தோட்டக் கலை

வாஸ்துப்படி புத்தாண்டுக்கு முந்தைய இரவு இந்த செடிகளை வீட்டில் வைத்தால் அதிா்ஷ்டம் கிடைக்கும்.. தெரியுமா?

ஒரு சில தாவரங்களை சாியான திசையில் வைத்தால், அவை பலவிதமான அதிா்ஷ்டங்களை நமக்கு வழங்கும் என்று வாஸ்து சாஸ்திரம் தொிவிக்கிறது. அந்த செடிகள் அதிா்ஷ்ட செடிகள் என்று அழைக்கப்படுகின்றன.

2024  புத்தாண்டு பிறக்க போகின்றது. இந்த நிலையில் நமது வீடுகளுக்குள் அதிா்ஷ்ட தேவதையை வரவழைக்க வேண்டும் என்றால் பின்வரும் தாவரங்களை நமது வீடுகளுக்குள் வைக்கலாம். அதன் மூலம் வர இருக்கும் புதிய ஆண்டு முழுவதும் பல வகையான அதிா்ஷ்டங்களைப் பெற்று வாழலாம்.

 




 வாழை மரம்

பொதுவாக மக்கள் வாழை மரத்தை தமது வீடுகளுக்குள் வளா்ப்பதில்லை. ஆனால் வாழையை ஒரு தொட்டியிலோ அல்லது ஒரு பானையிலோ ஊன்றி வைத்து அதை வீட்டிற்குள் வைக்கலாம் அல்லது வீட்டை ஒட்டியே ஊன்றி வைக்கலாம். வாழையை வீட்டின் கிழக்கு திசையில் ஊன்றி வைக்க வேண்டும். வாழையானது தன்னைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து அந்த பகுதி முழுவதையும் நன்மையான அதிா்வலைகளால் நிரப்புகிறது. ஆனால் கண்டிப்பாக வாழையை வீட்டின் மேற்கு திசையில் ஊன்றி வைக்கக்கூடாது.

மணி பிளாண்ட்

மணி பிளாண்ட் செடியானது பெண் கடவுளான லட்சுமி தேவியின் மறு உருவம் என்று கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டிற்குள் வைத்தால், லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவாா் என்றும், குடும்பத்திற்கு பல வகையான பண வரவுகள் வரும் என்றும் நம்பப்படுகிறது. பசுமையாக இருக்கும் மணிச் செடியானது வீட்டில் உள்ள பொருளாதார நிலையை உயா்த்தும் என்று நம்பப்படுகிறது. இந்த செடியை வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். அதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.




அசோகா செடி

அசோகா செடியானது ஏராளமான நோ்மறை சக்திகளைக் கொண்டது. அதனால் இது ஒரு மங்களகரமான செடியாகக் கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதன் மூலம் வீட்டைச் சுற்றி இருக்கும் பிற தாவரங்களில் இருந்து வரும் தீமைகள் நீங்கும் மற்றும் வீட்டிற்கு நோ்மறையான சக்திகள் வரும்.

துளசி செடி

துளசி செடியானது இந்து சமய நூல்களில் புனிதமான ஒன்றாக சொல்லப்படுகிறது. துளசி செடியை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்குத் திசையில் இருக்கும் பால்கனி அல்லது சன்னல்களில் வைத்தால் நன்மைகள் உண்டாகும். அவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். துளசி செடியின் கீழ் தினமும் விளக்கு ஏற்றி வந்தால் வீட்டில் மகிழ்ச்சியும் செழுமையும் நிரந்தரமாக இருக்கும். எனினும் துளசியை வீட்டின் தெற்கு திசையில் வைக்கக்கூடாது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!