karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 42

   42

சத்தமின்றி என் முந்தானைக்குள்

புகுந்து கொண்டுள்ளாய்

தாலி செயினை எங்கே மறைக்க நான்

முந்திக்குள்ளா  ? நெஞ்சுக்குள்ளா …?

அதிகாலை யோகா முடித்து அறையை விட்டு வெளியே வந்த சாத்விகா எதிரேயிருந்த வீரேந்தரின்  அறையை பார்த்தாள் . முன்தினம் இரவு முழுவதும் அவன் வீட்டிற்கே வரவில்லை .ஒரு போன் இல்லை , தகவல் இல்லை .அதற்காக வருந்துவோரும் அந்த வீட்டில் இல்லை .அவள் வீட்டிலும்தான் பொறுப்பான பதவியில் இருக்கும் ஆண்கள் இருந்தனர் .இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் வெளியே தங்கினர் …சௌந்தர்யாவிடம் சரியான காரணம் சொல்லாமல் சண்முகபாண்டியனோ , கார்த்திக்கோ வெளியே தங்க வீட்டை விட்டு காலை எடுத்து வைக்க முடியாது .இங்கோ …இவன் இஷ்டம் போல் வெளியே சுற்றுகிறான் .கேள்வி கேட்க ஆளில்லை .நல்ல குடும்பம் இது …பற்களை கடித்தவளுக்குள் திடீரென ஒரு எண்ணம் .

வீரேந்தர் இல்லாத நேரம் அவன் அறையை கொஞ்சம் ஆராய்ந்தால் என்ன …அந்த ரேணுகாதேவியின் கடிதங்களோ , அன்று அவள் எழுதி வாங்கிய அட்ரஸோ கிடைக்கலாமல்லவா …சட்டென உடலில் ஒரு பரபரப்பு சேர்ந்து கொள்ள வீரேந்தரின் அறையை நோக்கி நடந்தாள் .

இது போலொரு எண்ணத்துடன் ஒருநாள் அவன் தோட்டத்தில் ஜாகிங்கில் இருந்த போது , சாத்விகா மெல்ல அவன்   அறையினுள் நுழைந்து அங்கிருந்த அலமாரிகளை ஆராய தொடங்கினாள் .கப்போர்டுகளில் தேடுதலை முடித்துவிட்டு , கட்டிலுக்கடியில் ஏதாவது இருக்குமோ என்ற எண்ணத்துடன் கட்டில் டிராயர்களை இழுத்து அங்கிருந்த போர்வைகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது , வாசல்புறம் ஓரக்கண்ணில் பட , அங்கே வாசலில் சாய்ந்து நின்று இவளை பார்த்தபடி இருந்த வீரேந்தரும் கண்ணில் பட்டான் .சர்ரென்ற சத்தத்துடன் டிராயர்களை உள்ளே தள்ளியவள் , நிதானமாக அப்படியே கட்டில் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு கால்களை ஆட்ட தொடங்கினாள் .




” என்ன …? ” வீரேந்தரின் கேள்விக்கு …சாத்விகாவின் பதிலும் அதுவாகவேதான் இருந்த்து . கண்களை துளைத்த அவன் பார்வைக்கு பதில் கொடுக்க ஏலாமல் தன் விழிகளை வேறுபுறம் அவள் திருப்ப , வீரேந்தர் நிதானமான குரலில் ” வெளியே போடி …” என்றான் .

” முடியாதுடா …” கால் மேல் கால் போட்டு அவள் கைகளை கட்டிக்கொள்ள , மெல்ல உள்ளே வந்த வீரேந்தர் அவளை பார்த்தபடி தனது உடைகளை சுழட்ட தொடங்கினான் .

