mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae -36

                                            36

அன்று காலையிலிருந்தே வானம் இருட்டியபடி மழைக்கான அறிகுறியை காட்டிக் கொண்டிருந்த்து .அவ்வப்போது சாரலும் , தூறலுமாக குற்றால மழை இங்கேயும் பொழிந்து மண் வாசனை மணத்துக் கொண்டிருந்த்து .

” என்னம்மா சொல்கிறீர்கள் ….? எனக்கு திருமணமா …? ” பார்த்தசாரதி பிசிறான குரலில் தாயிடம் கேட டான் .

” இன்னும் எத்தனை நாளுக்கடா நடித்து கொண்டிருப்பாய் …? “

” நடிப்பா ….அப்படி ஒன்றும் இல்லையே ….” தடுமாறி சமாளித்து விட்டு போக போன மகனின் கையை பிடித்து இழுத்து குனிய வைத்து உச்சந்தலையில் கொட்டினாள் மாதவி .

” நான் உன் அம்மாடா ….எத்தனை நாள் என்னிடமே நடிப்பாய் ….? “

” உங்களிடம் உளறிவிட்டாளா ….ஓட்டைவாய் …” பார்த்தசாரதியின் பார்வை தூரத்தில் ஏதோ வேலையாக பரபரத்திருந்த மணிமேகலையை தொட்டு தடவியது .

” நீயும் சேர்ந்து எல்லாம் செய்துவிட்டு , இப்போது அவளை மட்டும் சொல்கிறாயே ….? ” தாய் , மகன் இருவரின் பார்வையும் மணிமேகலை மீதிருந்த்து.

” உன் கையால் அவள் கழுத்துக்கு ஒரு தாலி வேண்டும் பார்த்தா ….” பார்த்தசாரதி மௌனமாக தாயை பார்த்தாள் .

திடுமென திரும்பி பார்த்த மணிமேகலை பட்டாம்பூச்சியாய் சிறகடித்து இவர்கள் அருகில் வந்துவிட்டாள் .

” இரண்டு பேரும் என்னை பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் …? “

” உனக்கு மூக்கில் வியர்த்துடுமே …” பார்த்தசாரதி அவள் மூக்கை பிடித்து  ஆட்ட அவன் கையை தட்டி விட்டு …விட்டு ….

” என்ன பேசுகிறீர்கள் ….?நல்லவிதமாகவா ….தப்பிதமாக …” கண்களை உருட்டி மிரட்டினாள் அவள் .

” உன்னை யாராவது தப்பாக பேச முடியுமா தாயே ….” மாதவி போலியாக அவளை புகழ்ந்து கொண்டிருந்த போதுதான் ….
வீட்டு டெலிபோன் அடித்தது .

அந்த ஊரில் செல்போன் டவர் அவ்வளவாக கிடைப்பதில்லை .எனவே இன்னமும் அதிகளவு  டெலிபோனையே பயன்படுத்தி வந்தனர் அவர்கள் .

சுப பொழுதில் கணகணவென அடித்த அந்தபோன்  மணி சத்தம் ஏதோ அபசகுனம் போல் தோன்ற , மூவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி தயங்கி நிற்க …பக்கத்து அறைக்குள்ளிருந்து   காவேரி வந்து போனை எடுத்தாள் .

ஒரே நிமிடம் தான் ….

” அண்ணா ….யமுனாக்காவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு ஆக்சிடென்டாம் ….” கத்தினாள் .

ஐந்தே நிமிடங்கள் தான் ….வீட்டின் சூழலே மாறியது .பார்த்தசாரதி  வேகமாக டெலிபோன் ரீசீவரை வாங்கி மேலே விபரங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே , வெளியே மழை வலுத்து பெரிய பெரிய தூறலாகி …கற் பாறைகளை கொட்டுவது போல் சடசடவென்ற சத்தத்தோடு பொழிய ஆரம்பித்தது .

