kadak katru Serial Stories

Kadal Kaatru – 32

     

                                              ( 32 )

உள்ளே நுழையவும் தன் பிரச்சினைகளை எல்லாம் இவரிடம் சொல்லிவிட வேண்டுமென்றுதான் நினைத்தாள் .ஆனால் …இப்போது அவர் கேட்கும் போதோ …ஏனோ …சொல்லத் தோன்றவில்லை .

” அவர் …அவர்…மிகவும். கரடு முரடான ஆசாமியாக இருக்கிறார் …” தயங்கி தயங்கி கூறினாள் .

” ம் …” என்றுவிட்டு அவள் முகத்தையே பார்த்தார் .

மேலே என்ன சொல்வது …எப்படி சொல்வது…என் புருசன் கண்ட்வளுடன் ஹோட்டலில் தங்குகிறான் …நிரந்தரமாக ஒருத்தியை வைத்துக் கொண்டிருக்கிறான் …இப்படியெல்லாம் இவரிடம் …இந்த பெரிய மனிதரிடம் எப்படி சொல்வது …?

” அவர் …அவர் …என் மனதுக்கு ஒப்பாத சில காரியங்களை ..மிக எளிதாக செய்கிறார் …அது …அதனை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை …” திணறி திணறி பேசினாள் .

” ம் .்பொதுவாக அவன் முரடன்தாம்மா …தான் ஒன்று நினைத்து விட்டால் அதிலேயே ஒரே பிடியாக நிற்பவன் .நினைத்தது நடப்பதற்காக சில குறுக்கு வேலைகளையும் செய்ய தயங்காதவன் …”

” வாயைத் திறந்தால் வருவது எல்லாம் பொய்தான் …” முணுமுணுத்தவளின் மனதில் ….’அப்படியா சொன்னேன் ..? எப்போது ….?’என்ற முழு பொய்யுடன் முதன்முதலாக அவளை ஆக்ரமித்த யோகன் தோன்றி கன்னங்களை சிவக்க வைத்தான் .

” அதுதான் சொன்னேனேம்மா …அவன் எண்ணம் நிறைவேற குறுக்கு வழிகளை கையாள அவன் தயங்குவதில்லை .அவன் வாழ்க்கையில் பட்ட துயரங்கள் இந்த வழியினை அவனுக்கு காட்டியிருக்கலாம் .ஆனால் அவன் ரொம்ப நல்லவன்மா …”

” எப்போதுமே குறுக்கு வழியில் போகிறவர் எப்படி நல்லவராக இருக்க முடியும் …?”

” நோயில் படுத்திருந்த தாயை , கவனிக்க வந்த தாதியுடன் சேர்ந்து தந்தை கொன்றுவிட்டார் என ஊர் சொல்கிறது .அதனையே உறுதி செய்வது போல் தாய் இறந்து ஆறே மாதத்தில் தந்தை அந்த தாதியையே திருமணம் செய்து கொள்கிறார் .ஒரு இரண்டுங்கெட்டான் வயது பையனின் மனநிலை எப்படி இருக்கும் அப்போது …? அன்பரசு என்னிடம் யோகனை அழைத்து வந்த போது இந்த மனநிலையில்தான் அவன் இருந்தான் .இந்த உலகில் எல்லாம் பொய் .எல்லோரும் கெட்டவர்கள் என்ற மனநிலையில் இருந்தான் .ஆனால் அபார அறிவும் , படிக்கும் ஆசையுடனும் இருந்தான் .நானும் அன்பரசுவும் அவனை கணித்து ஓரளவு சீர்படுத்தினோம் .




அவனுக்கு பெரும்பாலும் பெண்கள் மேல் மரியாதை ஆரம்பத்திலிருந்து இருந்த்தில்லை .நான் அவனுக்கு திருமணம் முடிக்க எண்ணியபோது , எனக்கு பெண்ணின் தேவை ஏற்பட்டால் காசை வீசினால் வரிசையாக வந்துவிட்டு போகிறாள்க .இந்த அல்ப சுகத்திற்காக எவளோ ஒருத்தியிடம் என் வாழ்வை அடமானம் வைக்க சொல்கிறீர்களே …?என்று மறுத்து விட்டான் .மேலும் அவன் சொன்னபடியேதான் பெண்கள் விசயத்தில் நடந்து கொண்டான் .

