kadak katru Serial Stories

Kadal Kaatru – `12

(12 )

சென்னை மாநகரின் தலைமாட்டில்தான் இருக்கிறது பழவேற்காடு. 56 கிலோ மீட்டர் கடந்தால்
சென்றடைந்துவிடலாம். ஒடிசாவில் உள்ள சில்கா உப்பங்கழிக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரி, தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலுமாக விரிந்து கிடக்கிறது. கடலோரத்தை ஒட்டியே உள்ள இந்த பிரமாண்ட நீர்ப் பரப்புக்காகவும், இடையிலே சிதறிக் கிடக்கும் ஊரில் உள்ள போர்ச்சுக்கீசிய, டச்சு அடையாளங்களாலும் இன்று ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டிருக்கும் பழவேற்காடு, ஒரு காலத்தில் துறைமுகமாகவே இருந்திருக்கிறது.
சென்னை மாநகரம் உருவாவதற்கே இது ஒரு தூண்டுதலாக இருந்திருக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி.  கப்பல் துறையாகப் பயன்படும் பழவேற்காடு அருகில் இருப்பதாலேயே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தனது கோட்டையைக் கட்டிக்கொள்ள சென்னப்பட்டணத்தைத் தேர்வு செய்ததாம்….

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பழவேற்காடு இப்போது இருக்கும் நிலை ????

இதன் காரணம் ????…

கிட்டதட்ட எண்பதுகள் வரை இங்குள்ள மீனவர்களின் வாழ்வு செழித்து தழைத்தோங்கிதான்  இருந்திருக்கிறது .மீனவ பெண்களின் வாழ்வு மிக …மிக அழகாக கடலோடு இணைந்த படகை போல் கவிதையாக போய் கொண்டிருந்திருக்கிறது .

அப்போது ஆண் கடல் ஆள போய்விட்டான் எனில் பெண் எளிதாக வீட்டை ஆண்டாள் .அவன் கொணர்ந்த பணத்தை மட்டுமின்றி , மீந்த மீன்களையும் பேணி குடும்பத்தை வழிநடத்தினாள் .

பெரியோர்களையும் , குழந்தைகளையும் கணவனை மனதில் நினைத்து காத்து , விரைவில் கணவனை அனுப்புமாறு கடலன்னையை வணங்கியபடி , கணவனது தொழிலுக்கு தேவையான வலைகளை பின்னியபடி ,அவசர தேவைகளுக்கான செருவாட்டு பணத்தை சேகரிக்கும் கலை கை வர பெற்றவளாய் மிக சிறந்த குடும்ப தலைவியாய் விளங்கினாள் .

அப்போதைய மீனவ சமுதாயம் பெண்ணை சார்ந்து இருந்த்து .ஒரு குடும்ப தலைவி கம்பீரமாக இருந்தாள் .குடும்ப முடிவுகள் மட்டுமின்றி கணவனின்  தொழில் முடிவுகளையும் தானே எடுக்குமளவு திறமையும் , ஊக்கமும் பெற்றிருந்தாள.

ஆனால் இன்றைய பெண்கள் நிலைமை ……!!!!

அவர்கள் டிவியினுள் புதைந்து கிடக்கிறார்கள் .வீட்டு செலவுக்கு கூட கணவனிடமிருந்து பணம் கிடைப்பதில்லை .செலவு பணத்திற்கே மீன் கிடைக்காத போது , சேமிப்பு பணத்திற்கு  கருவாட்டிற்கு எங்கே போவார்கள் ?

இருபது , இருபத்தியைந்து என பவுன் கேட்பதால் திருமணம் ஆகாமல் நிற்கும் கன்னிப்பெண்கள் ஒருபுறமென்றால் , குடித்து விட்டு வரும் கணவனிடம் அடி வாங்கி நொந்து போய் விரக்தி வாழ்வு வாழும் பெண்கள் ஒரு புறம் .

எப்போது இவர்கள் வாழ்க்கை மாறியது ?…எதனால் மாறியது …? யாரால் மாறியது ….?

]]




மாறி விட்ட தங்கள் வாழ்க்கையை உணர கூட முடியாமல் தலையெழுத்தென வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மங்கையரின் நிலை மாறும். வழிதான் என்ன …..?