” ஏய் …என்ன பண்றீங்க ..? “

” ஜாகிங் போயிட்டு வந்திருக்கேன் . குளிக்க போகிறேன் …” பனியனை சுழட்டிய வெற்று மார்புடன் அவன் டிராக் சூட்டில் கை வைக்க சாத்விகா விழுந்தடித்து வெளியே ஓடி வந்துவிட்டாள் .அன்றைய நினைவு இன்று ஏனோசிலிர்ப்பை வரவழைக்க  , இதழ் பிரிய புன்னகைத்தபடி அறைக்கதவை தள்ளியவள் திடுக்கிட்டாள் ்கதவு அழுத்தமாக பூட்டப்பட்டிருந்த்து .எல்லா அறைகளின் சாவிகள் மாட்டப்பட்டிருந்த ஸ்டாண்டில் போய் பார்த்தாள் .வீரேந்தரின் அறை சாவியை மட்டும் காணவில்லை .எவ்வளவு தைரியமிருந்தால் இவன் அறையை பூட்டி சாவியை எடுத்து போயிருப்பான் .கோபம் தலைக்கேற சாத்விகா வீரேந்தர் எண்களை போனில் அழுத்தினாள் .

அவன் வழக்கம்போல் அழைப்பை கட் செய்தான்.

” யோவ் எங்கே இருக்கிறாய் …? ” காட்டமாய் மெசேஜ் அனுப்பினாள் .

” ரூம்  பூட்டி சாவியை  கொண்டு வந்துவிட்டேன் .வீணாக முயற்சிக்காதே …” என அவன் பதில் மெசேஜ் அனுப்பினான் .

” உன் தலையில் இடி விழ …” என பதில் அனுப்பிவிட்டு கோபத்துடன் கதவை ஒரு உதை விட்டு விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .கொதிக்கும் கோபத்தை கொஞ்சநேரம் பால்கனியில் உலாத்தி ஆற்றி விட்டு ,குளித்து முடித்து கீழே இறங்கி வந்தபோது அப்போதுதான் எழுந்து குளித்து வந்த்து போன்ற புத்துணர்ச்சி தோற்றத்துடன் டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்து கொண்டிருந்த வீரேந்தரை ஆச்சரியமாக பார்த்தாள் . இவன் எப்போது வந்தான் ….? எக்போது குளித்தான் …?

கருநீல நிற உடையில் இருந்தான் வீரேந்தர் .அது அவர்கள் B.T நிறுவன யூனிபார்ம் .அந்த உடையில் இருந்தால் அவன் டியூட்டியில் இருக்கிறான் என்று அர்த்தம் .நேற்று இரவு முழுவதும் எங்கோ டியூட்டியில்தான் இருந்திருக்க வேண்டும் .திரும்பவும் அங்கே போகத்தான் அதிகாலை கிளம்பியிருக்கிறான் போல.அந்த அடர் நிற உடை அவனது சந்தன நிறத்தை தூக்கலாக காண்பிப்பதை ஓரக்கண்ணால் பார்த்தபடி ,இவனுக்கெதற்கு இவ்வவளவு நிறம் …மனதிற்குள் பொறாமைபட்டுக் கொண்டு  தட் … தட்டென பாதங்களை அழுத்தி வைத்தி தன் வருகையை உணர்த்தியபடி வந்த சாத்விகாவை வீரேந்தரோ அவனுடன் பேணியபடி இருந்த சக்கரவர்த்தியோ திரும்பியும் பார்க்கவில்லை .

” என்ன பூமி அதிருது …? ” நக்கலாக கேட்டவள் இட்லியை பரிமாறிக் கொண்டிருந்த சந்திரிகாதான் .அவளை அலட்சியப்படுத்தி கிச்சனுக்குள் போன சாத்விகா தோசை ஊற்றிக் கொண்டிருந்த சாந்தினியை பார்த்தாள் . இவள் …நேற்று…வஹீப்புடன் …அவளிடமே கேட்கலாமே …

” சாந்தினி நேற்று வஹீப் தண்ணீர் குடிக்க உள்ளே வந்தாரோ …? ” குறும்பாக கேட்டபடி அவளை உற்று பார்த்தாள் .தடுமாறிய சாந்தினி ,வெளியிலிருந்து சந்திரிகா கூப்பிடவும் ,” மேடம் க்கு தோசை …” உளறியபடி தோசையுடன் ஓடிவிட்டாள் .

அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த தோசை கல்லை பார்த்ததும் மாவு சட்டியை கையிலுடுத்துக் கொண்டு தானே தோசை வார்க்க ஆரம்பித்தாள் சாத்விகா .