சாவித்திரி பற்றி தெரியவந்த போது அவனிடம் பேசினேன் .” இவள் விசயத்தில் இதுதான் சரியென்று எனக்கு தோன்றியது ஐயா .” என ஆணித்தரமாக கூறினான் .அந்த அழுத்தமான பேச்சின் பின் அவனை மாற்றுவது கடினம் .எனவே விட டு விட டேன் .”

” ஆமாம் அந்த அவளை வைத்துக்கொண்டு சாராயம் காய்ச்சி விற்பனை வேறு செய்வார் …” தன் மனதினை உறுத்திய விசயத்தை எரிச்சலோடு வெளிப்படுத்தினாள் .

” இல்லைம்மா உன் எண்ணம் தவறு .யோகன் அந்த குப்பத்து ஜனங்களை குடியிலிருந்து மீட்க எவ்வளவோ முயற்சித்தான் .முடியவில்லை .இவ்வளவும் ஏன் நம் அரசாங்கம் வேறு தினம் ஒரு கடை திறந்து கொண்டிருக்கிறதே ..?

இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக போதையிலிருந்து விடுவிக்கவே இந்த யோசனை செய்தான் .அதாவது அவன் தயாரிக்கும் சாராயத்தில் போதையின் அளவை நாளுக்கு நாள் சிறிது சிறிதாக குறைத்து வருகிறான் .குறைந்த விலையென்பதால் இதனை வாங்கி குடிப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி செய்கிறான் .

இவன் தயாரிக்கும் சாராயத்தை ஆண்கள் தவிர்க்க கூடாது என்ற காரணத்தினாலேயே அவர்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு அவர்கள் மூலமாகவே ஆண்களுக்கு இதனை கொடுக்கிறான் “

” இதெல்லாம் நடக்கிற காரியமா ..? ” நம்பாமல் கேட்டாள் சமுத்ரா .

” நம்பும்மா ஏனென்றால் யோகனுக்கு சாதகமாக நிறைய ஆண்கள் இப்போதெல்லாம் கொஞ்சம் தள்ளாட்டம் குறைந்து நடமாடுகிறார்கள் .அதனால் நாம் இதனை நம்பித்தான் ஆகனும் . “

” அப்போது மட்டும் சட்டத்திற்கு எதிராக இவர் சாராயம் காய்ச்சுவது இல்லையென்றாகி விடுமா ..?இவ்வளவு போக்கிரித்தனத்திற்கும் பின் இவரை நல்லவன் என்றா கூறுகிறீர்கள் …?” எரிச்சலுடன் கேட்டாள் சமுத்ரா .

” நிச்சயமா அவன் நல்லவன்தாம்மா .கெட்டவர்களை நீ அறிந்தவளில்லை …”

” அது சரி உங்கள் கணக்குபடி இவரை விட மிக கெட்டவர்கள்  இருப்பதால் இவர் மிக நல்லவராகிவிட்டார் …அப்படித்தானே ? ” பெருகிய கோபத்துடன் தான் முன்பு அருகே நெருங்கக் கூட முடியாத ஒரு பெரிய மனிதரிடம் அருகமர்ந்து பேசிக் கொண்டிருக்குறோம் என்ற பிரமிப்பை விடுத்து பட்டென கேட்டாள் .உடனேயே ஐயோ தவறாக நினைத்து விடுவாரோ என்ற பதட்டமும் வந்த்து .

ஆனால் அவள் படபடப்பை எளிதாக எடுத்துக் கொண்டு ” அட அதுதானம்மா வாழ்க்கை .சிறிய கோட்டிற்கு பக்கத்தில் வரையப்படும் பெரிய கோடுதான் முந்திய கோட்டினை சிறிதாக்குகிறது .இரு கோடுகள் தத்துவம்தானேம்மா நம் வாழ்வை செம்மையாக்க உதவும் .ஆனால் உன் விசயத்தில் யோகனிடம் நிறைய மாறுதல்களை இப்போது பார்க்கிறேன் .” குறுநகையுடன் கூறினார் .