சிந்திப்போம் .

வெள்ளியே முளைக்க அஞ்சும் 
அந்த பொழுதில் 
விடிந்த அவள் பாட்டியின் பொழுதுகள் 
இவளுக்கு 
உறைக்கும் வெயிலுடன் 
அதிருப்தியாய் விடிகின்றன.
எரவாட்டு காசுக்கும்
கருவாடு இன்றி 
பழுதான வலைகளை 
பூமியில் புதைக்கிறாள் 
அதனடியில்தான் கிடக்கிறது 
சங்கம் தொட்டு 
காதல் புதையுண்ட நகரம்.

இவ்வாறு ஒருசிறு கவிதையோடு தனது கட்டுரையை முடித்தாள் சமுத்ரா .உண்மையிலேயே எழுதி முடிக்கவும அவள் மனம் கனத்துதான் போகிறது . இனி அடுத்த பாகத்தில் சில பெண்களின் பேட்டியை சேர்க்க வேண்டும் .அவர்களின் இன்றைய நிலைமைக்கான காரணங்களை ஆராய வேண்டும்.

இதனை யோகேஷ்வரனிடம் காட்ட வேண்டும் .ஏதாவது திருத்தமிருந்தால் சொல்லுவான்.என நினைக்கும்போதே முதல் நாள் கட்டுரையை தன் அனுமதியின்றி அவன் பிடுங்கி படித்தது நினைவு வந்த்து ்

கூடவே மதிய உணவை தனக்காக அவன் பரிமாறிய விதமும் .நான் சாயாதேவி விசயமாக கோபமாக இருக்கிறேனென ஊகித்து , அதனை விளக்கி என்னை சாப்பிட வைத்தானே….

சமுத்ராவிற்காக யோகேஷ்வரன் பரிமாற தொடங்கவும் அந்த வீட்டு பெண்களின் முகம் போன போக்கை நினைத்தால் இப்போதும் சிரிப்பாக வந்த்து .

தம்பி மீன் குழம்பை இவளுக்கு ஊற்றவும் ,தனது தட்டை கோபத்துடன் தள்ளிவிட்டு  எழுந்து சென்று விட்டாள் செல்வமணி .

இவர்கள் சாப்பிடும் போது புவனா அங்கே இருப்பதில்லை .அவள் உணவு அவள் கணவனுக்கு வாயில் ஊட்டி விட்ட பின்தான்.ஆனால் யோகேஷ்வரன் சாப்பிடும்போது அடுப்படியில் நின்று கண்காணிப்பது உண்டு .

உணவு பரிமாறுவது தொடர்பாக மேகலையை ஏவுவதும் உண்டு .அப்படி அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தவள் இந்த பரிமாறுதலை கண்டதும் கண்கள் நிலை குத்த  நின்றுவிட்டாள்  .வாய் கூட லேசாக திறந்திருந்திருந்தாற் போல் இருந்த்து .

” இந்த மீனை இப்படி பிய்த்து இப்படி சாப்பிட வேண்டும் சமுத்ரா .” சகோதரியின் வெளி நடப்பை பொருட்படுத்தாமல் சமுத்ராவிற்கு விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான் .

் கீழே சிந்த  சிந்த  சமுத்ராவின் அருகில் தண்ணீர் டம்ளர் டொம் என  வைக்கப்பட்டது .மேகலையின் ஆத்திரம் அது …

இவை எதையும் கண்டு கொள்ளாமல் அன்றைய அவளது சந்திப்புகள் விபரம் கேட்டபடி ,அதில் சில ஆலோசனைகள்  கூறியபடி ….நிதானமாக உணவுண்டான் யோகேஷ்வரன் .இடையிடையே இவளுக்கு மீன் குழம்பு சாப்பிட டியூசன் வேறு ….

தான் முதன்முதலாக ஹோட்டலில் சந்தித்த மனிதன் …வேறு எவனாவது இவனின் இரட்டைபிறவியாக சகோதரனாக இருப்பானோ  ….? இப்படி நினைக்க துவங்கினாள் சமுத்ரா .

