Cinema Entertainment

எதிர்நீச்சல் மனைவியர்கள் வாங்கும் சம்பளம்

டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற சேனல் சீரியல்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி எப்பொழுதுமே முதல் இடத்தில் சிம்ம சொப்பனமாக இருப்பது சன் டிவி சேனல் தான். அந்த வகையில் சன் டிவி சீரியலுக்கு மவுஸ் ஏறியது என்றால் அது எதிர்நீச்சல் மூலமாகத்தான். தற்போது வேண்டுமென்றால் கொஞ்சம் சரிவு பார்த்திருக்கலாம். ஆனாலும் இந்த நாடகத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு மட்டும் இன்னும் குறையவில்லை.

Ethirneechal Janani Reveals The Story Of Upcoming Episodes; Says 'They Are Ready To Beat Marimuthu Sir' - Filmibeat

அதனால் தான் என்னமோ வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அதை எல்லாம் வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டார்கள். அதற்கு காரணம் படங்களில் நடிப்பதை காட்டிலும் இதில் அவர்கள் கிடைக்கும் அதிகமான சம்பளம். அது மட்டுமில்லாமல் கதையோடு ஊறி ஒன்றிப்போய் நடிக்கும் அளவிற்கு எதார்த்தமான கதாபாத்திரங்களாக மாறி விட்டார்கள்.




இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் மனைவிமார்களாக நடிக்கும் நடிகைகளின் சம்பள பட்டியலின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆரம்பத்தில் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த கனிகா ஒரு சில படங்களில் நடித்த பிறகு பின்னணி குரலுக்கு வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்தார். அப்படிப்பட்ட இவருக்கு முதன் முதலாக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குணசேகரின் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரம்.

சில இடங்களில் அமைதியாக இருந்தாலும் எந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கச்சிதமாக நடிக்க கூடியவர். அப்படிப்பட்ட இவருக்கு ஒருநாள் ஷூட்டிங்-காக 12,000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இதனை அடுத்து தெலுங்கில் பல சீரியல்கள் நடித்திருந்தாலும் தமிழில் நடிக்கும் முதல் கதாபாத்திரம் தான் ஜனனி. இவருடைய உண்மையான பெயர் மதுமிதா இவருக்கு 12,000 ரூபாய்.




அடுத்ததாக சீரியலில் பல கதாபாத்திரங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் ஹரிப்ரியா. ஆனாலும் இந்த ஒரு கதாபாத்திரத்துக்கு இவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. நந்தினிக்காகத்தான் இந்த சீரியலையே நாங்கள் பார்க்கிறோம் என்ற சொல்லும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பையும், துடிப்பான பேச்சையும் கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட இவருக்கு 10000 ரூபாய்.

இதனை அடுத்து டான்ஸ் மட்டுமே உலகம் என்று இருந்த பிரியதர்ஷினிக்கு முதன் முதலாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது எதிர்நீச்சல் தான். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் ரேணுகா கணவரின் அன்புக்காக ஏங்கும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட இவருக்கு சம்பளம் 10000 ரூபாய். அடுத்ததாக எல்லாத்தையும் ஆட்டிப்படைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் குணசேகரின் அம்மா விசாலாட்சி என்கிற சத்யபிரியாவு 8000 ரூபாய் வாங்குகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!