lifestyles

குடும்பத்துடன் 500 ரூபாய்க்கு ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம்.. எந்த இடம்?

கோவை மாவட்டத்தில் மூலிகை குளியல், பரிசல் சவாரி, பிரியமான உணவு வகைகளுடன் சேர்த்து, இப்படி ஒரு சுற்றுலா தலம் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் அது எங்கு இருக்கிறது, அங்கு எப்படி செல்லலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

பரளிக்காடு, பூச்சிமரத்தூர் : இயற்கையோடு பின்னி பிணைந்து இருக்கும் இடம் தான் பரளிக்காடு, பூச்சிமரத்தூர். இது கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பகுதி. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் காரமடை அருகே இருக்கிறது.




எப்போதெல்லாம் அனுமதி? : இங்கே, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு வனத்துறை அலுவலர்களிடம் முன்பதிவு அவசியம். குடும்பத்துடன் செல்கிறீர்கள் என்றால், 5, 10 மற்றும் 15 பேர் என்றால் கூட முன் கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்ய வேண்டும். மற்ற சில நாட்களிலும் அனுமதி உண்டு. ஆன்லைன் வழியாகவும் வனத்துறை இணையதளத்திற்கு சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.

பரளிக்காடு எப்படி செல்லாம்? : பரளிக்காடு செல்ல பஸ் வதியும் இருக்கிறது. ஆனால் நேரம் ஒத்துவாரது. பைக்குகளிலும் செல்லலாம் ஆனால், வன விலங்களால் உங்களுக்கு இடையூம் ஏற்படும். 4 சக்கர வாகனங்களில் கார் சிறந்தது. இதில் மலைப்பகுதிகளில் ஏற்ற காரை பயன்படுத்துவதே அதிலும் சிறந்தது.

மலைவாழ் மக்கள் வரவேற்பு : நீங்கள் பூச்சிக்காட்டிற்கு நுழைந்தவுடன் ரம்மியமாக இருக்கும் அந்த இயற்கை சூழலுடன் மழைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர் உங்களை புன் சிரிப்போடு வரவேற்பார்கள். அப்போது, உங்களுக்கு சுவையான சுக்கு காப்பியும் வழங்கப்படும்.

பரிசல் சவாரி : பில்லூர் ஆற்றில் நீங்கள் மகிழ்ச்சியாக பயணிக்கலாம். இங்கு 30க்கும் அதிகமான பரிசல்களில் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் 4 பேர் வரை பயணிக்கலாம். அந்த ரம்மியமான இயற்கையை ரசித்து கொண்டே செல்லலாம். உங்களின் அனைத்து கவலைகளையும் மறந்துவிடவும் செய்கிறது.

இயற்கையான உணவுகள் : மலைவாழ் மக்கள் சமைத்த இயற்கை உணவுகளையும் நீங்கள் ஒரு பிடி பிடிக்கலாம். இதில் கலி உருண்டை, வெஜ் பிரியாணி, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, சப்பாத்தி, மசியல், வெங்காய தயிர் பச்சடி, வெங்காயம், ஊறுகாய், அப்பளம் உள்ளிட்ட இயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன.




பொழுதுபோக்கு : பெரிய ஆலமரத்தில் கட்டியுள்ள ஊஞ்சல்கள், கயிறு கட்டில்களில் மகிழ்ச்சியாக விளையாடலாம். பிறகு வனத்துறையினர் காரமடை செல்லும் கூலாங்கள் ஆற்றுக்கும் அழைத்து செல்வார்கள். அங்கும் நீங்கள் விளையாண்டு மகிழலாம்.

கட்டண முறை : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பரிசல் பயணம், மதிய உணவு, மூலிகை குளியல் உள்ளிட்டவைகளை இங்கே அனுபவிக்க முடியும். பரளிக்காடு சுற்றுலா தளத்திற்கு பெரியவர்களுக்கு ரூ.500ம், சிறியவர்களுக்கு 400 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பூச்சிமரத்தூர் சுற்றுலா : காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை உணவுடன் சேர்ந்து, பூச்சிமரத்தூர் சுற்றுலாவுக்கு ரூ.1500 வசூலிக்கப்படுகிறது. இந்த பயணம், பூச்சிமரத்தூர் சுற்றுலா தளத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், பெரியோர்களுக்கு ரூ.1500ம் சிறியவர்களுக்கு ரூ.800ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.( குறிப்பு: கட்டணங்கள் சற்று ஏற்ற குறையும் இருக்கும்) 5 வயதில் உள்ளோர்களுக்கு கட்டணம் இலவசம். இந்த கட்டணத்தில் தங்குவோர்களுக்கு 3 நேரம் உணவும், வனத்துறையால் வழங்கப்படும் அழகான தங்கும் இடங்களும் வழங்கப்படுகிறது.

லாபம் நோக்கம் அற்றது : இந்த சுற்றுலா வனத்துறையால் நடத்தப்படுகிறது. இது லாபம் நோக்கம் அற்றது. உங்களிடம் கட்டணமாக வாங்கப்படுவது மலை வாழ் மக்களின் நலனுக்காகவும், பரிசல், சாப்பாடு உள்ளிட்டவைகளுக்கும் செலவிடப்படுகிறது.




What’s your Reaction?
+1
25
+1
75
+1
1
+1
7
+1
1
+1
6
+1
4
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
subhashini sthish
subhashini sthish
12 days ago

hai thanks for the information but what is the contact number or details to approach.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!