karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 15

15

அள்ளி எடுக்க எடுக்க விரலிடுக்கு வழியே

ஒழுகிக்கொண்டிருக்கும் இந்த வாழ்வில்

எதை எப்படி சொல்லி

என்னை மீட்க போகிறேன் நான் ?

தலையில் பாறாங்கல்லை வைத்தது போல் கனக்க , கண்களை திறக்க முடியவில்லை .முயன்று திறந்த சாத்விகா அம்மாவின் மடியில் இருப்பதை உணர்ந்தாள் .அவள் விழிகளை அசைக்கவுமே , தலையை வருட துவங்கிவிட்டன சௌந்தர்யாவின் கரங்கள் .திகு திகுதிகு்வென எரிந்த விழிகளை திறந்த போது அவள் கண்ணில் பட்டது சண்முகபாண்டியன்தான் .ஆறுதலாக அவள் கைகளை பற்றிக் கொண்டார் .

இந்த ஆறுதல்கள் அழுகையை வரவைக்க சத்தமாக விசும்பியபடி அழ ஆரம்பித்தாள் சாத்விகா .

” நோ பேபி …ப்ளீஸ் டோன்ட் க்ரை …ஐ கான்ட் டாலரேட் திஸ் ….”ச ண்முகபாண்டியனின் குரலில் மிகுந்த வேதனை .

” பாப்பா அழாதேடா .நீ அழுதால் எங்களால் தாங்கமுடியாதுடா …” சௌந்தர்யாவும் அழத் துவங்கினாள் .

” போதும் .இப்போ என்ன நடந்துடுச்சுன்னு இப்படி அழுதுட்டிருக்கீங்க எல்லோரும் .பாப்பா நீ முதல்ல எழுந்திரு ….” செல்ல அதட்டலுடன் உள்ளே வந்த கார்த்திக் கையில் ஜீஸ் வைத்திருத்தான் .

வலுக்கட்டாயமாக அம்மாவின் மடியிலிருந்து அவளை எழுப்பியவன் வாயில் ஜூஸ் தம்ளரை பொருத்தினான் .” முதல்ல இதை குடி …”

ஜில்லென்ற பானம் உள்ளிறங்க விசும்பல்கள் குறைந்து அழுகை நின்றது .பாதி ஜூஸில் சாரதாவின் அநாதை கழுதை வார்த்தை நினைவு வர சாத்விகாவின் உடல் அதிர்ந்த்து .அதை உணர்ந்து சௌந்தர்யா அவளை அணைத்துக் கொண்டாள் .

” அம்மா ….” என அவளிடம் சரிந்தவள் நிமிர்ந்து அவள் முகம் பார்த்து ” அப்படி கூப்பிடலாமில்லையா …? ” என்றாள் .சௌந்தர்யா வெடித்து அழ ஆரம்பிக்க சண்முகபாண்டியன் மகளை தன் தோளுக்கு மாற்றி அணைத்துக் கொண்டு …

” பேபி …யாரும் என்னவும் சொல்லிட்டு போகட்டும் .நீ என் பொண்ணுடா .என் உயிர் .இதில் என்றைக்கும் மாற்றமே கிடையாது …” தழுதழுத்தார் .

” அட..டா அப்பா என்ன இது இந்த சின்ன கழுதை எதையோ உளறுதுன்னு நீங்களும் அவளோடு சேர்ந்து உளறிக்கொண்டிருக்கிறீர்கள் ….”

” ஏய் யாரடா கழுதையென்றாய் …? ” சாத்விகா தனது வழக்கமான சுட்டித்தனத்திற்கு மாற …

” உன்னைத்தான்டி சொன்னேன் கழுதை …”

” நீதான்டா கழுதை …பன்னி …எருமை …எல்லாம் நீதான் ….” வேகமாக எழுந்து அண்ணனை அடித்தவள் …திடீரென நிறுத்தி ….

” சாரி அண்ணா ….” என தளர்ந்து அமர்ந்தாள் .




” என்னடி பயந்து போய் உட்கார்ந்துட்ட …? தோத்துடுவோம்னு நினைச்சுட்டியா …? வர்றியா போட்டு பார்க்கலாம் ….” தன் புஜங்களை தட்டி மேலும் அவளை வம்புக்கிழுத்தவன் , அவள் சோர்வுடன் வெறுமை பார்வை பார்க்கவும் , அவளெதிரில் மண்டியிட்டான் .

