சலித்து வந்தது..
கடவுளே இவர்கள் என்ன இப்படி நான் ஸ்டாப்பாக சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..?
“டாடி..”
“சரியான வேடதாரிகள்..”
“மம்மி..”
“சந்தர்ப்பவாதிகள்..”
வந்து நின்ற மகளை கவனிக்காது இருவரும் தீவிர சண்டையிலேயே இருக்க, ஆராத்யா கோபத்துடன் தன் கையிலிருந்த கனத்த பாட புத்தகத்தை அவர்கள் முன் பெரிய ஓசையுடன் போட்டாள்..
“இரண்டு பேரும் வாயை மூடப் போகிறீர்களா இல்லையா..?”
“முதலில் அவரை மூடச் சொல்லு..”
“அவள் வாயை மூடச் சொல்லு..”
அவர்கள் சண்டை நிற்கும் வழியைக் காணோம்..
“மம்மி, டாடி நான் இங்கே எவ்வளவு பிரச்சனையில் இருக்கிறேன், நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்படாமல் உங்களையே பேசிக் கொண்டிருக்கிறீர்களே..”
“உனக்கென்னடி பிரச்சனை..? நாங்கள் ரொம்ப முக்கியமாக பேசிக் கொண்டிருக்கிறோம்..”
“அப்படியென்ன முக்கியம்..? என்னை விடவா..?”
“ஆமாம் என் அண்ணன்..”
“மம்மி ப்ளீஸ் ஸ்டாப் தட் ப்ளா ப்ளா.. எனக்கு அதைவிட முக்கியமான விஷயம் இருக்கிறது.. பேச வருவீர்களா.. மாட்டீர்களா..?”
மனோரமா முறைக்க, மாதவன் அவளருகே வந்து அமர்ந்தார்..
“என்னடா விசயம்..? டாடிகிட்ட சொல்லு..”
“ம்ஹீம்.. எனக்கு ரமாதான் முக்கியமாக கேட்க வேண்டும்..” ஆராத்யா ஒற்றைவிரலால் தாயை சுட்டினாள்..
“ரமா நம் பிரச்சினையை பிறகு பேசலாம்.. வா முதலில் குழந்தையைக் கவனிப்போம்..” மாதவன் கையை மனைவி பக்கம் நீட்டி அழைக்க, தன் தாயோடு சமாதானமாக தந்தை தன்னை உபயோகித்துக் கொள்கிறாரோ என்ற சந்தேகம் ஆராத்யாவிற்கு வந்தது..
மனோரமாவோ அவ்வளவு எளிதாக நான் சமாதானமாகிவிட மாட்டேன், என உணர்த்துவது போல் முறைப்பாகவே முகத்தை வைத்துக் கொண்டு நீண்டிருந்த கணவனின் கையை கவனிக்காதவள் போல மகளின் மறுபுறம் வந்து அமர்ந்தாள்.
“என்ன விசயம் ஆரா..?”




ஆராத்யா அன்று கரஸ்பாண்டன்டை சந்தித்ததை சொன்னாள்..
“ஒரு மாதிரி நக்கலாக பேசுகிறார் மம்மி.. எங்கள் ப்ராஜெக்டை பற்றி உங்களுக்கே தெரியுமே.. டாட் நீங்கள் கூட அந்த ஹெல்மெட்டை யூஸ் செய்து பார்த்தீர்களே, அதைப் போய் அவாய்ட் பண்ணுவது போலவே பேசுகிறார்..”
மாதவன் தலையாட்டியபடி மௌனமாக இருக்க,
“அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் ஆரா..?” மனோரமா விசாரித்தாள்.
“உன் ஹெல்ப் வேணும் மம்மி.. எங்களுக்கு நீ வேலை செய்யும் பேங்கில் லோன் வாங்கித்தர வேண்டும்..”
மனோரமாவின் நெற்றி யோசனையில் சுருங்க,
“அது கஷ்டம்டா குட்டி..” மாதவன் பதில் சொன்னார்..
“ஏன் டாடி..? உங்க பொண்டாட்டி சொன்னால் அவுங்க பேங்கில் லோன் கொடுக்க மாட்டார்களா..?” ஆராத்யா படபடத்தாள்..
“தாராளமாக கொடுப்பார்கள்.. ஆனால் செக்யூரிட்டி வேண்டும்.. சுயூரிட்டி வேண்டும்.. ஏதாவது அசட் இருக்க வேண்டும்.. எனது மகள் என்பதற்காக எங்கள் பேங்க் ரூல்சை மாற்ற முடியாதுடா செல்லம்..” மனோரமா விளக்கினாள்..
