mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 35

 35

” பயப்படாதீர்கள் அத்தை .குன்றை இடிக்கவில்லை .இதன் மேலிருக்கும் உங்கள் தோழியை சமாதானபடுத்த போகிறோம் …அவ்வளவுதான் ….” என்றபடி மணிமேகலை காட்டிய இடத்தில் நீளமாக செதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று கருங்கல் தூண்கள் இருந்தன .

குழி வெட்டி இரண்டு தூண்களை நட்டு வைத்தனர் வந்திருந்த ஆட்கள் .

” வாங்கம்மா …” அம்மாவையும் , தங்கைகளையும் அழைத்து அந்த மூன்றாவது தூணருகே சென்ற பார்த்தசாரதி …ஐவரையும் அந்த தூணை பிடிக்க வைத்தான் .தூணின் நடு பாகத்தை தூக்கி பெருமளவு கனத்தை தான் வாங்கிக் கொண்டவன் …

” அந்த தெய்வாம்மாவின் மனதில் பொங்கி கொண்மிருக்கும் , வஞ்சத்தையும் , வன்மத்தையும் சமனப்படுத்த இந்த சுமைதாங்கி கல்லை தூக்கி வைப்போம் .பாரமாய் நிற்கும் இந்த கல் பாரமேறி இருக்கும் அவர்கள் மனதை இலகுவாக்கும் . போரிலே ….வேறு அகால முறையிலே மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடையத்தான் அந்த காலத்தில் இது போன்ற சுமை தாங்கி கற்களை வைத்தார்கள் .இப்போது அதே முறையை நம்பிக்கையோடு நாமும் செய்வோம் ….”

பார்த்தசாரதியின் பேச்சில் முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும் , ஏதோ ஓர் உணர்வு உந்த எல்லோரும் தங்கள் மூச்சை பிடித்து அந்த பெரிய கல்லை தூக்கி நின்று கொண்டிருந்த அந்த தூணின் மீது வைத்தனர் .கையை அழுத்திய பாரத்தை இறக்கி வைத்ததும் மன பாரமும் குறைவதாக உணர்ந்தார்கள் .

சுமைதாங்கி கல்லின் அடியில் ஒரு மாடத்தை அமைத்தனர் .அதில் பெரிய அகல் விளக்கு ஒன்றை வைத்து அதற்கு எண்ணெய் ஊற்றி , திரி விட்டு மாதவியை ஏற்ற சொன்னாள் மணிமேகலை .

” இன்று முதல் உன்னை எங்கள் வீட்டு தெய்வமாக ஏற்றுக் கொளகிறோம் .பத்திரமாக எங்களை பார்த்துக் கொள் . என்று வேண்டிக் கொள்ளுங்கள் அத்தை .”மணிமேகலை சொன்னதை சிறு மறுப்பன்றி செய்தாள் மாதவி .அவளை பின்பற்றினர் காவேரி , யமுனா , கங்கா …மணிமேகலையும் .

ஐந்து பெண்களும் சேர்ந்து விளக்கேற்றி முடித்து , கண் மூடி தியானித்து நின்றபோது உண்மையிலேயே மனம் லேசானது போன்ற உணர்வு தோன்றியது .

” இப்போது ஓ.கேதானே யமுனா .இனி உனக்கு வரும் ஜாதகங்களுக்கு போன் செய்து பேசி திருமணத்தை நிறுத்த மாட்டாய்தானா …? ” மணிமேகலை யமுனா புறம் சாய்ந்து கிசுகிசுப்பாய்   கேட் க யமுனா வியர்த்தாள் .

” உ…உங்களுக்கு தெரியுமா ..?? “

” நன்றாக தெரியும் .வருகிற வரனையெல்லாம் நீ தட்டி விட்ட விதமும் தெரியும.காரணமும் தெரியும் …” யமுனாவின் மரியாதை பன்மையை மனதினிள் உணர்ந்து புன்னகைத்தாள் மணிமேகலை .

” கங்காவை போல் ஒரு விதவை வாழ்வை நான் விரும்பவில்லை .அதற்கு பதில் இப்படியே கன்னியாகவே காலம் முழுவதும் அம்மா , அண்ணனுடன் இருந்து விடலாமென்று நினைத்தேன் ….”

” இது தப்பாச்சே …பெண் பிள்ளைகள் நீங்கள் எல்லோரும் பிறந்தவிட்டிலேயே தங்கிவிட்டால் என் நிலைமை இங்கே என்ன ஆவது …? ” கேட்டவளை முதலில் முறைத்தவள் பிறகு சிரித்தாள் .

” இப்படி பேசிப் பேசியே …இந்த வீட்டை விட்டு போய்விட வேண்டிமென்று என்ற எண்ணத்தை எங்களுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள் ….”

