mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 37

37

அந்த குன்று முழுவதும் பாறையால் ஆனதில்லை .ஆங்காங்கே பாறையும் …நிறைய மணலுமாகத்தான் இருந்த்து அது . மழை. நீரினால் அந்த குன்றின் மணல் நிறைய இடங்களில் அரித்து , சரிந்து இன்னமும் சில இடங்களில் சிறு ஓடையாக மழை நீர் ஓடிக்கொண்டிருந்த்து .

அந்த இடங்கள் கால் வைத்ததும் வழுக்க , பிடிப்பிற்காக பக்கத்திலிருந்த சிறு பாறைகளை பிடித்தபடி பாத்த்தை அழுத்தமாக ஊன்றி மேலேறினாள் மணிமேகலை .

தெய்வானைன்னு ஒருத்தர் இருந்தால் அவர்களை நான் நேரிலேயே சந்திக்கிறேன் ….மனதின் உறுதி உடலில் வெளிப்பட எஃகாக இறுகிய உடல் முறுக பலம் கூட வேக வேகமாக ஏறினாள் .இடறிய செருப்புகளை உதறிவிட்டாள் .கல்லும் , முள்ளும் பாத்த்தை பதம் பார்க்க உறுதி குலையாமல் ஏறினாள்

எதை தேடி போகிறாளென தெரியாது …எதற்கு போகிறாளெனவும் தெரியாது .ஆனால் தன் வாழ்விற்கான  விடை இங்கேதான் இருக்கிறதென தோன்ற மணிமேகலை ஏறிக் கொண்டிருந்தாள் .

வானம் திரும்பவும் மழை பொழிய போகிறேனென்ற அறிவிப்புடன் இடியும் , மின்னலுமாக முழங்கிக் கொண்டிருந்த்து .கொஞ்சம் பெரிய பாறை ஒன்றின் மீது மண்டி போட்டு ஏறி நின்ற மணிமேகலை சுளீரென்ற ஒளியும் , சலீரென்ற ஒலியுமாக வானுக்கும் அந்த குன்றுக்குமாக நீண்ட ஒரு மின்னலை தனக்கு வெகு அருகாமையில் கண்டாள் .

ஒரு கணம் சுற்றுப்புறம் இருள விழி மூடி திறந்த போது , கண்கள் சொருக தலை சுற்றத் தொடங்கியது .அவளது கை பிடிப்பு நழுவ அந்த பாறை மீதிருந்து விழத் துவங்கினாள் .

————–

அரை குறை உறக்கத்தில் இருந்த பார்த்தசாரதி ஒரு பயங்கர இடி சத்தத்தில் விழித்துக் கொண்டான் .மாதவி விழித்து விடாமல இருக்க சன்னலையெல்லாம் பூட்டி , விளக்கை அணைத்து அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டான் .

தூங்கிக் கொண்டிருந்த தங்கைகளை பார்த்து விட்டு , சிறு தயக்கத்துடன் மாடி ஏறினான் .தாயையும் , தங்கைகளையும் ஏதோ கொஞ்சம் சாப்பிட வைத்திருந்தான் .மணிமேகலையை எதிர்கொள்ள தயங்கி அவளை விட்டிருந்தான் .இப்போது கொஞ்சம் பாலாவது குடிக்கிறாளா என கேட்போமா …அறைக்குள் எட்டிப் பார்க்க அவளை காணவில்லை .

பாத்ரூம கதவு திறந்திருக்க …மொட்டை மாடியில் உட்கார்ந்திருக்கிறாளா …வேகமாக படியேறினான் .வழக்கமாக மணிமேகலை அமரும் கைப்பிடி சுவர் வெறுமையாக இருக்க ….பார்த்தசாரதியின் மனதில் ஏதோ விபரீதம் பட்டது .

கண் நிமிர்ந்தவனின் பார்வையில் அந்த குன்று பட , சுரீரென ஓர் உணர்வு உடலில் பரவியது ….வேகமாக இறங்கி கீழே வந்தவன் அந்த குன்றை நோக்கி ஓடினான் .

குன்றின் கீழே கிடந்த , மணிமேகலை நழுவ விட்டிருந்த செருப்பு உன் சந்தேகம் நிஜம்தானென அறிவிக்க , அடுத்து ஒரு விநாடி கூட யோசிக்காமல் அந்த குன்று ஏற தொடங்கினான் .

நின்றிருந்த மழை மீண்டும் பெய்ய தொடங்கியிருக்க பார்த்தசாரதியின் மலையேறல் மிக கடினமாக இருந்தது .ஆனால் அது அவனுக்கு ஒரு பொருட்டாக இல்லை .கை கால்கள் சிராய்க்க சிராய்க்க வெறி கொண்டவன் போல் ஏறினான் .