“செக்யூரிட்டி அப்பா தருவார்.. சுயூரிட்டி நீ போடு.. அசெட் நம் இந்த வீடு..”
“இல்லைடா ஆரா.. இந்த வீடு நான் உன் அம்மாவிற்காக பார்த்து பார்த்து கட்டியது.. இதனை நான் எதற்கும் அடமானம் வைக்க மாட்டேன்..” ஆராத்யா தந்தையை முறைத்தாள்.
“பேங்க் ஸ்டாப்ஸ் சோட சுயூரிட்டியை ஒத்துக்க மாட்டாங்க ஆரா..” இப்போது முறைப்பு தாய்க்கு..
“இரண்டு பேருமாக இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள்..? எங்கள் பிசினசிற்கு பணம் ஏற்பாடு பண்ணித் தர மாட்டீர்களா..?”
“வெறும் சொல்லுக்கு பேச நன்றாயிருக்கும் சில விசயங்கள் ப்ராக்டிகலாக யோசிக்கும் போது சரிவராது ஆரா.. உங்கள் லோன் விசயமும் அப்படித்தான்.. நீங்கள் மூவரும் காலேஜ் முடிக்கவே இன்னமும் ஆறுமாதம் இருக்கிறது.. உங்கள் கைகளில் டிகிரி சர்ட்டிபிகேட்டும் கிடையாது.. உங்கள் தொழிலும் எந்த அளவு ரீச் ஆகும்னு தெரியாது.. எதை வைத்து உங்களுக்கு லோன் கொடுக்க முடியும்..?”
தாயின் விளக்கங்கள் ஆராத்யாவிற்கு அதிக ஆத்திரத்தை தர, “நீ ஒன்றும் எனக்கு லோன் தர வேண்டாம்.. நானே பார்த்துக் கொள்வேன்..” கத்திவிட்டு எழுந்து தன் அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டாள்..
மறுநாள் காலை ஆராத்யா எழுந்து வரும் போதும் மாதவனுக்கும், மனோரமாவிற்கும் யுத்தம் நடந்து கொண்டுதான் இருந்தது.. அழுகை கோடு போட்ட தாயின் குரலுக்கு ஆராத்யா தயங்கினாலும், அவளது வீம்பு அவளை விடவில்லை..
ஙணஙணவென நம நமத்த குரலை கண்டு கொள்ளாமல் “எனக்கு இட்லி..” என்றபடி டேபிளில் அமர்ந்தாள்..
மூக்கை உறிஞ்சியபடி அவள் தட்டில் இட்லியை வைத்த மனோரமா “ஆரா நீயாவது என் பேச்சைக் கேட்பாயா..?” பரிதாபமாக கேட்டாள்..
“என்ன விசயம்..?” கத்தரித்தாற் போல் கேட்டாள்..
“ப்ரைடே ஆப்டர் லன்ச் காலேஜ்க்கு லீவ் சொல்லிட்டு வீட்டுக்கு வர்றியா..?”
“எதற்கு..?”
“உன் அப்பா வரமாட்டாராம்.. நான் மட்டும் எப்படி..? இத்தனை வருடமாக வராதவர்கள் வரப்போகிறார்கள்..”
“யார்..?”
“என் அண்ணனும், அண்ணியும்..”
“ஆஸ்க் தெம் டு கோ டூ ஹெல்..”
தட்டிலேயே கைகழுவி விட்டு எழுந்தாள்..
“ஏய் என்னடி சொன்னாய்..?”
“அவர்களை.. உன் அண்ணா, அண்ணியை நரகத்திற்கு போகச் சொல்லு..” நிதானமாக வார்த்தை வார்த்தையாக உச்சரித்து விட்டு ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்..
அவளது மனம் முழுவதும் குழப்பங்கள்.. லோன் வாங்க முடியாது என்ற விசயத்தை எப்படி ப்ரெண்ஸிடம் சொல்ல போகிறோம்..? அவர்கள் என்னைத் தவறாக நினைத்து விட்டாள்..
அவள் பயந்தது போல் இல்லை ரஞ்சித்தும், ரூபிணியும்..
“உன் மம்மி சொல்வது சரிதான் ஆரா.. நாம் அவர்கள் நிலைமையையும் யோசிக்க வேண்டுமே.. இன்னமும் படிப்பே முடித்திராத ஸ்டூடண்ட்ஸிற்கு எந்த பேங்கில் லோன் கொடுப்பார்கள்..?”