” அந்த ஹெலிகாப்டர்களில் சில மாறுதல்கள் செய்ய வேண்டியதிருக்கும் வீரா .நீ ஜெனரலிடம் பேசிவிடேன் …” சக்கரவர்த்தி சாப்பிட்டபடி சொல்ல …

” பேசிவிட்டேன்பா …ஏன் அந்த ஹெலிகாப்டர்களை நமது படைகளுக்காக மறுக்கிறோம் என்ற  டீடெயிலான காரணங்களை தெளிவாக எழுதி அந்த ஹெலிகாப்டர் கம்பெனிக்கு அனுப்பி வைக்குமாறு ஜெனரல் சொல்கிறார் .நமது நிறுவனத்திற்கு இவர்கள் முதலில் நான்கு ஹெலிகாப்டர் அனுப்பட்டும் ்நாம் உபநோகித்து பார்த்துவிட்டு பிறகு அவற்றை ஜெனரலிடம் சிபாரிசு செய்வோம் …” B.T safers நிறுவனத்திற்காக வாங்கப்பட போகும் ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்காகவும் சிபாரிசு செய்யும் நோக்கத்தில் பேசிக்கொண்டிருந்த வீரேந்தரின் தட்டில் தோசையை பவ்யமாக கொண்டு வந்து வைத்தாள் சாத்விகா .

தந்தையுடன் பேசியபடி குனிந்து தட்டை பார்த்த வீரேந்தர் மிரண்டான் . நிமிர்ந்து சக்கரவர்த்தியை பார்க்க அவர் எனக்கென்ன என்பது போல் தன் தட்டில. குனிந்து கொள்ள  ,சந்திரிகா உச்சு கொட்டி தலையில் கை வைத்தாள் .வீரேந்தரின் தட்டிலிருந்த தோசை மிகச் சரியாக திட்டமிட்டு சுற்றிலும் கருக்கி எடுக்கப்பட்டிருந்த்து .

” சாப்பிடுங்க  , அடுத்த தோசை கொண்டு வர்றேன் …” பாசமாக அவன் தட்டில. சட்னி , சாம்பார் ஊற்றிவிட்டு சாத்விகா ஒயிலாக உள்ளே நடந்தாள் .

தந்தையோ , தாயோ தனது உதவிக்கு வரப்போவதில்லை என அறிந்த வீரேந்தர் ,தானே எழுந்து எட்டி சாத்விகாவின் கையை பிடித்தான் .அவளை இழுத்து வந்து தட்டின் முன் நிறுத்தியவன் …

” என்னடி இது …? ” என்றான் .

” ம் …தோசை .என் ஆசை கணவருக்காக நிறைய நெய்யெல்லாம் ஊற்றி நானே பக்குவாக சுட்டெடுத்தது …”




” கொஞ்சம் கவனமாக சுட்டிருக்கலாமேம்மா …” சக்கரவர்த்திமெல்ல  குரல்
கொடுக்க ,

” அடுத்த தோசை உங்களுக்கு ஊற்றட்டுமா …? ” என்ற சாத்விகாவின் பாச குரலில் அவர் பதறி தலையை குனிந்து கொண்டார் .

” ஏய் …இதை இப்போ நீதான் சாப்பிட போகிறாய் .வாயை திறடி ..” வீரேந்தர் தோசையை பிய்த்து சாத்விகாவின் வாயினுள் திணிக்க வர ,அவள் வாயை இறுக மூடிக்கொண்டாள் .வீரேந்தர் விடாமல் அவள் வாயை திறக்க முயல தோசை சிதறி அவர்கள்  உடலெல்லாம் விழுந்த்து .கொஞ்ச நேரம் இவர்களை வேடிக்கை பார்த்த சந்திரிகா எழுந்து …

” போதும் இடமெல்லாம் பாழாகுது .போய் சுத்தப்படுத்திட்டு வாங்க .நான் வேறு தோசை சுட்டு வைக்கிறேன் …,” என தட்டை பிடுங்கி கொண்டாள் .ஒருவரையொருவர் முறைத்தபடி இருவரும் பாத்ரூமுக்குள் நுழைந்தனர் .