” மேகா …மேகா ….”

” நீ எங்கே இருக்கிறாய் …? “

” நான் சொன்னது தப்புதான் .அதற்காக மன்னித்து விடு …”

” என்ன கோபம் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து விட்டு வந்து விடு மேகா ….”

ஏறியபடி இப்படி பலவாறாக கத்தினான் .

கிட்டதட்ட குன்றின் உச்சிக்கு வந்து விட்டான் .இது வரை மணிமேகலையை காணவில்லை .

மாடம் போல் குவிந்து சேர்ந்திருந்த இரு பெரிய பாறைகளின் அருகே வந்து நின்றான் .

” மேகா …நான் உன் பார்த்தன் வந்திருக்கிறேன் . என் குரல்  கேட்கிறதா …? எங்கிருக்கிறாய் மேகா ….நான் உச்சியில் அந்த இரண்டு பெரிய பாறைகளின் இடுக்கில் இருக்கிறேன் ….உடனே வா மேகா ….”




” நீயில்லாமல் என்னால் வாழ முடியாது மேகா .ப்ளீஸ் வந்து விடு …”

சூறைக்காற்றும் , கொட்டும் மழையையும் தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை .

” நீயில்லாத வாழ்க்கை எனக்கு வீண் மேகா .நான் உன்னை என் உயிரை விட அதிகமாக விரும்புகிறேன் மேகா .வந்து விடு மேகா ….” உயிரை உருக்குவதாக இருந்த்து பார்த்தசாரதியின் குரல் .

இப்போது அவன் குரலுக்கு பதில் வந்த்து ….

” ஓ …நான் நல்லாயிருக்கிறேன் டாட் . இங்கே இலஞ்சியில்தான் இருக்கிறேன் ….ஓ …அதுவா …இங்கே ஒரே மழை டாடி .இடி …மின்னல் …அந்த சத்தம்தான் உங்களுக்கு கேட்கிறது ….”

எந்த பிசிறுமில்லாமல் கணீரென்று கேட்டது மணிமேகலையின் குரல் .பார்த்தசாரதி  உடல் துழுவதும் நிரம்பிய பரவசத்துடன் குரல் வந்த பக்கம் கணித்து திரும்பினான் .

குரல் அந்த பாறை இடுக்கினுள் இருந்து வந்த்து .அதனுள் எட்டி பார்த்தான் .கொஞ்சம் அகலமாக மழை நீர் படாமல் சிறு கூடாரம் போல் பாதுகாப்பாக இருந்த்து அந்த இடம் .அங்கே வசதியாக பின்னால் சாய்ந்து அமர்ந்து காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு போனில் பேசிக் கொண்டிருந்தாள் மணிமேகலை .

அவனை பார்த்தும் பார்க்காத்து போல் தன் போன் பேச்சை தொடர்ந்தாள் .

” அம்மா எப்படி இருக்கிறார்கள் டாடி …? இல்லை …இல்லை தூங்கினால் எழுப்ப வேண்டாம் .நான் காலையில் கால் பண்ணி அம்மாவுடன் பேசுகறேன் ….”

பார்த்தசாரதி தலை குனிந்து அந்த இடுக்கினுள் நுழைந்து அவளருகே அமர்ந்து கொண்டான் .மணிமேகலை அவனை கண்டு கொள்ளாமல்  கால்களை ஆட்டியபடி பேசியபடி இருந்தாள் .

” இல்லை டாடி நிச்சயம் காலையில் கால் பண்றேன் .இங்கே டவரே கிடைக்க மாட்டேங்குது .அதனால்தான் நினைத்த நேரம் பேச முடியவில்லை …”

பார்த்தசாரதி தன் நீள கால்களை மடக்கி உட்கார்ந்து அவளை பார்த்தபடி இருந்தான் .

” ம்….ஓ …அப்படியா …சரிதான் ….” வேண்டுமென்றே தேவையில்லாத ஊர் உலக கதையையெல்லாம் இழுத்து தன் அப்பாவுடன் பேசி முடித்து விட்டு நிதானமாக தன் போனை கட் செய்தாள் .பின் அதனை இடுப்பில் சொருகிக் கொண்டு வெளியே பொழிந்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்க்க துவங்கினாள் .

” மேகா ….”