“அப்படியென்றால் நாம் இப்போது என்ன செய்வது..?”
“நாம் திரும்ப நமது பிரின்சிபால், கரஸ்பாண்டடிடமே போவோம்.. ஸ்டூடண்சிற்கு செய்ய கடமைப் பட்டவர்கள் அவர்கள் தான்..”
மீண்டும் மூவரும் காரஸ்பாண்டன்ட் முன்னால் நின்றனர்.. இந்த காலேஜ் தவிர இன்னமும் நிறைய தொழில்கள் பார்ப்பவர்.. அனுபவஸ்தர்.. அவருக்கு தெரியாததா..? அவரது யோசனையை நாம் தவறாக மதிப்பிட்டு விட்டோம் எனத் தெளிந்து அவரது ஆலோசனையை எதிர் நோக்கி அவரைப் பார்த்தனர்..
“நாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று எங்களை கைட் பண்ணுங்க சார்..” பணிவாக கேட்டனர்..
“குட்..” அவர்கள் செய்கையை மெச்சியவர் சொன்ன ஐடியா அவர்களுக்கு பிடிக்கவில்லை..
“முதலில் இந்த வகை ஹெல்மெட்டிற்கு பேடென்ட் உரிமை உங்கள் மூவர் பெயரிலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. பிறகு ஏதாவது பெரிய டூ வீலர் கம்பெனியை அணுகுங்கள்.. அவர்கள் கம்பெனி வண்டியோடு உங்கள் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்கிறார்களா.. எனக் கேளுங்கள்..”
“பேடென்ட் ஓகே சார்.. ஆனால் இன்னொரு கம்பெனியிடம் போய் நிற்க வேண்டுமா..?”
“நிச்சயமாக உங்கள் ஹெல்மெட்டின் பிரையாரிட்டி வெளி உலகத்திற்கு தெரிய வேண்டுமென்றால் ஏதாவது ஒரு பெரிய டூவீலர் கம்பெனியின் முதுகில் நீங்கள் ஏறிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை..”
“நம் நாட்டில் இப்போது இருக்கும் டூ வீலர் கம்பெனி எல்லாமே பாரின் கொலாப்ரேசனில் இயங்குவதுதான் சார்.. நாங்கள் நம்முடையது.. தமிழர்களுடையதாக மட்டுமே.. எங்கள் ஹெல்மெட்டை அடையாளம் காட்ட நினைக்கிறோம்..”




“கரஸ்பாண்டன்டின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது..”
“வெரிகுட்.. ஐ ஆம் ப்ரௌட் ஆப் யு..” பாராட்டியவர் தனது சுழல் நாற்காலியில் சுழன்றபடி யோசனையில் ஆழ்ந்தார்..
“தமிழர்களென தனியாக அடையாளம் காணப்பட நீங்கள் விரும்புவது எனக்கு சந்தோசமே.. ஆனால் அதற்கு முதலில் நாம் கால் ஊன்ற வேண்டும்.. என்னுடைய ஐடியா என்னவென்றால், நீங்கள் சில கம்பெனிகளை ஐ மீன் பெரிய டூ வீலர் கம்பெனிகளை அப்ரோச் பண்ணுங்கள்.. அவர்கள் டூ வீலரோடு உங்கள் ஹெல்மெட்டை சேர்த்துக் கொள்ள கேளுங்கள்.. முதலில் உங்கள் ப்ராடெக்டை மக்களிடம் கொண்டு செல்ல இதுதான் சிறந்த வழி..”
கரஸ்பாண்டன்ட் சொல்வதுதான் சரியென்றாலும் தோழர்களின் துடிப்பான இளம் உணர்வுகள் அதனை ஒத்துக் கொள்ள மறுத்தன.. அவர்களது மௌனத்தை கண்டவர்.. “கவலைப்படாதீர்கள் ஸ்டூடண்ஸ்.. நிச்சயம் உங்கள் திறமைக்கான ரெஸ்பெக்ட் கிடைக்கும்.. நம்பிக்கையோடு முயற்சியுங்கள்..” சமாதானமாக பேசினார்..
வேறு வழியின்றி தங்களது திறமையை ஒவ்வொரு இடமாக கொண்டு செல்ல தொடங்கினர் மூவரும், ஆனால் அதில் அவர்களுக்கு அடுத்தடுத்து தோல்வியே கிடைத்தது..

What’s your Reaction?
+1
2
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!