திடுமென போன் கனெக்சன் கட்டாகிவிட , அடுத்த நிமிடமே கரெண்ட்டும் போய் வீடு ஒளி குன்றியது . மழையினால் பகலிலேயே இருள் சூழ்ந்து விட    இன்வெர்ட்டரின் உதவியால் சிக்கனமாக ஆங்காங்கே ஒளிர்ந்த மின் விளக்குகளால் வீடு பாதி இருளுடனும் ….அதிர்ந்து போய் கிடந்த வீட்டினருடனும் அமானுஷ்யத்தோடு அடர்ந்து போய் கிடந்த்து .

திடுமென வெடித்த அழுகையோடு மாதவி குலுங்க , அனைவரும் அவளருகே ஓடினர்.

” நாம் ஏமாந்துட்டோம் பார்த்தா .அந்த தெய்வா ஜெயிச்சுட்டா .அவளோட ஆக்ரோசம் குறையவே இல்லை. அவள் நம்மை பழி வாங்கி விட்டாள் .இந்த வீட்டிற்கு ஒரு நல்லது நடக்க அவள் விட மாட்டாள் ….” கத்தி அழுதாள் .

” அம்மா ….என்னம்மா …நீங்களா இப்படி …எத்தனையோ துயரங்களை கூட துளி கண்ணீர் இல்லாமல் கடந்து வந்தீர்களே ….இப்போது இப்படி கதறுகிறீர்களே …? ” தாயின் தோளணைத்து சமாதானபடுத்த முனைந்தான் .

” என்றாவது ஒருநாள் விடியும் என்ற நம்பக்கையோடுதான் இத்தனை நாட்களை கடந்து வந்தேன் .இனி எனக்கு அந்த நம்பிக்கை இல்லை .நம் குடும்பத்திற்கு அவள் சாபத்திலிருந்து விமோசனமே கிடையாது ….” மாதவி தன்னிலை இழந்து கதறினாள் .

” அத்தை நிறுத்துங்கள் .என்ன இது பைத்தியக்காரத்தனம் ….?இயல்பாக நடந்து விட்ட ஒரு விசயத்தற்கும் ….உங்கள் பழைய வாழ்விறகும் ஏன் சம்பந்தபடுத்துகறீர்கள் …? இது ஏதோ யதேச்சையாக நடந்து விட்ட சம்பவம்தான் .இதனை பெரிது படுத்தி நீங்கள் உடைந்து போய் விடாதீர்கள் ….” மணிமேகலை சமாதான படுத்த முனைந்தாள் .

” ஏய் வாயை மூடுடி …நீதான்டி காரணம் .நாங்கள் பாட்டுக்கு எங்கள் விதியை நொந்தபடி வாழ பழகியிருந்தோம் ்இடையில் நீதான் வந்து எங்கள் மனதில் ஆசையை தூண்டி விட்டு தப்பான பாதைக்கு எங்களை திருப்பி …தெய்வாவின் கோபத்திற்கு எங்களை ஆளாக்கி விட்டாய் .அவளது இந்த கோபம் இன்னும் யாரையெல்லாம் பழி வாங்க போகிறதோ .நீ போ …என் முன்னால் நிற்காதே …” மாதவி மணிமேகலையை பிடித்து தள்ள தொடங்கினாள் .

அனைவரும் அவளை தடுக்க முயல , அவர்களை தாண்டி அபரிதமாக இருந்த்து மாதவியின் வேகம் .மணிமேகலை அதிர!ந்து போய் நின்றாள் .

” பார்த்தா …அவளை போக சொல்லுடா …உடனே போக சொல்லுடா ….எனக்கு அவளை பிடிக்கலை ….” திமிறிய தாயை சமாளிக்க முடியாமல் ….

” நீ மாடிக்கு போ மணிமேகலை ….”

சொன்னவனை அதிர்ச்சியாக பார்த்தாள் .அவளது அதிர்ச்சிக்கு சமனம் சொல்ல அங்கே யாருமில்லை .அனைவரின் பார்வையும் மாதவி மீதே குவிந்திருக்க , மணிமேகலை தளர்ந்த நடையுடன் மாடி ஏறினாள் .




அம்மாவிற்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விட்டு , ஒரு மணி நேரம் கழித்து மாடிக்கு வந்தான் பார்த்சாரதி .

” அத்தை எப்படி இருக்கிறீர்கள் …? ” பரிதவிப்பான அவள் கேள்விக்கு பதிலாக ….

