gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (10.04.24)

சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 08.34 வரை துவிதியை. பின்னர் திரிதியை. இன்று காலை 07.16 வரை அஸ்வினி. பின்னர் பரணி. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷ ராசி அன்பர்களே!

வியாபாரிகளுக்கு லாபம் குறைவாக கிடைக்க கூடிய நாள். உங்களின் பழைய வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். செலவுகளை சமாளிக்க முடியும். அனைத்து துறையில் இருந்து திறம்பட செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ப பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆன்மீக விஷயத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் திட்டமிட்ட வேலைகள், உடல்நல பிரச்சினை காரணமாக செய்து முடிக்க முடியாமல் போகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று புதிய ஒப்பந்தங்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படவும். ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி அன்பர்களே!

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய முக்கியமான நாளாக அமையும்.. கட்டுமானம் தொடர்பான விஷயத்தில் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை கவனமாக செயல்படுத்த நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் உங்களின் பணிகளை முடிக்க முடியும். உங்களின் தலைமைத்துவம் திறன் வளரும்.மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடக ராசி அன்பர்களே!

கடக ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்க நாளாக இருக்கும். இது கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும் .வேலை, தொழில் தொடர்பான முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்கவும். நிதி சார்ந்த விஷயங்களில் பிறரின் ஆலோசனை பெற வேண்டாம். மாணவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலனை பெறுவீர்கள். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் .தட்சிணா மூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான பலம் தரக்கூடிய நாள். புதிய திட்டங்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று யாரையும் கண் மூடி தனமாக நம்ப வேண்டாம். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த வேலைகள் முடிக்க முடியும். உங்களின் வருமானம் உயர்த்துவதற்கான முயற்சிகள் வெற்றியடையும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். தாய் வழி சொந்தங்கள் மூலம் நல்ல பலனை அடைவீர்கள்.அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று உங்களின் சுகபோகம், ஆடம்பரங்கள் பெருகும். புதிய வாகனம் வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும்.எந்த ஒரு வேலைகளும் அவசரப்பட்டுச் செயல்பட வேண்டாம். குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை பிறரிடம் தவிர வேண்டாம். மாணவர்கள் கல்வியில் இருந்து பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தைகளின் பொறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் கூடுதலாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை, பதவி கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். அரசு தொடர்பான திட்டங்களில் நல்ல லாபம் அடைவீர்கள். வேலையை மாற்ற நினைப்பவர்கள், உங்கள் முயற்சியை சில நாட்கள் தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். விநாயகப்பெருமானை வழிபடுவ தன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். திருமணம் முயற்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக முடிப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் மீது முழு நம்பிக்கை ஏற்படும். இன்று உங்களின் உடல்நிலை குறித்து சற்று கவலைப்படுவீர்கள்.பைரவரை வழிபடுவதன் மூலம் முயற்சிகள் சாதகமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான வேலையில் முழு ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனை நற்பலனை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். உங்கள் பேச்சிலும், நடத்தியும் இனிமையை கடைப்பிடிக்கவும்.இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு நல்ல லாபம் பெறுவீர்கள். இன்று மேன்மை தரக்கூடிய முக்கியமான நாளாக அமையும். அதிகரித்து வரும் செலவுகளை மிகவும் கவனமாக கட்டுப்படுத்துவது அவசியம். இன்று கடந்த கால தவறுகளில் இருந்து அனுபவத்தை பயன்படுத்துவீர்கள். தொழில், வேலை தொடர்பாக நீண்ட பயணம் செல்ல நேரிடும். அவசர அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு நல்ல நாளாக அமையும். பணியிடத்தில் லாபத்திற்கான புதிய ஆதாரங்கள் கிடைக்கும். இல்லற வாழ்வில் பிரச்சனைகள் கவலையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. அரசாங்கம் தொடர்பான வேலைகள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இக்கட்டான நேரத்தில் வாழ்க்கை துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இடையூறுகள் விலகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வரவு மற்றும் செலவு இடையே சமநிலையை பராமரிப்பது அவசியம். பணியிடத்தில் உங்களின் வேலையில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் கவனமாக பழகவும். இன்றைய நேர்மை, நேர்மறையான சிந்தனையுடன் செயல்படவும். தாய் வழியிலிருந்து நிதி நன்மைகளை பெறுவீர்கள். இன்று மற்றவர்களுக்கு கொடுத்த கடன் தொகையை திரும்ப பெற சாதகமான நாள். மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!