டவலை தண்ணீரில் நனைத்து உடையின் மேல் விழுந்த உணவு பிசிறுகளை துடைத்தபடி திரும்பிய சாத்விகா சற்று தள்ளி நின்று அதே போன்று துடைத்து கொண்டிருந்த வீரேந்தரை பார்த்தாள் .சற்று முன் மடிப்பு கலையாமல் அழகாக இருந்த அவனது யூனிபார்மில்  இப்போது அங்கங்கு வழுந்திருந்த கறைகள் அவள் மனதை நெருட , தன் கையிலிருந்த நனைந்த டவலால் அவனது உடையை துடைக்க ஆரம்பித்தாள் .

தன் தோள்களை பற்றி கறையை துடைத்துக் கொண்டிருந்த  சாத்விகாவின் கரங்களை கவனிக்காத்து போல் தானாகவே சுத்தம் செய்து கொண்டிருந்தான் வீரேந்தர் . ஆனால் தனது அருகாமையில் வீரேந்தரின் உடலில் ஓர் இளக்கம் உண்டாவதை மிக அருகே நின்றிருந்த சாத்விகாவால் உணர முடிந்த்து . இரும்பு மனிதனென பெயரெடுத்த , மதில் சுவராய் நிமிர்ந்து எதிரிகளை துவம்சம் செய்யும் தன் கணவன்  …தனது சிறிய அருகாமைக்கு இளகுகிறானென்றால் …சாத்விகாவின் பெண்மை பெருமை கொண்டது .தோள்களை வளைத்துகணவனை  அணைத்து கொள்ள துடித்த தன் கைகளை சிரம்ப்பட்டு கட்டுப்படுத்தினாள் .

நொடியில் சாத்விகாவின் நெகிழ்வையும் , உடனடியாக அவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டதையும் உணர்ந்த வீரேந்தர் ,” உன்னை சிறு பிள்ளை , விளையாட்டு புத்தி என அனைவரும் நினைக்கிறார்கள் ்ஆனால் உனக்குள் ஒளிந்திருக்கும் வைராக்கியத்தைநும் , திட்டமிடுதலையும் நான் மட்டும்தான் அறிவேன் …” என்றான் .

இதையெதற்கு இப்படி மென்மையாய்  காதல் வசனம் போல் சொல்லி தொலைகிறான் …அவன் மென் குரல் உடலில் ஏற்படுத்திய சிலிர்ப்பலைகளை மறைக்க , ” அன்று தோளில் ஏதோ தழும்பு இருந்த்தே .என்ன தழும்பு அது …? ” நுனிக்கால்களால் எட்டி அவன் தோளில் சிதறியிருந்த சிறு உணவுத்துணுக்கை சுத்தம் செய்தபடி கேட்டாள் .

” துப்பாக்கி இடித்த தடம் , முன்னால் சுடும்போது துப்பாக்கி பின்வாங்கும் .அதனை இங்கே தாங்க வேண்டும் ” தோள்களை தட்டி காண்பித்தான் .

” ஓ…எவ்வவளவு அழுத்தமான தழும்பு …ரொம்ப வலி க்குமில்லையா …? ” சாத்விகாவின் கரங்கள் கணவனின் தோளை வாஞ்சையாய் வருடியது .

” இது ஒரு தழும்பா …? இன்னமும் நிறைய தழும்புகள் என் உடலில் இருக்கின்றன. உனக்கு சரியென்றால் காட்டுகிறேன் …” வீரேந்தர் சாத்விகாவின் மேலிருந்த கறைகளை சுத்தம் செய்ய தொட்ங்கியிருந்தான் .வாய் , கன்னம் , கழுத்து , தோள் …என அவன் கைகள் வேலையை தொடர… தீப்பொறிகளை ரத்த நாளங்களுக்குள் செலுத்திக் கொண்டிருந்த அவன் தொடுகைகளில் த டுமாறினாள்  சாத்விகா .

