mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 29

29

டிவியில் ஒரு கண்ணும் , வாசலில் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தாள் மாதவி .அதோ மணிமேகலை …ஆவலான அவளின் பார்வைக்கு ஒரு எரிச்சல் பார்வையை கொடுத்தபடி தொப்பென அவளருகே அமர்ந்தாள் மணிமேகலை .

” பிள்ளையா பெத்து வச்சிருக்கீங்க …சரியான சாமியார் ….” மாதவியின் காதுகளுக்கு மட்டுமாக முணுமுணுத்தாள் .

” கங்கா பின்னால் மாடு கத்துது .என்னன்னு பாரு ….யமுனா சாப்பாடு தயாரா …ருசியெல்லாம் சரியாக இருக்கான்னு பாரு ….” அங்கே இருந்த தன் இரு மகள்களையும் அந்த இடத்தை விட்டு அனுப்பிவிட்டு மணிமேகலை பக்கம் திரும்பினாள் .

” என்னம்மா ஆச்சு …? “

” ஒண்ணும் ஆகலை …கௌதம புத்தரையெல்லாம் மேய்க்க என்னால் முடியாது ….”

ஒரு நிமிடம் …இல்லையில்லை ஒரு முழு நிமிடம் கூட அந்த மையல்  பார்வை பார்த்தசாரதியிடம் தென்படவில்லை .மணிமேகலை இமை சிமிட்டிய கண பொழுதில் அந்த பார்வையை மாற்றியிருந்தான் அவன் .அப்படி ஒன்றை தான் பார்த்தோமா …மணிமேகலைக்கு சந்தேகம் வந்தது .

” இங்கே என்ன பார்க்க போகிறாய் …? சீக்கிரம் கிளம்பு ….” தன் வாட்சை பார்த்துக் கொண்டான் .

” சும்மா எப்போதும் வாட்சையே பார.க்காதீர்கள் . இங்கே கொஞ்சம் உட்காருங்கள் ….” அவன் கையை பிடித்து கட்டிலில் அமர்த்தினாள் .பெரிய இவன் …நான் கட்டிலில் உட்கார்ந்திருந்தால் இவன் அங்கே உட்கார மாட்டானான் …

” இப்போது எதற்கு மேகா …வேலையிருக்கிறதும்மா ….”

” வேலை எப்போதும் இருக்கும் .கொஞ்சம் ரிலாக்சாக இருப்போமே …அன்று என்னை முதன் முதலில் பார்த்தீர்களே …அப்போது என்ன நினைத்தீர்கள் பார்த்தா …? “

” யாருடா இந்த பொண்ணு …நம்ம ஏரியாவுக்கு சம்பந்தமில்லாத ஒரு பொண்ணு வருதே , யாராக இருக்கும்னு நினைத்தேன் …”

” சம்பந்தமில்லாமல்னா ….”

” மாடர்ன் டிரஸ்ஸோடு …எங்க ஊருக்கு சம்பந்தமில்லாத ஒரு பொண்ணு …நீ வாய்க்காலில் காலை வைக்கும் போதே விழப்போகிறாய்னு தெரியும் .பத்திரம்னு சொல்லலாம் னு வேகமாக வந்தேன் ்அதற குள் நீ சரிஞ்சிட்டாய் ….”

” நீங்க தாங்கி பிடிச்சிட்டீங்க ….” அன்றைய அவனது ஸ்பரிசத்தில் இப்போதும் அவள் உடல் சிலிர்த்தது .

” அப்புறம் ….”

” அப்புறமென்ன …நீ கல்யாணத்தை பத்தி பேசினாய் …ஆனால் எல்லா விசயத்தையும் எப்படி என்னிடம் உடனே சொன்னாய் மேகா …? “

அவனது ஆச்சரிய கேள்விக்கு உதடு பிதுக்கினாள் மணிமேகலை .

” தெரியலை பார்த்தா …ஏனோ உங்களிடம் எதையும் மறைக்கவோ , மறுக்கவோ தோணவில்லை …”

இருவரின் விழிகளும் ஒன்றையொன்று கவ்வி சில நொடிகள் நின் றன .முதலில் சுதாரித்துக் கொண்டவன் பார்த்தசாரதிதான் .