” உன்னை திருமணம் செய்து கொண்ட பிறகுதான் போனில் எனக்கு தகவலே சொன்னான் .என்னடா என்ற போது …இந்த திருமணம் எந்த காரணத்தாலும் நின்று விடுமோ என்ற பதட்டம் இருந்த்து ஐயா . எவ்வளவு பெரிய விசயங்கள் நடந்தாலும் இந்த திருமணம் நிற்பதை நான் விரும்பவில்லை என்றான் .எனக்கு ஒரே ஆச்சரியம் .நான் அவனுக்கு மிக முக்கியம் .எனக்கு தகவல் சொல்ல …எனக்கு விளக்க எடுத்துக் கொள்ளும் அவகாசத்தினால் ் ஒரு வேளை திருமணம் நின்றுவிட்டால் என்ற பதட்டம் அவனுக்கு …என்றால் …அவன் அந்த திருமணத்தை …அந்த பெண்ணை எவ்வளவு விரும்பியிருக்க கூடும் ? “

” அதெல்லாமில்லை …அவருடைய சில ரகசியங்களை நான் தெரிந்து கொண்டேன் .அதனால் என்னை வெளியே விட அவர் தயாரில்லை .உள்ளேயே வைத்திருக்க தோதான வழியாக இந்த தாலியை தேர்ந்தெடுத்து விட்டார் …” கசப்புடன் கூறிய போதே …திருமணம் நின்று விடுமோ …?என்ற பதட்டத்திலா அன்று இருந்தான் …? திமிராக கல்யாண பந தலில் அவன் அமர்ந்திருந த காட்சி நினைவு வந்த்து .இவர் யோகனை தவறாக கணித்து வைத்திருக்கிறார் என எண்ணிக் கொண்டாள் .

” நீ அப்படி நினைக்கிறாயா …?” அவளை கூர்ந்தார் .

” என் நினைப்பு அப்படியில்லை .நிலவரமே அதுதான் ” அடித்து கூறினாள் .

” ஓ…ஆனால் …இப்போது என் கோபக்கார முரட்டு குழந்தை நிறைய மாறியிருக்கிறது .நிதானமும் , நிச்சயமுமாய் எடுத்த வேலையை செய்கிறது .இதற்கு நீயின்றி வேறு யாரம்மா காரணமாக இருக்க முடியும் …?” ராஜபாண்டி இப்போது சமுத்ராவை பார்த்த பார்வையில் சிறு பெருமிதம. கூட இருந்த்து .




இதற்குள் இவர்களுக்கான மதிய உணவு அறையினுள் கொண்டு வரப்பட்டது .அவை கட்டப்பட்ட அமைப்பில் ஐந்து நட்சத்திர ஓட்டல் நேர்த்தி தெரிந்த்து .கேள்வியாய் நோக்கிய சமுத்ராவிற்கு ,நானும் யோகனும் பொதுவாக ஒன்றாக வெளியே செல்வதில்லைம்மா .அது சில விபரீதங்களை தந்துவிடலாமென்பதால்…அதனால்தான் சாப்பாடு இங்கேயே …வாம்மா சாப்பிடலாம் “

” அட வாம்மா உன் கணவன் வந்துவிடுவான் …” கிண்டலாக அவர் கூற , நான் ஒன்றும் அவருக்காக காத்திருக்க வில்லை வேகமாக கூறியபடி உண்ண அவள் அமர்ந்த நொடி கதவு திறந்து யோகன் நுழைந்தான் .

” வாடா சரியாக வந்துவிட்டாய் .உன் இல்லாள் நீயில்லாமல் எப்படி உண்ணுவது என்று வருந்திக் கொணடிருந்தாள் ” என்று அவளை போட்டு வேறு கொடுத்தார் .

” அப்படியா …” நம்பிக்கையற்ற பார்வையுடன் அவளை அளந்தான் யோகன் .

இலையில் பரிமாறிக் கொண்டு வேகமாக உண்ணத் துவங்கினாள் அவள் .கண்டு கொள்ளாமல் அவளருகில் அமர்ந்தபடி சென்று வந்த விபரம் ராஜபாண்டிக்கு கூறலானான் .அவர் யோகனுக்கு பரிமாற முயல , யோகன் அவருக்கு பரிமாற முயல இருவரையும் தடுத்து விட்டு தானே அவர்களுக்கு பரிமாறலானாள் சமுத்ரா .

ராஜபாண்டி கேட்ட விபரங்களை கொடுத்து கொண்டிருந்தாலும் , அவ்வப்போது மனைவியின் இலையை கவனித்து தான் உண்ணும் சில உணவுகளின் ருசியை கூறி அவளையும் உண்ண வைத்தான் யோகன் .சில நிமிடங்களில் இயல்பாக அதையே யோகனுக்கு செய்து கொண்டிருந்தாள் சமுத்ரா .இதை சாப்பிட்டு பாருங்கள் , இது நன்றாயிருக்கு என்பது போன்ற உபசரணையுடன் .இதனை புன்னகையுடன் மனதினுள் வாங்கிக் கொண்டு நிறைவோடு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார் ராஜபாண்டி .

