lifestyles

வெயில் காலத்தில் நட்ஸ், உலர் பழங்கள் சாப்பிடலாமா?

காய்கறிகள், பழங்களை அதிக நீர்ச்சத்து கொண்டதாகத் தேர்வு செய்ய வேண்டும். அதைவிட உடல் சூட்டை தணிக்கும் காய்கறிகளாகவும் உணவுகளாகவும் இருக்க வேண்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடிய உணவுகளாக இருக்க வேண்டும். அந்த வகையில் சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் உடல் சூட்டை அதிகரிக்கும். அவை எவை, அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.




​உலர் அத்திப்பழம் (dried figs)

​உலர் அத்திப்பழம் (dried figs)

உலர் அத்திப்பழங்களை (anjeer) வெயில் காலத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.

உலர் அத்திப் பழம் அதிக இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கும். இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். உடல் சூட்டைக் குறைக்க வேண்டுமென்றால் உலர் அத்தியைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.




​உலர் மாங்காய் ( Dried Mango)

​உலர் மாங்காய் ( Dried Mango)

கோடை காலம் என்றாலே அது மாம்பழ சீசன். அதனால் மாம்பழம், மாங்காய் சார்ந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவோம்.

இந்த சீசனில் தான் வருடம் முழுமைக்கும் தேவைப்படுகிற ஊறுகாய் போன்றவற்றை போட்டு வைத்துக் கொள்வோம். அதேபோல மாங்காய் உப்புக்கண்டம் போட்டு எடுத்து வைப்போம்.

இதை செய்து வைத்துக் கொண்டு வெயில் காலம் முடிந்தபின் சமைத்து சாப்பிடுங்கள். ஆனால் வெயில் காலத்தில் உலர் மாங்காயை சாப்பிடாதீர்கள். அது உடல் சூட்டை வேகமாக உயர்த்தும்.




​பிஸ்தா ( Pistachios)

​பிஸ்தா ( Pistachios)

பிஸ்தா ஆரோக்கியமும சுவையும் நிறைந்த ஒரு உலர் நட்ஸ் வகை தான். உடலுக்கு அதிக எனர்ஜியைக் கொடுக்கக் கூடியது. அதிக கலோரியும் கொண்டது.

வெயில் காலத்தில் ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதோடு அதிக கலோரிகளும் எடுத்துக் கொண்டால், உடல் சூடு இன்னும் அதிகமாகும். சாப்பிட வேண்டுமென்று ஆசை தோன்றினால் 2 பருப்பு மட்டும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

​ஏலக்காய் (Cardamom)

வெயில் காலத்தில் ஏலக்காயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏலக்காய்க்கு உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உண்டு. இது வெயில் காலத்தின் இன்னும் கொஞ்சம் உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யலாம்.

அதனால் வெயில் நேரத்தில் ஏலக்காய் சேர்த்து டீ குடிப்பது, ஏலக்காய் அதிகமாக சேர்க்கும் இனிப்பு வகைகளைத் தவிர்த்திடுங்கள்.

​எந்த மாதிரி உலர் பழங்களை சாப்பிடலாம்?

​எந்த மாதிரி உலர் பழங்களை சாப்பிடலாம்?

வெயில் காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருப்பதற்கு சில உலர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

  • உலர் திராட்சை,

  • முந்திரி பருப்பு,

  • பாதாம் பருப்பு,

போன்ற உலர் நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இவை உடல் வெப்பத்தைத் தணித்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.




​தெரிந்து கொள்ள வேண்டியவை

வெயில் காலத்தில் எந்த வகை உலர் பழங்களைச் சாப்பிட்டாலும், மிதமான அளவிலேயே சாப்பிட வேண்டும்.

மினரல்கள் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை உள்ளவர்களாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று பின்பு சரியான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

வெயில் காலத்தில் ஆரோக்கியமான சில உணவு மாற்றங்களைச் செய்து கொள்வது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!