lifestyles

காலை உணவை மட்டும் ஏன் மிஸ் பண்ணவே கூடாதுன்னு தெரியுமா ?

ஒரு நாளில் எந்த சமயத்தில் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை, காலை உணவை மட்டும் தவற விடக் கூடாது என்று பெரியவர்கள் நம்மிடம் அடிக்கடி கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என்பதாலும், காலை உணவுதான் நமக்கு ஆற்றலை கொடுக்கும் என்பதாலும் பெரியவர்கள் இவ்வாறு கூறி வைத்துள்ளனர்.




ஆனால், வாழ்க்கையில் நாம் கடைப்பிடிப்பது என்ன? காலையில் அவசர, அவசரமாக கிளம்பிச் செல்கிறோம் என்ற பெயரில் காலை உணவை பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. கல்லூரியோ, அலுவலகமோ, செல்லும் வழியில் ஒரு டீ, வடை சாப்பிட்டு விட்டால் போதுமானது என்று கருதுகிறோம். காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் உணருவதில்லை. அப்படி என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இப்போது பார்க்கலாம்.

ரத்த சர்க்கரை குறையும் : சீரான உணவை நாம் சாப்பிட்டால் தான் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் போன்றவை கிடைக்கும். ஊட்டச்சத்து கொண்ட உணவை காலையில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ரத்த சர்க்கரை அளவு குறையும். காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வருபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எண்ணங்கள் தடுமாறும் : ஒரு நாள் பொழுதின் மிக முக்கிய உணவாக உள்ள காலை உணவை நாம் தவிர்க்கும்போது, நம் எண்ணங்கள் தடுமாற்றம் அடையும். அத்துடன் நம்முடைய செயல்திறனும் குறையும். மூளையின் செயல்பாடு மந்த நிலையில் காணப்படும்.

இன்னும் அதிகமாக பசிக்கும் : காலை உணவை தவிர்த்தால் அன்றைய நாள் முழுவதும் நமக்கு அதிகப்படியான பசி ஏற்படும். பசியை கட்டுப்படுத்த சிப்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனி வகைகளை நம் மனம் தேடும். இதனால் உடல் ஆரோக்கியம் கெடும்.




இதய நலன் : காலை உணவை முற்றிலுமாக தவிர்க்கும் பழக்கம் உங்களிடத்தில் இருந்தால் நாளடைவில் அது உங்கள் இதய நலனை பாதிக்கும். ஆக, இதய நலனை தக்க வைக்க விரும்பினால் காலை உணவை தவிர்க்கக் கூடாது.

மெடபாலிசம் பாதிக்கும் : உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் காலை உணவை தவிர்க்கின்றனர். ஆனால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் மெட்டபாலிச நடவடிக்கைகள் இயல்பானதாக இருக்க வேண்டும். இருப்பினும், சாப்பிடாமல் இருப்பதால் அந்த நடவடிக்கை பாதிக்கப்படலாம். ஆகவே, உடல் எடையை குறைப்பதாக இருந்தாலும் ஆரோக்கியமான உணவை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலையில் என்ன சாப்பிடலாம்..? : ஆவியில் வேக வைக்கப்பட்ட இட்லி காலையில் பொருத்தமான உணவாக அமையும். அதேபோல சிறுதானிய உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!