அந்த ஞாபகங்களுடன் தனது கட்டுரையை சிறு புன்னகையுடன் முடித்தாள் .அவளது போன் ஒலித்தது .கருணாமூர்த்தி….

” சம்மு எப்படிம்மா இருக்கிறாய் ? ” மிகுந்த ஆதுரம் குரலில் ….

” நல்லாயிருக்கேன் மாமா …நீங்க ?”

” ம் …இருக்கேன்மா….ஏதோ …பெத்த பொண்ணை முழுசா பறி கொடுத்து விட்டு நடைபிணமாக வாழ்ந்து கொண்டுருக்கிறோம் நானும் உன் அத்தையும் ….”

தன் தலையில் தானே ஓங்கி கொட்டிக் கொண்டாள் சமுத்ரா .
லாவண்யா …அவளை எப்படி மறந்தேன்  ?

” கவலைப்படாதீங்க மாமா …நான் லாவண்யா பற்றி தெரிந்து கொள்ளாமல் இங்கிருந்து வர மாட்டேன் “




” எனக்கு தெரியும்மா நீ ஒண்ணு நினைத்தால் அதை முடித்தே தீருவாய் என இப்போதுதான் உன் அத்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் .அப்புறம்மா …நீ ஏதோ ஜாடி …அங்கே பார்த்தாயாமே ….?”

” ஆமாம் மாமா .இங்கே கீழேயே இரண்டு இருக்கிறது ்மாடியிலும் இருக்கிறதாம் .இங்கே ஒரு பொண்ணு அதற்கு அழகாக ….”

மேகலையின் கை வேலையை கூறும் முன்பு ” மொத்தம் எத்தனை இருக்கிறது ?” கருணாமூர்த்தியின் குரலில் அடக்கப்பட்ட ஆர்வம் .

” அது தெரியலை மாமா .மாடியில் இருப்பதை நான் எப்படி பார்க்க முடியும் ? தவிரவும் ….”

” அங்கேயே தங்கி கொண்டு அதை கூட செய்ய முடியாதா ? ஒழுங்காக பார்த்து சரியான தகவல் அனுப்பு ” நிச்சயமாக குரலில் உத்தரவு இருந்த்து .

சமுத்ரா மௌனமானாள் .பின் மெல்ல ” அது என் வேலையில்லை மாமா ” என்றுவிட்டு கருணாமுர்த்தி பேச பேச போனை வைத்து விட்டாள் .

ஏதோ நெருடியது அவளுக்கு .என்ன அதிகாரம் மாமாவின் குரலில் .இது போன்ற ஒரு குரலில் இதற்கு முன் அவர் பேசியதில்லை .எங்கேயோ ஏதோ தவறிருக்கிறதா …?மெல்ல நடந்தபடி யோசிக்க தொடங்கினாள் .

அடுத்த பத்து நிமிடங்களில் பத்து போன் கால்கள் கருணாமூர்த்தியிடமிருந்து .போனை சைலண்ட்டில் போட்டு வைத்தாள் .

சிறிது இடைவெளி விட்டு செண்பகத்திடமிருந்து போன்கால்கள் வர துவங்கின.தயவுசெய்து எடுக்குமாறு மெசேஜகள் வேறு .

அப்படி என்ன அந்த ஜாடி மேல் ஆர்வம் ? மாமா பழம்பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார் .ஒரு வேளை அதற்காக இருக்குமோ ?

இங்கே சென்னையில் பிளாட்பாரத்தில் வாங்கப்படும் பொருட்களை பழமை படுத்தி ,பழம்பொருட்கள் என கூறி மாமா விற்றுவிடுகிறாரென மலையரசன் தங்கையிடம் கூறியிருக்கிறான் .விடுண்ணா …என அதை ஒதுக்கியிருக்கிறாள் சமுத்ரா .

‘ குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை ‘ என்ற எண்ணம் அவளுக்கு .நான் ் எங்காவது தவறு செய்கிறேனா ? யோசித்தாள் .

அறைக்கதவை திறந்து நின்று அங்கே ஹாலில் இருந்த அந்த ஜாடியை பார்த்தாள் .என்ன இருக்கிறது இதில் …?