” அதற்காக முன் , பின் அறியாதவனின் பின்னால் அப்படியா நம்பி போவாய் …? “

” எனக்கு உங்களை பார்த்தால் அறிமுகமற்றவரென்ற எண்ணமே வரவில்லையே …”

இப்போதும் மணிமேகலை அவன் கண்களோடு கண்கள் கலக்க விரும்பினாள் .ஆனால் பார்த்தசாரதியின் பார்வை எதிர்புற சுவற்றிற்கு போயிருந்த்து .பிறகு அங்கேயே ஆணி அடித்து நின்றது .




” உங்கள் புண்ணியத்தில்  நிறைய போதையெல்லாம் உணர்ந்து கொண்டேனே ….” கண் சிமிட்டினாள் .

” எல்லாவற்றிலும் விளையாட்டு உனக்கு …” தலையில் கொட்டினான் .

” மறுநாள் கதவை திறந்து வந்தபோது நிதானமாக டிவி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாய் பார் …என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை …” இப்போது அவனுக்கு சிரிப்பு வந்தது .

” எனக்குத்தான் அந்நிய வீடென்ற எண்ணமே வரவில்லையே …” உடன் சேர்ந்து சிரித்தவள் கட்டில் மேல் தன் கால்களை தூக்கி வைத்து கட்டிக்கொண்டு அதில் தலை சாய்த்துக் கொண்டு அவனை பார்த்தாள் .

” அன்றே உன்னை கங்காவிடம் அழைத்து போயிருக்க வேண்டும் மேகா ….” பார்த்தசாரதியின் தங்கை நினைவில் மணிமேகலையும் நெகிழ்ந்தாள் .

” விடுங்கப்பா …ஒன்றும் பெரிதாக நடந்து விடவில்லை .எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் ….”

” ம் ….” என்ற அவன் ஒற்றை பதிலெழுத்தில் அவனது மன துயரம் உணர்ந்தவள் , கை நீட்டி அவன் தோளை பற்றி இழுத்து கூட்டி வைத்திருந்த தன் கால்களின் மேல் சரித்துக் கொண்டாள் .அடர்ந்து சுருண்டிருந்த அவன் தலை முடிக்குள் தன் விரல்களை நுழைத்து கோதினாள் .

இருவரும் பேசிக்கொள்ளவில்லை .ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை .மேலே சுழலும் பேனை தவிர அங்கே எந்த ஓசையும் இல்லை .ஆனால் இருவரின் மன உணர்வுகளும் ஒன்றோடொன்று பிணைந்தபடி இருந்தன .

சிறிது நேரம் கழித்து தன் தலையை திருப்பி அவள் கால் முட்டியில் தன் முகம் புதைத்து ஒரு நிமிடம் இருந்தான் பார்த்தசாரதி .பின் டக்கென எழுந்து நின்றான் .

” போகலாம் மணிமேகலை …” வாசலுக்கு நடந்துவிட்டான் .

” ம் …எல்லாமே நன்றாகத்தானே போய் கொண்டிருக்கிறது .இதில் உனக்கென்ன சலிப்பு ….? “கேட்ட மாதவியை முறைத்தாள் .

” இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே பாதியில் எழுந்து போனால் ….அ….அது …என்னை இன்சல்ட் பண்ணுவது போல் இருக்கிறது …”

” இதறகு மேல் இருந்தால் தனது நெகிழ்ச்சி உனக்கு தெரிந்து விடுமென நினைத்திருப்பான் ….”

” அப்படியா அத்தை …? ” உற்சாகம் கரை புரண்டது மணிமேகலை குரலில் .

” இந்த அளவு கூட அவன் தன்னை என்னிடம் வெளிப்படுத்தியதில்லை .அதனால் நீ அவனுக்கு கொஞ்சம் ஸ்பெசல்தான் ….”

கண்கள் ஒளிர இருந்த மணிமேகலைக்கு ” அம்மா …” என்று அழைத்தபடி வந்த கங்காவின்  மீது எரிச்சல் வந்தது .

” என்ன …என்ன வேண்டும் …? ” மாதவியை முந்திக் கொண்டு கேட்டாள் .