” இந்த டிரஸ்ட்டை முழுவதுமாக நீதான்மா பார்த்துக் கொள்ள வேண்டும் .உண்மையாகவே பணம் தேவைப்படுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு நம் பணத்தை கொண்டு சேர்க்க வேண்டும் ” ராஜபாண்டி கூறினார் .

” கண்டிப்பாக சார் .நான் மிகவும் விரும்பும் பணி இது .கல்வி ஒருவருக்கு எவ்வளவு முக்கியமென்பதை நான் அறிவேன் .அதனால் இந்த வேலை எனக்கு கிடைத்திருப்பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் ” என்றாள் சமுத்ரா .

” ஐயாவிடம் என்ன சொன்னாய் …?” வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது , யோகன் கேட்டான் .

” என்னது ..? என்ன சொன்னேன் …? “

” நம்மை பற்றி …என்ன சொன்னாய் …? ஏகப்பட்ட அறிவுரைகளை வாரி வழங்குகிறார் .பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கோ ..கஷ்டப்படுத்தாதே , சொன்ன பேச்சு கேளு …இப்படி …வரிசையாக போரடித்து தள்ளிவிட்டார் .

அது சரி ..உன்னால் முடியாத்தை செய்ய சொன்னால் உனக்கு போராகத்தானே இருக்கும் என்று மனதினுள் எண்ணினாள் . கார் இப்போது அவர்கள் வீட்டினுள் நுழைந்திருந்த்து .

” நீ உள்ளே போம்மா , எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது ” என்றவன் சிறிது நிறுத்தி ” என் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே போகிறாயே ” என்றான் கீழே இறங்க தொடங்கியவளை பார்த்து .

அவன் போகும் இடம் தோப்புவீடு என அறிந்ததால் பேச்சு காதிலேயே விழாத்து போல் பாவித்து இறங்கியவள் காரை சுற்றி அவன்புறமாக வந்து அவன் அமர்ந்திருந்த பக்கத்து கதவு வழியே தலையை விட்டு ” அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் திருவாளர் யோகேஷ்வரன் அவர்களே .அவர் சொன்னதை செய்ய வேண்டி வருமோ என்ற கவலையும் உங்களுக்கு வேண்டாம் .ஏனென்றால் எனது வேலை முடிந்த்தும் இதை கழட்டி உங்கள் கையில் வைத்துவிட்டு போய்கொண்டே இருப்பேன் ” கழுத்திலிருந்த தாலி சங்கிலியை தூக்கி காட்டியபடி குரலை மிக மென்மையாக்கி கொஞ்சலாய் கூறினாள் .

சிறிது இறுகிய யோகனின் முகம் சமுத்ராவிற்கு பரம திருப்தியை அளித்தது .இதனை பார்க்கத்தானே இப்படி அருகாமையில் வந்து நின்றாள் .ஆனால் ஒரே நிமிடம்தான் ,இப்போது அவன் முகம் வெளிச்சம் பூசிக்கொண்டது .” நன்றிடி என் செல்ல பொண்டாட்டி ! அதை அது நடக்கும்போது பார்ப்போம் ” என்றவன் அவள் சற்றும் எதிர்பாரா கணமொன்றில் அவள் இதழ்களில் தன் இதழ்களை பதித்து விலகியிருந்தான் .

ஷாக் அடித்தது போன்ற உணர்வில் நிமிர்ந்து நின்று அவனை முறைத்தவளை பார்த்து , ” விடியும் வரை காத்திரு கண்ணே ..” என கண் சிமிட்டி விட்டு சென்றான் .

ஆத்திரத்துடன் கால்களை தரையில் உதைத்தபடி உள்ளே நுழைந்தவளின் கண்களில் ஹாலில் அமரந்து டிவியை சத்தமாக வைத்துக் கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டிருந்த செல்வமணி தென்பட்டாள் .

வேகமாக உள்ளே சென்றவள் அந்த டிவியை அணைத்தாள் .

” ஏய் ஏன்டி டிவியை ஆப் பண்ற …?” ஆங்காரமாய் கேட்டாள் செல்வமணி .

அவளெதிரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி ” ஒரு கப் காபி ” என உத்தரவிட்டாள் சமுத்ரா .

                                 

 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!