” என்ன பார்க்கிறாய் ? ” அவள் பார் வை போகும் திசையை பார்த்தபடி கேட் டான் யோகேஷ்வரன்.

இவன் எப்போது வந்தான் ! என நினைத்தபடி ” இந்த ஜாடி ….?” என இழுத்தாள் ்

” இதில் மழைநீரை சேமித்து வைத்திருக்கிறோம் .இதில் சேமிக்கப்படும் நீர் ஒரு ஆண்டாவது கெடாமல் இருக்கும் “

” ஒரு ஆண்டா ….? அது எப்படி ..?” ஆச்சரியமாக கேட்டாள்.

” இது சீன களிமண்ணால் செய்யப்பட்டது .மழைநீரை சுத்தப்படுத்தி இதில் ஊற்றிவிட்டு ஒரு ஆணியை குறிப்பிட்ட வெப்ப நிலையில் பழுக்க காய்ச்சி இதில் தோய்த்து எடுத்து விட வேண்டும் .தண்ணீர் ஒரு வருடத்திற்கு கெட்டு போகாது .” விளக்கினான் .

” அத்தோடு மிக ருசியாக வேறு இருக்கிறது ்எப்படி இது நடக்கிறது ?”

” அது எங்களுக்கு தெரியாது .இந்த ஜாடி செய்ய பயன்படுத்த பட்ட மண் காரணமாக இருக்கலாம் .இது போன்ற ஜாடிகள் பலநூறு வருடங்களுக்கு முன்பு சில முஸ்லீம் குடும்பங்களுக்கு சொந்தமாக இருந்திருக்கின்றன.சில நூறு வருடங்களுக்கு முன்பு நட்புக்காக ஒரு முஸ்லீம் குடும்பத்திடமிருந்து எனது கொள்ளு தாத்தாவிடம் வந்து சேர்ந்திருக்கிறது .”

” ஹப்பா எவ்வளவு …பாரம்பரியம் .” அந்த ஜாடியின் அருகில் சென்று அதனை தடவி பார்த்தாள் .

” பாரம்பரியத்திற்கு விலை போட முடியாது சமுத்ரா …” என்றான் அவள் முகத்தையே பார்த்து .

” கண்டிப்பாக …அதுவும் இது நட்புக்காக வந்த்து .இதனை பத்திரமாக தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வாருங்கள் “

” உன் இன்றைய கட்டுரை என்னவாயிற்று ? ” கேட்ட யோகேஷ்வரன் குரலில் ஒரு துள்ளல் தெரிந்த்து .

” இதோ …” லேப்டாப்பை எடுத்து வந்து அவனிடம் காட்!டினாள

” திருத்தம் ஏதாவது இருந்தால் சொன்னீர்களானால் திருத்தி அனுப்பி விடுவேன் “

வாசித்து கொண்டிருந்தவன் முக பாவத்திலிருந்து எதையும் அறிய முடியவில்லை .மிக நிதானமாக ஒரு முறைக்கு இரு முறை வாசித்தவன் லேப்டாப்பை மேசை மீது வைத்தான்.

பக்கத்தில அமர்ந்திருந்தவள் கையை பற்றி குலுக்கினான் .” அருமை …சமுத்ரா …நிச்சயம் உன் மூலமாக இந்த மக்கள் வாழ்வில் சில மாறுதல்களை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக் கு வந்துவிட்டது ” என்றான் .

” நன்றி …ஆனால் எனக்கு இன்னமும் நிறைய தகவல்கள் வேண்டும். நன்றாக போய்கொண்டிருந்த இந்த மக்கள் வாழ்வு தடம்புரள என்ன காரணம்  ?” தன் கைகளை மெல்ல அவனிடமிருந்து உருவிக்கொண!டாள் .