” ஹப்பா …அந்த எண்ணம் வந்துடுச்சா …இதையே உன் அக்காவிடமும் சொல்லும்மா …மூன்று நாத்தனாரை வைத்து மேய்க்க என்னால் முடியாது .மூன்று பேரும் காலாகாலத்தில் வெளியேறிங்கள் …”




இந்தப் பக்கம் நின்ற கங்காவின் காதுகளில் தெளிவாக விழும்படி …யமுனாவையே சொல்ல சொன்னாள் .கங்காவின் முகமும் நம்பிக்கை புன்னகையை   பூசிக் கொண்டது .

” யமுனாவை அடுத்து நீங்கதான் அண்ணி வெளியேற வேண்டும் ….” கங்காவிடம் சொன்னாள் .

” இல்லை அண்ணி அக்கா மூத்தவர்கள. .முதலில் அவர்களை வெளியேற்றுங்கள் …” சொன்ன யமுனாவை திகைப்பாக பார்த்தாள் கங்கா .

” என்னது …நானா …? நான் …எ …எப்படி …எங்கே ….?”எனக்கேது போக்கிடம் என்ற  தடுமாற்றம் கங்காவின் குரலில் .

” நீதான் கங்கா .முதலில் உன் வாழ்வைத்தான் சரிப்படுத்த வேண்டும் ….இல.லையா அண்ணி …? ” கேட்டபடி அக்காவின் கை கோர்த்திக் கொண்டாள் .

” ஒரு வழியாக உன் வாயிலருந்து வந்து விட்ட அண்ணி என்ற இந்த அழைப்பிற்காக நான் இந்த கோரிக்கையை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன் …” மணிமேகலை மகாராணி பார்வையுடன் வரம் வழங்க தயாரானாள் .

” இவள் கூப்பிட்ட ஒரே ஒரு அண்ணிக்காக என் வாழ்க்கையை பணயம் வைப்பீர்களா …? இதோ நானும் கூப்பிடுகிறேன் .வேண்டாம் அண்ணி …என் மறுவாழ்வில் எனக்கு விருப்பம் இல்லை ….” கங்கா உறுதியாக கூற …

” அப்போது எனக்கு என் முதல் வாழ்விலேயே விருப்பமில்லை .அண்ணி  நிச்சயம் வீட்டுக்கு போய் அந்த பெங்களூர் வரனுக்கு போன் போட்டு பேச போகிறேன் ….” யமுனா அவளை விட உறுதியாக சொல்ல …

” என்னடி பேசுவாய் …? ” கங்கா பதட்டத்துடன. கேட்டாள் .

” உங்க சதுர மூஞ்சி பையனை எனக்கு பிடிக்கலைன்னு சொல்லுவேன் …”

” என்ன சதுரமூஞ்சியா …? “

” ஆமாண்ணி .அந்த பையன் மூஞ்சு அப்படித்தான் இருந்த்து .சதுரமாக …வரைந்து வைத்தது போல ….”

” அப்படியா சொல்கிறாய் .நான் இந்த அளவு கவனிக்கவில்லையே ….”

” அப்படித்தான் இருந்த்து .கூரான மூக்கு , ” ப ” வடிவ மீசை , குறுந்தாடி , சதுர மூஞ்சு .இப்படித்தான் அந்த பையன் இருந்தான் ….”

மணிமேகலை கங்காவின் தோள்களை இடித்து யமுனாவின் கவனத்தை அவளுக்கு சுட்டினாள் .

” அந்த பையனைத்தான் நான் வேண்டாம்னு சொல்ல போறேன் ….” யமுனா சொல்லவும் …கங்கா அவள் மீது பாய்ந்தாள் .

” இது என்னடி அநியாயம் …நிலையில்லாத என் வாழ்வுக்காக உனக்கு பிடித்த பையனை நீ ஏன் வேண்டாம்னு சொல்லனும் …? “

” எனக்கு பிடிச்சிருக்கன்னு நான் எப்போ சொன்னேன் …? ‘ யமுனா பதிலுக்கு பாய …இருவருக்குமிடையே கை நீட்டி சமாதானப்படுத்த பார்த்சாரதி வந்தான் .

” அண்ணா நான் சொன்னால் சொன்னதுதான் .கங்கா கல்யாணத்திற்கு பிறகுதான் எனக்கு .அதில் நான் உறுதியாக இருக்கிறேன் ….”

” எனக்காக பார்த்து அவளுக்கு வந்த நல்ல வரனை தவற விடாதீர்கள் அண்ணா .முதலில் அவளை பாருங்கள் …”

இரண்டு பேரையும் தோளணைத்து சமாதானப்படுத்திய பார்த்தசாரதி ” கங்காவின் திருமணத்தை ஏற்கெனவே முடிவு செய்துவிட்டோம் யமுனா .நிச்சயம் அது உன் திருமணத்திற்கு முன்னால் நடக்கும் .அதனால் நாளை வரப்போகும் அந்த பெங்களூர் பையனுக்கு ஓ.கே சொல்ல தயாராக இரு …” என்றான்.