” ஏய் …”

” இந்த இடி சத்தத்தில்  உனக்கு காது செவிடாகி விட்டதோ ….? ” கோபம் பாதி …தாபம் பாதியுமாக அவள் காது மடல்களை பற்றிய பார்த்தசாரதியின் கைகள் அவளது உடல் ஸ்பரிசம் உணர்ந்தவுடன் கோபமெல்லாம் காணாமல் போய் தாபமும் , மோகமும் மட்டுமே உடல் முழுவதையும் பற்றி எரிக்க , இழுத்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்கினான் .

இவ்வளவு வேகமான அவனது அணைப்பை எதிர்பார்த்திராத மணிமேகலை திணறினாள் .அவனை தள்ள முயன்றாள் .ஆனால் இம்மி கூட அவனிலிருந்து விலக முடியவில்லை .

நெற்றி வகிட்டில் ஆரம்பித்து வரிசையாக அவள் மீது முழுவதும் பதிய ஆரம்பித்தன அவன் இதழ்கள் .அந்த இடைஞ்சலான இடம் அனுமதித்த அளவு அவளை அள்ளி தன்  மடியில்  அமர்த்தி தன்னுள்ளேயே  பொதித்து பொள்பவன் போல் ஆவேச ஆலிங்கனம் கொண்டான்.

மூச்செடுக்க திணறி …தவித்து ….அவனது தொடர் செய்கைகளின் தீவிரத்தில் உடலோடு மனமும் வெட்கமும் கூச்சமுமாக சிவக்க , முதலில் தடுமாறிய மணிமேகலையின் தேகம் ….பின் கொஞ்சம் கொஞ்சமாக அவனது அணைப்புகளையும்  …அழுத்தங்களையும் புரிந்து , மெல்ல ….மெல்ல இயற்கையாக அவனது வேகத்திற்கேற்ப ஒத்துழைக்க தொடங்கியது .

இந்த புரிதலில் வேகம் கூடிய பார்த்தன்  இன்னும் ….இன்னுமென தீவிரமாக அவளுள் மூழ்க தயாராக , மணிமேகலையின் பெண்மை விழித்துக் கொண்டது .

அவனது உதடுகளுக்குள் சிக்கி கிடந்த தன் இதழ்களை அரும்பாடு பட்டு பிரித்துக் கொண்டவள் , சுதந்திரமாக அவள் உடலில் ஊர்ந்து கொண்டிருந்த அவன் கைகளையும் தடுத்தாள்.

” ஏய் …போடா …உன் மனது முழுவதும் உன் முதல் பொண்டாட்டியை வைத்துக் கொண்டு , என்னோடு இ….இப்படி …நடந்துகொள்வாயா …? தள்ளிப் போ ….”

” முதல் பொண்டாட்டியா …அது யாரது …என்னுடைய ஒரே பொண்டாட்டி நீதான்டி …” அவளது விலகலை அலடசியம் செய்து மீண்டும் அவள் மேல் படிந்து அப்பிக் கொள்ள முயன்றான் .

உருண்டு வெளியே போக முனைந்தவளை ” ஏய் …வெளியே மழை ….” சொல்லியபடி இடை வளைத்து மீண்டும் தன் கீழ் இழுத்துக் கொண்டான் .

” ஒண்ணும் வேண்டாம் .உனக்கு அந்த சுனந்தாதானே பிடிக்கும் .நீ என்கிட்ட வர வேண்டாம் .போ …போ…” அவன் மார்பில் குத்தினாள் .

” என் பொண்டாட்டி கிட்ட வராமல் யார் கிட்ட போவேன் …? “

” நீதானே என்னை இங்கிருந்து போக சொன்னாய் ….இப்போது எதற்கு இப்படி வந்து ஒட்டுகிறாய் …? விடு …”




” நான் போக சொன்னால் அதற்காக முட்டாள்தனமாக இந்த குன்றின் மீது ஏறுவாயா ….? ” பார்த்தசாரதியின் குரலில் கோபம் வந்திருந்த்து .அவள் தலை முடிக்குள் கையை நுழைத்து  பிடித்து ஆட்டினான்

” வேறு நான் என்ன செய்ய …? நீங்கள் உங்களை விட்டு போக சொல்லிவிட்டீர்கள் .சும்மா போவதற்கு பதிலாக உங்கள் குடும்பத்தில் இந்த குன்று பற்றி ஊறிக் கிடக்கும் மூட நம்பிக்கையையாவது போக்கி விட்டு போவோம் …இல்லை அந்த குன்றிற்கே பலியாகி விடுவோமென ….”

மேலே பேச விடாது அவள்  இதழ்களை அழுத்திய அவன் உதடுகளில் திணறினாள் .

