Cinema Entertainment விமர்சனம்

சரத்குமார் நடிப்பில் வெளியான கிராமத்து பின்னணி பக்கா மசாலா (மூவேந்தர்) படம்

கதை, திரைக்கதை சிறப்பாக இருந்தும் மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களால் தாக்குபிடிக்க முடியாமல் வசூலில் கோட்டை விட்டது மூவேந்தர் திரைப்படம். இருப்பினும் சரத்குமார் நடித்த சிறந்த மசாலா படங்களில் ஒன்றாக இந்த படம் இருந்து வருகிறது.

சரத்குமார் சினிமா கேரியரில் பீக்கில் இருந்தபோது வெளியான படம் மூவேந்தர். சூர்யவம்சம் படத்தின் ஹிட்டுக்கு பிறகு பொங்கல் வெளியீடாக படம் வெளியானது. 1998 பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதியே பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம், ரசிகர்களை குஷிப்படுத்தினாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது.




சூர்யவம்சம் படத்தில் ஜோடி பொருத்தம் வெகுவாக பேசப்பட்டதால், தேவயானி, சரத்குமாருக்கு ஜோடியாக மீண்டும் இந்த படத்தில் நடித்தார். எம்என் நம்பியார், எஸ்வி ராமதாஸ், மணிவண்ணன், ஆனந்த ராஜ், லட்சுமி, டெல்லி கணேஷ் உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.

சூர்ய வம்சம் படத்தில் தோன்றிய கதாபாத்திரத்துக்கு நேர் எதிராக அடவடியான கேரக்டரில் மூவேந்தர் படத்தில் சரத்குமார் நடித்திருப்பார். அவரது கெட்டப்பும் முறுக்கு மீசை, புலிப்பல் டாலர், ஜிப்பா அணிந்து அட்டகாசமாக அமைந்திருக்கும். படத்தில் அடிதடி, சண்டை என முன்பகுதியிலும், பிற்பகுதியில் செண்டிமெண்ட், எமோஷன் நிறைந்த பாத்திரமாக இருக்கும் அவரது கேரக்டர் ரசிகர்களை பெரிதாக கவராமல் போனது.




படத்தின் கதை, திரைக்கதையை விறுவிறுப்பு குறையாத வகையிலும், வெகுஜன ரசிகர்களை கவரும் விதமாக காட்சியமைப்புடன் உருவாக்கியிருப்பார் இயக்குநர் சுராஜ். சுந்தர் சி உதவி இயக்குநராக இருந்த இவருக்கு இது அறிமுகமாக படமாக அமைந்தது.

நல்ல ஓபனிங்கை பெற்ற போதிலும், பொங்கல் நாளில் வெளியான விஜயகாந்த் நடித்த உளவுத்துறை, சுந்தர் சி இயக்கிய நாம் இருவர் நமக்கு இருவர், மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி உள்பட படங்களுக்கு மத்தியில் காணாமல் போனது.

சிற்பி இசையமைப்பில் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. ஹரிஹரன் குரலில் நான் வானவில்லையே பார்த்தேன் என்ற பாடல் சரத்குமாருக்கு சிறந்த மெலடியாக இருந்து வருகிறது. இதுதவிர சோக்கு சுந்தரி, சேரன் என்ன போன்ற பாடல்களும் ஹிட்டாகின.

சரத்குமார் நடிப்பில் 1998ஆம் ஆண்டில் மூவந்தர் படத்துடன் நட்புக்காக, சிம்மராசி ஆகிய படங்களும் வெளியாகின. மற்ற இரண்டு படங்கள் ஹிட்டாக மூவேந்தர் நல்ல தொடக்கத்தை தந்தபோதிலும் வசூலில் கோட்டை விட்டது.

சரத்குமார் நடித்த சிறந்த மசாலா திரைப்படங்களில் ஒன்றாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் இருந்து வரும் மூவேந்தர் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. த்ரோபோக் படங்களை பார்க்க விரும்புவோருக்கு சரத்குமார் நடித்த சிறந்த டைம் பாஸ் படமாகவே மூவேந்தர் இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!