” நிறைய ..அரசாங்கம் , அதிகாரிகள் …இம்மக்களின் அறியாமை என நிறைய இருக்கிறது .உனக்கு நான் எல்லா விபரங்களும் தருகிறேன் “

” மன்னிக்கனும் சார் .நான் எப்போதும் யாரோ ஒருவர் சொல்லும் தகவல்களை மட்டும் பத்திரிக்கைக்கு பயன்படுத்துவதில்லை .நானே நேரில் சென்று சம்பந்தபட்டவர்களை சந!தித்து உறுதிப்படுத்திய பின்தான் எழுதுவேன் “

” அந்த அர்ப்பணிப்புதானே உன்னை இன்று இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது ” பாராட்டுதலோடு சேர்ந்த பெருமை தெரிந்த்து அவன் குரலில் .

” இந்த மக்களின் வாழ்க்கையில் சில பெரிய மனிதர்களின் பங்கு இருப்பது போல் தெரிகிறது .அதை கண்டுபிடித்தால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட மாட்டேன் சார் ” …்யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுத!தாள.அவனது குரலில் இருந்த பெருமையை கவனிக்காமல் விட்டாள்.

தனது வழக்கமான பாணியில் கைகளை குறுக்கே கட்டியபடி ” ம்ஹூம் ….” என ராகமிழுத்தவன் சமுத்ரா முறைக்கவும் தலையை பின்னால் சரித்து உரக்க சிரித்தான்.

” உங்கள் உடனடி நடவடிக்கைக்காக காத்திருக்கிறேன் மேடம் ” என்றான் கேலியாக தலையை குனிந்து .

கேலியா செய்கிறாய் ! ….இரு என்னிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது இப்படி சிரிக்கிறாயா ?என பார்க்கிறேன் ….மனதினுள இப்படி நினைத்தாலும் இப்போதிற்கு வெளியே சிரிப்புதான் வந்த்து சமுத்ராவிற்கும் .

” அடுத்து என்னவோ ? எனும் ஆவல் தோன்றுமாறு அழகாக கட்டுரையை வடிவமைத்திருக்கிறாய் .அந்த கவிதை முத்தாய்ப்பாய் வெகு அழகு ” மேலும் பாராட்டினான் .

அவன் பாராட்டை கேட்டபடி ” இதனை மேடத்திற்கு மெயில் பண்ணி விடுகிறேன் ” என லேப்டாப்பை தன புறம் திருப்பிக் கொண்டாள் .

” நாளை சில கடலோடிகளை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் “

” கடலோடிகள் என்றால் …” இந்த வார்த்தையை அந்த வயதான மூதாட்டி கூட சொன்னாரே …

” அது மீனவர்களின் வேறு பெயர் .இவர்கள் தங்களை கடலோடிகள் என அழைப்பதையே விரும்புவார்கள் “

” சாப்பிடுறீங்களாண்ணா ?” மேகலை வந்து நின்றாள்.

” சாப்பிடுவோமா சமுத்ரா ?” இவளிடம் கேட்டான் யோகேஷ்வரன்.

மேகலையின் கடுத்த முகத்தை வேடிக்கை பார்த்தபடி ” சாப்பிடலாமே ” என்றாள் சமுத்ரா .

சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டுதானே இருக்கிறோம். இதில் இந்த பொண்ணுக்கு ஏன் இவ்வளவு பொறாமை .

” செல்லா சாப்பிட வருகிறாயா ? ” உள்ளே திரும்பி அக்காவிற்கு குரல் கொடுத்தான் .

” நான் வரலை .முதல்ல அந்த மேடத்தையே கொட்டிக்க சொல்லு ” உள்ளிருந்தபடியே இரைந்தாள்  அவள் .

” அவளுக்கு பசியில்லை போலும் .நாம் சாப்பிடலாம் ்மேகலை கொண்டு வாம்மா .” என்றான் .

சூடான இட்லிகளை கொண்டு வந்து வைத்தாள் மேகலை .  சாம்பார் ஊற்றனாள் .வெள்ளை வெளேர் இட்லியின் மேல் மஞ்சள் சாம்பார் பார்க்கவே அழகாக தோன்ற…பிய்த்து வாயில் போட்ட போது பஞ்சு போல் தொண்டை யை அணைத்தபடி இறங்கியது .

