lifestyles

குடலில் உள்ள எல்லா புழுக்களையும் வெளியேற்ற இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

குடல் புழுக்கள் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பெரியவர்களுக்கும் இந்த குடற்புழுக்கள் உண்டாகும். குடல் புழுக்கள் உண்டாவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. நம் முன்னோர்கள் இந்த குடல் புழுக்கள், உடல் கழிவுகளை வெளியேற்ற குறிப்பாக கால இடைவெளிகளில் பேதிக்கு எடுத்துக் கொள்வார்கள். அதைத் தவிர சில உணவுகளும் குடல் புழுக்களை அழித்து வெளியேற்றும். அவற்றில் சிலவற்றை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.




குடல் புழுக்களை வெளியேற்றும் பூண்டு

​குடல் புழுக்களை வெளியேற்றும் பூண்டு

பூண்டில் சல்ஃபருடன் அல்லிசின் என்னும் பண்புகளும் இருக்கின்றன.

பூண்டிற்கு குடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள், புழுக்கள், பாராசைட்ஸ் உள்ளிட்டவற்றைக் குடலில் இருந்து வெளியேற்றும் தன்மை உண்டு. அதனால் குடல் புழுக்கள் இருக்கும்போது நிறைய பூண்டு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

​குடல் புழுக்களை வெளியேற்றும் பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்ட ஊள்ளிட்டவற்றோடு நிறைய நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.

இவை குடலில் உள்ள பாக்டீரியாக்கள், கொக்கிப் புழு மற்றும் நாடாப் புழுக்கள் ஆகியவற்றை வெளியேற்றும். மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கும்.

குடல் புழுக்களை வெளியேற்ற குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருமே பப்பாளியை எடுத்துக் கொள்ளலாம்.




​குடல் புழுக்களை வெளியேற்றும் இஞ்சி

இஞ்சியில் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் நிறைந்து இருக்கின்றன.

அதோடு இஞ்சியை உட்கொள்ளும்போது அது குடலில் அமிலத்தன்மையை உற்பத்தி செய்யும்.

இது குடலில் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் கொக்கிப் புழுக்களை வெளியேற்றச் செய்யும்.

​குடல் புழுக்களை வெளியேற்றும் மஞ்சள்

​குடல் புழுக்களை வெளியேற்றும் மஞ்சள்

மஞ்சளில் தனித்துவமான குர்குமின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கிறது.

இதில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் மட்டுமின்றி புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் அதிகம்.

இவை குடலில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவி செய்யும். தினமும் வெதுவெதுப்பாக நீரில் அரை ஸ்பூன் அளவு மஞ்சள் கலந்து குடித்து வர குடலில் இருக்கும் புழுக்கள் மலத்தின் வழியே வெளியேற ஆரம்பிக்கும்.




​குடல் புழுக்களை வெளியேற்றும் வெள்ளரி விதை

வெள்ளரிக்காயில் அதிக அளவில் நீர்ச்சத்து இருக்கிறது. இது உடலை வறடசி மற்றும அதிக வெப்பத்தில் இருந்து காப்பாற்றும்.

வெள்ளரி விதைகள் ஜீரண மண்டத்தில் உள்ள குழாய்களில் இருக்கும் புழுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

வெள்ளரிக்காயை சாலட்டாகவும் வெள்ளரி விதைகளை உங்களுடைய ஸ்மூத்திகளிலும் சேர்த்துக் கொண்டு வர குடலில் புழுக்கள் வராமல் தடுக்க முடியும்.

​குடல் புழுக்களை வெளியேற்றும் வேப்பிலை

​குடல் புழுக்களை வெளியேற்றும் வேப்பிலை

வேப்பிலை நல்ல கசப்புத் தன்மை கொண்டது. இதில் நிறைய மருத்துவ குணஙகள் இருப்பது உங்களுக்குத் தெரியும்.

குடலில் உள்ள எல்லா வகை புழுக்களையும் கழிவுகளையும் வெளியேற்ற வேப்பிலை மிகச்சிறந்த மருந்தாக செயல்படும்.

வேப்பிலைகளை அரைத்து ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு காலை வெறும் வயிற்றில் விழுங்கி தண்ணீர் குடித்து வர, குடலில் உள்ள புழுக்கள் மட்டுமின்றி கழிவுகளும் முழுமையாக வெளியேறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!