Uncategorized

அக்கரன் திரை விமர்சனம்

குந்த்ரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்எஸ் பாஸ்கர் எம்எஸ் பாஸ்கரை நாயகனாக வைத்து வெளி வந்திருக்கும் திரைப்படம் அக்காரன்

தான் வளர்த்த பெண் பிள்ளைகளுக்காக ஒரு தகப்பன் செய்யும், செயல்கள் தான் இந்த படத்தின் கதைக்கரு.

தமிழ் சினிமா ஆரம்பித்த தொன்று தொட்ட காலத்தில் இருந்து, எத்தனையோ முறை திரையில் சொல்லப்பட்ட கதையை, எந்த வித அம்சங்களும் இல்லாமல், இக்காலத்திற்கு ஏற்ற திருப்பங்களோடும், ஆக்சன் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.




அக்கரன் விமர்சனம் 3.25/5

இந்தப் படம் முழுக்க முழுக்க எம் எஸ் பாஸ்கரை நம்பி அவரின் கதாபாத்திரத்தை சுற்றி தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல் காட்சியிலே எம் எஸ் பாஸ்கர் இரண்டு பேரை கடத்துகிறார் அவர்களை சித்திரவதை செய்து தன் பெண்ணுக்கு என்ன ஆனது எனக் கேட்க ஆரம்பிக்கிறார். அப்போதே நமக்கு மொத்தப்படத்தின் கதையும் தெரிந்து விடுகிறது. நாம் நினைத்தபடியே மொத்தப்படமும் நகர்கிறது. ஆனால் இயக்குநர் புத்திசாலித்தனமாக ஒரு டிவிஸ்ட் வைத்திருப்பதாக நினைக்கிறார் ஆனால் அந்த டிவிஸ்ட் நமக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை என்பது வேறு விஷயம்.




முதல் கட்சியிலேயே படம் தெரிந்த பிறகு, படத்தில் எந்த சுவாரசியமும் இருப்பதில்லை. படத்தில் இருப்பவர்களும் நாம் எதிர்பார்க்காத வகையில் எதுவும் செய்வதில்லை. ஒவ்வொரு கட்சியுமே அமெச்சூர் சினிமா தனத்தின் உட்சம்.

நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவு சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். இசை, எடிட்டிங், ஆக்சன் எல்லாம் ஒரு சிறு பட்ஜெட் படத்தில் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது.

இந்தக் கதையை முழு திரைப்படமாக எப்படி எடுக்க நினைத்தார்கள் எனும் ஆச்சரியம் இருந்து கொண்டு இருக்கிறது. பல படங்களில் எம் எஸ் பாஸ்கர் படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக இருப்பார். ஆனால் அவரால் கூட இந்த படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

தமிழ் சினிமாவை இப்போது திரையரங்குகளில் வந்து பார்க்கும் ரசிகர்கள் ரசனையை விட்டுவிட்டு அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அதற்கு நேர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சினிமாவை இந்த சினிமாவின் ரசிகர்களின் யார் என்பதை அறிந்து அவர்களிடம் இந்த படத்தைக் கொண்டு சேர்த்தால் ஒருவேளை அக்காரன் ரசிக்கப்படலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!