இல்லை ….இவன் என்னை பலவீனப்படுத்த பார்க்கிறான் .நான் இவனிடம் மயங்க்கூடாது , அடங்க்கூடாது …மந்திரம் போல் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்ள ஆரம்பித்தாள் .வீரேந்தரின் கை அவள் கழுத்தை வருடி அவள் சேலையினுள் கிடந்த தாலி செயினை வெளியே எடுத்து மார்பு மீது படர விட்டது .அவர்களுக்கிடையே இருந்த உறவை நினைவுறுத்துபவன் போல் தாலி செயினின் மீது ஒற்றை விரலால் ஊர்வலம் வந்தவனின் விரல்களை தடுத்து நிறுத்தினாள் சாத்விகா .கணவன் மனைவக்கான இந்த நெருக்கமான நிலை அவளுக்கு வஹீப்பைநும் , சாந்தினியையும் நினைவுபடுத்தியது .

” சாந்தினியும் , வஹீப்பும் லவ் பண்றாங்களோ ….? ” தடுமாறிக் கொண்டிருந்த தனது மனதையும் நிலைப்படுத்த சூழ்நிலையை வேறுபுறம் திருப்பனாள் . வீரேந்தரின் கரம் ஸ்தம்பித்தது .

” அப்படியா …? எதை வைத்து அப்படி சொல்கிறாய் …? “

” நேற்று தோட்டத்தில் அவர்கள் இருவரும் …இ…இப்படி நின்றிருந்தார்கள் …”

” எப்படி …? “

” அ…அது …இதோ ..இப்படி …நா…நாம் நிற்பது போல் ….” விளக்கம் சொல்ல முடியாமல் தடுமாறிய சாத்விகாவின் குரல் வீரேந்தரை பாதிக்கவில்லை . அவன் முகம் யோசனைக்கு போயிருந்த்து .

” ம் …தப்பாச்சே …” என்றான் .

” ஏன் …லவ் பண்றது தப்பா …? “




” நாம லவ் பண்றது தப்பல்லை .அவங்க லவ் பண்ணினால்…. அது நிச்சயம் தப்புதான் …” வெளியே நடக்க தொடங்கினான் .

” நான் ஒண்ணும் உங்களை லவ் பண்ணலை ” அவன் முதுகிறகு குரல் கொடுத்தாள் .

” ஷ் …தப்பித்தேன்  ” முதுகை காட்டியபடியே கையை மட்டும் பின்னால் நீட்டி அசைத்து  சொல்லிக்கொண்டு போய்விட்டான் .

கையிலிருந்த டவலை அவன் போன திசையில் எறிந்தாள் சாத்விகா .நிஜம்தான் நான் இவனை லவ் பண்ணவில்லை .தனக்குதானே உரக்க சொல்லிக்கொண்டாள் .அவளுக்கு ஆரம்பித்திலிருந்தே இந்த சந்தேகம் இருந்த்து .இவனை லவ் பண்ணினால் இவனோடு எப்போதும் ஒத்து போயிருப்பேனே .ஆனால் இவன் என்ன சொன்னாலும் உடனே அதை எதிர்த்து ஏதாவது செய்ய வேண்டுமென்றுதானே தோணுகிறது .உண்மையில் காதல் இருப்பவர்கள் இப்படியா நடந்து கொள்வார்கள் …என நினைத்து கொண்டாள் .

இவனுக்கு ஒரு காதல் அமையவில்லையென்றால் , காதலிப்பவர்கள் எல்லோரையும் தடுப்பானா…???சாத்விகாவின் எண்ணம் சரியென்பது போல் , சக்கரவர்த்தியின் அறைக்கிள்ளருந்து வெளியே வந்த சாந்தினியின் முகம் மிக கலக்கத்திலிருந்த்து .ஆதரவோடு தோள் தொட்ட சாத்விகாவின் கைகளை பற்றியபடி அவள் அழவே ஆரம்பித்தாள் .

” காதலிப்பது தப்பா மேம்சாப் .மதத்தை காரணம் சொல்லிகாதலை தடுக்கலாமா …? விம்ம ஆரம்பித்தாள் .

What’s your Reaction?
+1
13
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!