Cinema Entertainment விமர்சனம்

ரஜினியின் மாறுப்பட்ட கதை: ‘வீரா’ திரைப் பார்வை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த கடைசி படமாக வீரா உள்ளது. ரெண்டு பொண்டாட்டி கதையான இந்த படத்தை லாஜிக்குடன் ரசிகர்களை நம்பவைத்திருப்பார்கள்.

தெலுங்கில் மோகன் பாபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அல்லரி மோகுடு படத்தின் தமிழ் ரீமேக் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வீரா திரைப்படம். ரீமேக் என்ற ஷாட் பை ஷாட் என்று இல்லாமல் அந்த படத்தின் மையக்கதையை வைத்து தமிழுக்கு ஏற்றவாறும், ரஜினியின் ரசிகர்களுக்கு ஏற்றவாறும் இந்த படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பார் படத்தின் தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமான பஞ்சு அருணாச்சலம்.




ரஜினிகாந்த் – சுரேஷ் கிருஷ்ணா கூட்டணி

அண்ணாமலை படத்தின் மாஸ் ஹிட்டுக்கு பிறகு ரஜினிகாந்த் – சுரேஷ் கிருஷ்ணா கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்தனர். பாட்ஷா கதையை தான் சுரேஷ் கிருஷ்ணா எடுக்க விரும்பியுள்ளார். ஆனால் ரஜினி கேட்டுகொண்டதற்கு இணைங்க வீரா படத்தை எடுக்க சுரேஷ் கிருஷ்ணா ஒப்புக்கொண்டாராம்.

ஒரிஜினல் தெலுங்கு பதிப்பின் கதை ரஜினிக்கு கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை என சுரேஷ் கிருஷ்ணா நினைத்துள்ளார். அதிலும் இரண்டு பொண்டாட்டி கதை என்பதை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்கிற சந்தேகமும் இருந்துள்ளது.

இருப்பினும் திரைக்கதை ஆசியரியரான பஞ்சு அருணாச்சலத்துடன் விவாதம் மேற்கொண்டு ரசிகர்கள் ஏற்கும்படி படத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்ட வந்த பின்னரே ஷுட்டிங் சென்றுள்ளனர்.




ரெமாண்டிக் காமெடி கதையாக வீரா

குடும்ப செண்டிமென்டுடன் கூடிய ரெமாண்டிக் காமெடி பாணியில் வீரா படத்தின் கதை அமைந்திருக்கும். வழக்கமாக ரஜினி படங்களில் இருக்கும் பவர்புல் வில்லன் இந்த படத்தில் கிடையாது.

கிராமத்தில் இருந்து பாடகராக வேண்டும் என்ற லட்சியத்தில் நகரத்துக்கு வரும் ரஜினி மீது காதல் வயப்படும் ரோஜா அவரை திருமணம் செய்து கொள்கிறார். இந்த சூழ்நிலையில் கிராமத்தில் இருந்தபோது ஏற்கனவே காதலித்து வந்த மீனாவையும் ரஜினி திருமணம் செய்து கொள்கிறார். இறுதியில் உண்மை தெரியவர என்ன நடந்தது என்பது தான் வீரா படத்தின் கதை.

பிளாஷ்பேக்கில் வரும் கிராமத்து காட்சியில் குறும்புத்தனம் செய்யும் இளைஞனாகவும், மீனாவை உருகி காதலிக்கும் கதாபாத்திரத்திலும் தோன்றியிருப்பார் ரஜினி. அதேபோல் நகரத்து காட்சியில் பாடகராகவும், ரோஜவின் கணவராகவும் நடித்திருப்பார். படத்தில் செந்தில் சோலோ காமெடியனாக ரஜினியுடன் இணைந்து பட்டைய கிளப்பியிருப்பார்.

மீனா, ரோஜா என இரு நாயகிகளும் தங்களது கதாபாத்திரங்களை ரசிக்கும் விதமாக செய்திருப்பார்கள். இதில் மீனாவின் கேரக்டர் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருக்கும் . குறிப்பாக ரஜினி காமெடி, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என அனைத்து விதமான காட்சிகளிலும் இந்த படத்தில் ரசிக்க வைத்திருப்பார்.

பிளாஷ்பேக் காட்சியில் மறைந்த காமெடியன் விவேக், ரஜினியுடன் இணைந்து காமெடி செய்திருப்பார்.




இளையராஜா – ரஜினி காம்போவின் கடைசி படம்

ரஜினிகாந்த் படத்துக்கு இளையராஜா இசையமைத்த கடைசி படமாக வீரா உள்ளது. படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படம் ரிலீசான காலகட்டத்தில் டிவியில் அதிகமுறை ஒளிபரப்பப்பட்ட பாடலாக கொஞ்சி கொஞ்சி அலைகளோட, மலை கோயில் வாசலில் பாடல்கள் அமைந்திருந்தன. அத்துடன் ரஜினிக்கு என தனியான இண்ட்ரோ பாடல் இல்லாமல், பாடல்கள் அனைத்தும் டூயட் பாடலாக இதில் இடம்பிடித்திருக்கும்

ரசிகர்களை கவர்ந்த வீரா

தமிழ் புத்தாண்டு ரிலீசாக வீரா படம் வெளியானது. இந்த படத்துடன் விஜய்காந்தின் ஹானஸ்ட் ராஜ், கார்த்திக் நடித்த சீமான், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் செல்வா நடித்த சக்திவேல், பிரபுதேவா நடித்த இந்து ஆகிய படங்கள் வெளியாகின. வீரம் படம் முதல் வாரத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இரண்டாவது வாரத்தில் நன்கு பிக்கப் ஆகி 100 நாள்கள் வரை ஓடியது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றது.

இந்த படத்துக்கு முன்னர் ரஜினி நடிப்பில் வெளியான வள்ளி எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில், வீரா படத்தின் வசூல் திருப்திகரமாக அமைந்தது. ரஜினிகாந்த் நடித்த சிறந்த ரெமாண்டிக் காமெடி படம் என்றே சொல்லலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!