” நீ இங்கிருந்து கிளம்பு மணிமேகலை ….” என்றாள் .

எப்போதும் படபடவென பேசுபவள்தான் .இப்போது பேச்சன்றி உறைந்து நின்றாள் .

” என்ன சொன்னீர்கள் …? “

” இத்தனை நாள் எனக்காக , என் வீட்டினருக்காக இங்கே இருந்து நடித்தது போதும் .இத்தோடு உன் ப்ராஜெக்ட் முடிந!தது .நீ போகலாம் …”

மணிமேகலை துடித்து போனாள் .

” என் ப்ராஜெக்டா ….அப்படி நினைத்தா நான் இங்கு தங்கியிருந்தேன் ….? ” தழுதழுக்க ஆரம்பித்தது அவள்  குரல் .

” வேண்டாம் மணிமேகலை .நான் ஏற்கெனவே மிகவும் நொந்திருக்கிறேன் .நீ தைரியமான பெண் ….எந்த சூழலிலும் கலங்காமல் நிமிர்ந்து நிற்பவள் ்இப்போது அழுது என்னை மேலும் நோகடிக்காதே …” கெஞ்சலாய் ஒலித்த அவன்  குரலில் தன் துயரத்தை அடக்கி உதட்டை கடித்துக் கொண்டு அவனை வெறித்து பார்த்தாள் .

” இப்போது காற்றும் , மழையுமாக இருக்கிறது.இப்போது வேண்டாம் .   நாளை காலை உனக்கு காருக்கு ஏறபாடு செய்கிறேன் ….”

இவனால் எப்படி உடனடியாக திட்டங்கள் போட முடிகிறது ….? திடுமென தோன்றிய வேகத்துடன் எட்டி அவன் சட்டை காலரை பிடித்தாள் ….

” எவ்வளவு சுலபமாக வெளியேற்ற முடிவெடுக்கிறீர்கள் …? “

” ப்ச் …அம்மா மிகவும் வெறுத்து விட்டார்கள் .இனியும் நீ இங்கே இருப்பதில் எந்த பயனும் இல்லை ்இனி உன் வாழ்வை நீயே பார்த்துக்கொள் ….”

” என் வாழ்வா ….? அதில் உங்களுக்கு கொஞ்சம் கூட பங்கில்லையா பார்த்தா ….? “

” உன் வாழ.வில் எனக்கென்ன பங்கு …என் வாழ்வில் பங்கு பெற யாரெல்லாமோ விரும்பலாம் .அந்த சந்திரா முதல் நீ வரை …ஆனால் என் மனதில் எப்போதும் இருப்பது சுனந்தாதான் .இதனை நான் முன்பே உனக்கு சொல்லியிருக்கிறேன் .உன் மூளையில் ஏறியதா …என்றுதான் தெரியவில்லை .இனியாவது புரிந்து கொள் .என் வாழ்வை விட்டு விலகி விடு ….” உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு ….இறுக்கி அவன் சட்டையை பற்றியிருந்த அவள் கையை வலுக்கட்டாயமாக பிரித்து அவளை விட்டு விலகி நடந்தான் .

உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் மணிமேகலை அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டாள் .




மழை தனது ஆக்ரோசத்தை குறைத்து மெல்ல  சாரலான போது இரவு வந்திருந்த்து .மணிமேகலை ஒரு முடிவோடு எழுந்தாள் .

மாதவி அவள் அறையில் தூக்கத்தில் இருக்க , பார த்தசாரதி அவளருகே நாற்காலியில் உட்கார்ந்த படி கண்ணயர்ந்திருந்தான் .

மற்றவர்கள் ஆங்காங்கு அமர்ந்து அரை தூக்கத்திலே ….துக்கத்திலே கண் மூடியிருக்க மணிமேகலை சத்தமின்றி வீட்டின் பின்புறத்தை அடைந்தாள் .

” எதையும் பாதியில் விட்டு எனக்கு பழக்கமில்லை பார்த்தா ….” முணுமுணுத்தபடி அந்த குன்றை நோக்கி நடந்தாள் .

பசியோடிருக்கும் ஓநாய் வாய் பிளந்திருப்பது போல் உயர்ந்து நின்றிருந்த்து அந்த குன்று .

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!