” பாப்பா என்ன இது …? “

” நான் அநாதையாப்பா …? என்னை குப்பைத்தொட்டியிலிருந்து எடுத்து வந்து வளர்த்தீர்களாம்மா …? யாரோ ஒரு பொண்ணை உன் தங்கையாக ஏற்றுக் கொண்டாயா அண்ணா …? “

மூவருக்கும் கேள்விகளை கேட்டுவிட்டு முகத்தை மூடி அழுதாள் .

” இல்லை பேபி .நீ குப்பைத்தொட்டி குழந்தை இல்லை .ஒரு உயர்ந்த பெண்ணிற்கு பிறந்தவள் “

” நீயும் உயர்ந்த பெண்தான் பாப்பா …”

” என் அம்மா  , அப்பா யார் …எனக்கு தெரியவேண்டும் அப்பா .சொல்லுங்கள் ப்ளீஸ் …”

” நீ என் சிநேகிதன் மகள் பேபி .ஒரு விபத்தில் உன் தாயும் , தந்தையும் இறந்துவிட , மற்ற சொந்தக்கார்கள் உன் பொறுப்பை ஏற்க தயங்க , நாங்கள் உன்னை ஏற்றுக் கொண்டு இங்கே அழைத்து வந்தோம் பேபி …”

” அன்றிலிருந்து இன்று வரை உன்னை என் வயிற்றில் பிறந்த பெண்ணாகத்தான் நினைக்கறேன் பாப்பா ….”

” நானும் உன்னை என் தங்கையாகத்தான் நினைக்கிறேன் பாப்பா …”

தன்னை சுற்றியமர்ந்து தனது சோகத்தை போக்க துடித்தபடியிருந்த சொந்தங்களை கண்டு நெகிழ்ந்த சாத்விகா , மூவரின் கரங்களையும் தன் கைகளால் சேர்த்து பிடித்துக் கொண்டாள் .

” எ…என்னை விட்டு விட மாட்டீர்களே …” கண் கலங்க கேட்டாள் .மூவரும் அவளை அணைத்துக் கொண்டனர் .
ஆயிரம் வார்த்தைகளை அந்த ஓர் அணைப்பு சொல்லியது .

—————-_

” என்னை மன்னித்துவிடுங்கள் பாட்டி …” ரங்கநாயகியின் கைகளை பிடித்துக்கொண்டாள் சாத்விகா .அவளுக்கு ரங்கநாயகியின் முகம் திருப்பல்கள் இப்போது புரிவது போலிருந்த்து .ஏதோ ஓர் அநாதை பெண்ணை வீட்டிற்குள் அழைத்து வந்து வளர்ப்பதில் அம்மா , அப்பா , அண்ணாவிற்கு இருக்கும் பக்குவம் பாட்டிக்கு இல்லாத்து புரிந்த்து .

” ம் ….முதலிலேயே இதைத்தான் நான் சொன்னேன் .உன் நிலைமையை சொல்லி வளர்க்க சொன்னேன் .அப்படி வளர்த்திருந்தால் இன்று இந்த பிரச்சினை வந்திருக்குமா …? சரி …சரி விடு .இனியாவது உன் நிலைமை புரிந்து நடந்து கொள் …” ரங்கநாயகி பெரிய மனுஷியாய் அலட்சயம் காட்டினார் .சாத்விகா பலமாக காயப்பட்டாள் .




துடித்த உதடுகளை அடக்கியபடி தட்டிலிருந்த உணவை உள்ளே தள்ள முயன்றாள் .அது தொண்டையை விட்டு கீழிறங்க மறுத்தது .தண்ணீரை ஊற்றி விழுங்கியவள் …

” அப்பா …நா …நான் சு ..சுகுமாரை கல்யாணம் செய்து கொள்கிறேனப்பா …” என்றாள் .

சண்முகபாண்டியன் பதிலின்றி அவளை நிமிர்ந்து பார்க்க , ரங்கநாயகி முறைத்தார் .

” சுகுமாரா …நீதான் பெற்றெடுத்து பெயர் வைத்தாயா …? ஒழுங்காக அத்தான்னு கூப்பிடு .இப்போதே அவனிடம் மன்னிப்பு கேள் .அத்தோடு நாளையே சாரதா வீட்டிற்கு போய் மாப்பிள்ளையிடமும் , என் பெண்ணிடமும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் …” உத்தரவாக சொன்னார் .

” சரி பாட்டி …” மரத்த குரலில் ஒப்புதல் சொன்னவள் ” போதும்மா …வயிறு நிறைந்துவிட்டது …” தட்டில் நிறைந்திருந்த சாப்பாட்டை கொண்டு போய் குப்பையில் கொட்டி விட்டு கை கழுவினாள் .

What’s your Reaction?
+1
10
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!