” பதில் பேச முடியலைன்னா …சும்மா …சும்மா …முத்தமா ….? ” முணுமுணுத்தாள் .

” உன்னை பார்த்த நாள் முதலாக கொடுக்க முடியாமல் சேர்த்து வைத்திருந்த முத்தங்கள் . இனி நீ எவ்வளவு தடுத்தாலும் நிற்காது ….” சொன்னதையே செய்பவன் போல் மீண்டும் தன் இதழொற்றல்களை ஆரம்பித்து விட்டான் .

” என்ன …பார்த்த நாள் முதலா …? “

” ம் …மயங்கி கிடந்த உன்னை கைகளில் தூக்கிக் கொண்டு நடந்தேனே …அன்று முதல் …”

” பார்த்தா …? ” ஆச்சரியத்தை  கொட்டியது மணிமேகலையின் குரல. .

” நிஜம்தான் மேகா ….அன்றிலிருந்து இன்று வரை என் மனதில் நீதான் இருக்கிறாய் .உனக்கேற்ற வாழ்வு என்னுடைய வீடில்லை எனும் எண்ணம் எனக்கு .அதனால்தான் என் ஆசையை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டேன் .அன்று நீ போன் நம்பர் கேட்ட போது கூட இனி நமக்குள் தொடர்பு  வேண்டாமென்றுதான் மறுத்தேன் .ஆனால் கங்காவின் வாழ்வு துயரமானதும் , அந்த துக்கத்தை  உடனடியாக உன்னோடுதான் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று என் மனம் விநோதமாக அடம்பிடித்தது . வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் அப்போது உன் மடியில் படுத்து என் தங்கை வாழ்வு அவலத்தை சொல்லி அழத் தோன்றியது ….” பார்த்தசாரதியின் குரல் தழுதழுக்க ..மணிமேகலை பதறி அவனை இழுத்து தன் மடியில் போட்டு மார்போடு இறுக அணைத்துக் கொண்டாள் .

கொஞ்ச நேரம் பேச்சின்றி கழிய …பார்த்தசாரதி திரும்ப பேச ஆரம்பித்தான் .

” தெய்வாதீனமாக உன்னை மீண்டும் சந்தித்தேன் .நீ நம் வீட்டிற்கே வர …அதுவும் என் மனைவியாக வர எடுத்த முடிவை இதோ இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை .அன்று காருக்குள் வைத்து என் முகத்தை பார்த்தபடி தாலி அணிந்து கொண்டாயே ….அப்போதே என் மனதில் நீயே மனைவியாக நிலைத்து விட்டாய் .ஆனால் அப்போது உன் மனநிலை தெரியாததால் உன்னை விட்டு விலகியே இருந்தேன் .நிறைய படித்த , வசதியான குடும்பத்தை சேர்ந்த அழகான இளம் பெண்ணிற்கு ….கிராமத்தில் தங்கைகள் , தாய் என்ற கூட்டத்துடன் , மனைவியை இழந்து நிற்கும் ஒருவன் பொருத்தமானவன் இல்லையென்ற எண்ணம் …உன்னடமிருந்து என்னை தள்ளி நிறுத்திக் கொண்டே இருந்த்து …..”

” ஆமாம் …இப்போது வரை …அதற்கு காரணம் சுனந்தா என்பீர்கள் ….” மணிமேகலையின் மனக்காயம் ஆறவில்லை .

” அது …உன்னிடமிருந்து என்னை விலக்கி நிறுத்த நானே போட்டுக்  கொண்ட தடுப்பு …”

” அந்த சுனந்தாதான் என் மனதில் இருக்கிறாளென நினைத்துக் கொண்டீர்களா …? அல்லது உங்கள் குடும்ப சாபத்தை நம்பி அந்த சுனந்தா போல் நானும் பலியாகி விடுவேனென நம்பி விட்டீர்களா …? எதற்காக என்னை வீட்டை விட்டு போக சொன்னீர்கள் ….”

” அம்மா , கங்கா , யமுனாவின் பயம் எனக்கில்லை மேகா .ஏனென்றால் அந்த சாபம் என் வாழ்வில் வேலை செய்யவில்லை .ஆனால் வேலை செய்ய ஆரம்பித்து விடுமோ என் ற பயம் எனக்கு வந்திருந்த்து ….”

” ஐய்யோ ….கடவுளே ஒன்றும் புரியவில்லை .தெளிவாக சொல்லுங்கள் …” மணிமேகலை கத்தினாள் .

பார்த்தசாரதி தன் மன ரகசியங்களை வெளியிட ஆரம்பித்தான் .

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!