அருகருகே ஒட்டி அமர்ந்தபடி கிசுகிசுத்துக் கொண்டிருந்த தாயையும் , அண்ணியையும் பார்த்த கங்கா தயங்கி நிறக …

” எங்க வீட்டிறகுள் எங்களை  நிம்மதியாக ஐந்து நிமிடம் பேச விட மாட்டீர்களா …? இருக்க வேண்டிய இடத்தில் தங்காமல் வந்து விட்டு …இங்கே என் தலையை உருட்டுகிறார்கள்பா ….” நன்றாக தெளிவாக முணுமுணுப்பது போல் பேசினாள் .

” மணிமேகலை …என்ன பேசுகிறீர்கள் …? ஒழுங்காக பேசுங்கள் .” கங்கா அதிர்ந்து நிற்க , அக்காவிற்கு சப்போர்ட்டாக வந்தாள் யமுனா .

” ஏய் …யாரை பெயர் சொல்லி கூப்பிடுகிறாய் …மரியாதையாக பேசு .நான் உன் அண்ணி …”

” மணிமேகலை …” பலவீனமான குரலுடன் எழுந்த மாதவியின் கையை பிடித்து திரும்ப சோபாவிற்கே தள்ளினாள் மணிமேகலை .

” நீங்க சும்மா இருங்க ….”

” மணிமேகலை ….” கர்ஜனையாய் கேட்ட குரலில் அனைவரும் அதிர்ந்து திரும்பி பார்க்க , சிம்மமாய் நடந்து வந்தான் பார்த்தசாரதி .

அவனது ரௌத்ரத்தில் மணிமேகலை ஒரு கணம் ஸ்தம்பித்து நிற்க , யமுனா முதலில் சுதாரித்து அண்ணனை நோக்கி ஓடினாள் .

” அண்ணா …இவர்கள் கங்காவை …என்னை ..நம் அம்மாவை மரியாதையில்லாமல் பேசுகிறார்கள் .கங்காவை ஏன் இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் எனகிறார்கள் .அம்மாவை …நீங்களே பார்த்தீர்களே …தள்ளிவிட்டார்கள் ….எனக்கு இவர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது ….” அண்ணனின் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள் .

எப்போதும் தைரியமாக இருக்கும் தங்கை …இப்படி ஒரு நாளும் ஆதரவிற்காக   அண்ணனின் மார்பை நாடினவளில்லை .இன்றோ …வாழ்வே வெறுத்தது போல் இப்படி குமுறி அழுத்து பார்த்சாரதியை ரொம்பவே பாதித்தது .




வெறுப்பை கண்களில் தேக்கி மணிமேகலையை பார்த்தான் .அந்த பார்வையில் மனதில் அடிபட்டாள் மணிமேகலை .

பேசுவதற்காக வாயை திறந்தவளை கையை உயர்த்தி தடுத்தான் .

” போ …” ஒரே ஒரு எழுத்துதான் .அது மணிமேகலையின் உயிரையே கொடூரமாக குடித்தது .

உடல் ரத்தம் முழுவதும் சுண்டி விட்டது போல் முகம் வெளுத்து போன மணிமேகலை மீண்டும் பேச முயல ….

” இங்கிருந்து போ என்றேன் .உன் லிமிட்டை தாண்டுகிறாய் நீ …” இப்போது  அவன் குரல் உயர்ந்திருக்க அடுப்படியில் இருந்து சமையல்காரம்மாவும் , அடுத்த அறையிலிருந்து வீடு சுத்தம் செய்யும் பெண்ணும் எட்டி பார்க்க , மணிமேகலையின் முகம் அவமானத்தில் சிவந்த்து.

” பார்த்தா …” மாதவி மகனை சமாதானப்படுத்தும் நோக்கில் அவன் தோளை தொட …

” நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கம்மா ….” தாயின் தோள்களை தன்னோடு சேர்த்துக் கொண்டான் .

தாயும் , தங்கையுமாக சேர்ந்து நின்றிருந்தவனை வெறுமையான பார்வையால் பார்த்துவிட்டு தளர்ந்த நடையுடன் மாடி ஏறினாள் மணிமேகலை .

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!