” என்ன நடக்கிறது இங்கே …? ” கத்திய கங்காவை பொருட்படுத்தாமல் எல்லோரும் வீட்டிற்கு நடக்க ஆரம்பிக்க ,

” உங்களுக்கு கவுசிக்கை  நினைவிருக்கிறதா அண்ணி …உங்களோடு கல்லூரியில் படித்தானே …உங்கள் சீனியர் .நினைவில் வரவில்லை என்றாலும் மூளையை கசக்கி நினைவு படுத்தி வையுங்கள் …மற்ற விபரங்களை பிறகு சொல்கிறேன் ….’ சொல்லிவிட்டு மணிமேகலை போய்விட்டாள்.

மூளையை கசக்க வேண்டிய அவசியமில்லாமலேயே பெயரை சொன்னதுமே நினைவு வந்து விட்ட  கவுசிக்கின் ஆதிக்கத்தில் குழம்பியபடியே நின்றுவிட்டாள் கங்கா .

—————–

மறுநாள் அந்த வீடு திருவிழாக் கோலம் பூண்டிருந்த்து. நெய் வாசம் நிறைந்திருந்த அடுப்படியும் , பூ வாசம் நிறைந்திருந்த வரவேற்பறையுமாக …கல்யாண நாளுக்கான  கட்டியம் கூறியபடி மணந்து கொண்டிருந்த்து அந்த வீடு .

” இந்த பூவை யமுனா தலையில் வைத்து விடுங்கள் அண்ணி ….” பந்து மல்லிகையை கங்காவின் கையில் கொடுத்து விட்டு மணிமேகலை அடுத்தொரு வேலைக்காக நகர , தன் கையிலிருந்த பூவை பார்த்தபடி கங்கா அப்படியே நின்றாள. .

நாலு எட்டு போன மணிமேகலை நின்று அவளை பார்த்து ” என்ன அண்ணி …? ” என்க …




” நான் வேண்டாமே …நீங்களே வைத்து விடுங்களேன் அண்ணி ” கங்கா தயங்கினாள் .

எரிச்சலுடன் டக்டக்கென அவளருகே வந்த மணிமேகலை அவள் கை மலர் பந்தை பிடுங்கி சடசடவென அளந்து கட் செய்து சரம் சரமாக கங்காவின் கூந்தலிலேயே நீளமாக வைத்துவிட்டாள் .

” ம் …இப்போ போங்க .உங்க தங்கைக்கு பூ வைத்து விடுங்க ….” மீதி பூவை அவள் கையில் திணித்து விட்டு போனாள் .அடுப்படி வாசலில்  கண் கலங்கி பார்த்தபடி நின்றாள் மாதவி .

” நீங்கள் ஏன் இப்படி நிறகிறீர்கள் …? கேசரி தயாரா …இல்லையா ….? ” அவளை விரட்டினாள் .

” ஏய் இங்கே மாமியார் நீயா …நானாடி …தயாரான்னு நீயே போய் பாரேன் .என்னை ஏன்  ஏவுகிறாய் …? மாதவி கண்களை துடைத்துக் கொண்டு  மணிமேகலையை மிரட்டினாள் .

” சை …என்ன வீடோப்பா ….இங்கே எல்லா வேலையையும் நானே பார்க்க வேண்டியதிருக்கிறது ….” சலித்தபடி உள்ளே போனாள் .

” இவளை வைத்து நான் தெய்வாவை ஜெயித்துவிட்டேன் பார்த்தா ….” மாதவி மகனிடம் பெருமித பட்டாள் .

” நாம் எல்லோருமாக சேர்ந்து ஜெயித்திருக்கிறோம்மா . யமுனாவின் நிச்சயத்தை முடித்து விட்டு , கங்காவின் திருமணத்தை சிம்பிளாக நம் ஊர் முருகன் சந்நிதியில் முடித்து விடுவோம் .பிறகு யமுனாவின் திருமணம் .காவேரிக்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து ….”

” ம் ….போதும் ….போதும் .அதற்கு முன்னால் இன்னொரு திருமணம் நம் வீட்டில் இருக்கிறது பார்த்தா ….”

” யாருக்கும்மா ….? “

” உனக்கு ….”

மாதவி மர்ம புன்னகை பூக்க பார்த்தசாரதி திடுக்கிட்டான் .

சலசலவென உற்சாகம் உருண்டோடிக் கொண்டிருந்த வீட்டிற்குள் போன் மணி அடித்தது ….ஏனோ அது எல்லோருக்குமே ஒரு திடுக்கிடலை மனதிற்குள் உண்டாக்கியது .

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!