” ம் …சூப்பர் மேகலை …இட்லி ரொம்ப நன்றாக இருக்கிறது ” பாராட்டினாள் சமுத்ரா ்

” சமுத்ரா சமையல் மட்டுமில்லை .நம்ம மேகலை நிறைய கைவேலைகள் அழகாக செய்வாள் ” என்றான் யோகேஷ்வரன்.

” ம் …அவள் வண்ணமிட்ட ஜாடியை பார்த்தேனே …கலர் காம்பினேசன் எல்லாம் ஒரு சிறந்த ஓவியர் போல  அவ்வளவு அழகாக இருந்த்து .”

” எதிர்பாராமல் கிடைத்த இந்த பாராட்டு மேகலையை உச்சி குளிர வைத்தது .” ” ஐயே என்னண்ணே …சும்மா புகழ்ந்துக்கிட்டு ” என நாணினாள் .

” அட நிஜம்தான்மா ..்உதாரணத்திற்கு இந்த வண்ணம் நீ தேர்ந்தெடுத்த விதம் இருக்கிறதே …..” என சற்று எழுந்து அந்த ஜாடி வண்ணத்தை யோகேஷ்வரன் சுட்டியபோது தனது மூன்றாவது இட்லியில் இருந்தான் .

அப்போது அவனது போன் ஒலித்தது .சாப்பிடுவதற்காக தனது சட்டைப்பையலிருந்த போனை எடுத்து டேபிளில் வைத்திருந்தான் .அது சமுத்ராவிற்கும் , யோகேஷ்வரனுக்கும் இடையில் இருந்த்து ்

சமுத்ராவின் விழகள் தானே ஒலித்த போனிற்கு போக அதில் சாவித்திரி என்ற பெயர் மின்னியது .இது அந்த தோப்பு வீட்டு பெண்ணின் பெயர்தானே …??…சமுத்ரா யோசித்து கொண்டிருக்கும் போதே , அந்த ரிங் டோன் ஓசையிலேயே பரபரப்புற்று அவசரமாக இடது கையால் போனை ஆன் செய்து பேசினான் .




” என்னம்மா …நான் இப்போதுதான்…கிளம்பிக் கொண்டேயிருக்கிறேன் ” என்றான் அவசரமாக .

சில நிமிடங்கள் நிறுத்தி எதிர் முனையை கவனித்தவன் ” இதோ பத்தே நிமிடங்களில் அங்கிருப்பேன் ” என்றவன் பேசியபடியே கையை கழுவி விட்டு வேகமாக வெளியேறி புல்லட்டை எடுத்து கொண்டு போய்விட்டான்.

அவன் சென்ற திசையை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவள் , ம்க்கும்  ….என்ற கனைப்புடன் நாற்காலி இழுக்கும் ஓசை கேட்டு திரும்பினாள் .

கால் மேல் கால் போட்டபடி அவள் எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர் புவனாதேவியும் , செல்வமணியும் ….ஒரு சவால் பார்வையுடன் .

அவர்களுக்கு நடுவே வந்து நின்ற மேகலை கையிலிருந்த தட்டை தட்டி தாளமெழுப்பியபடி ‘ நினைச்சது ஒண்ணு….நடந்த்து ஒண்ணு …அதனாலே முழிக்குது அம்மாபொண்ணு ” என ராகமிழுக்க தொடங்கினாள் .

” இப்போ இந்த பாட்டு கச்சேரி எதற்காக ?” கோபத்தை அடக்கி கேட்டாள் சமுத்ரா .

” அட …அடா …என்ன முழிடாப்பா ?” நக்கல் செல்வமணி குரலில் …

” இங்கே பாருங்க நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியலை “

சட்டென டேபிள் மேல் குத்தியபடி எழுந்த புவனா ” ஏய் நிறுத்தடி என்னடி புரியலை ? எப்படியாவது யோகனை கைக்குள்ளே போட்டுக்கலாம்னு நினைச்ச .இப்போ பார்த்தியா ஒரு சின்ன போனுக்கே பக்கத்துல நிக்கிறவங்களை மறந்து இந்த ஓட்டம் ஓடுறான் .அவனை அந்த சாவித்திரி முந்தானையிலிருந்து அவிழ்க்க யாராலும் முடியாது தெரிஞ்சிக்கோ ” என்றாள் .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!