Cinema Entertainment விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள் :திரை விமர்சனம்

சாகித்ய அகாடமி விருது  பெற்ற  எழுத்தாளர், இலக்கிய சிங்கம்  ஜே கே எனும்  ஜெய காந்தன் ஆனந்த விகடன்ல  அந்தக்காலத்துல   முத்திரை  சிறுகதையா அக்னி பிரவேசம்  என ஒரு சிறுகதை  எழுதினார். அது  பலரின்  பாராட்டுதல்களைப்பெற்றது. அதுக்குக்கிடைச்ச   வரவேற்பைப்பார்த்து பிரமித்த  அவர் அதை  டெவலப்  பண்ணி  கங்கா எங்கே  போகிறாள்?  என்ற நாவல்  எழுதினார், அது  அக்னிப்பிரவேசம்  கதையின் தொடர்ச்சியாக  அமைத்தார். கதை  முடியும் இடத்தில்  நாவல்  துவங்கும்,  அதுதான்  சினிமாவாக  சில நேரங்களில்  சில  மனிதர்கள்




சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] by Jayakanthan | Goodreadsசில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம் | Sila Nerangalil Sila Manithargal (1977) Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil

பொதுவா  எழுத்தாளர்களின்  கதைகள்  சினிமா ஆகும்போது  சினிமாவுக்கு  ஏத்தபடி கதை சொல்றேன்னு அதை  சிதைச்சிடுவாங்க., அந்தத்தப்பு  இதுல  நடக்கலை , பீம்சிங்  தன் வழக்கமான  பாணியிலிருந்து  விலகி  இதை  எடுத்திருந்தார் 

முதல்ல  அந்த  சிறுகதை  என்ன? என்பதை  சுருக்கமா  பார்த்துடுவோம், ஆல்ரெடி  அந்த  கதை  படிச்சவங்க  இந்த  பத்தியை ஸ்கிப்  பண்ணிடலாம்.  ஒரு மழை நாள். பஸ் ஸ்டாப்ல  நாயகி    பஸ்க்கு  வெய்ட்டிங். எல்லாரும்  அவங்கவங்க    பஸ்  வந்ததும்  ஏறிப்போறாங்க. நாயகி  போற  பஸ்  மட்டும்  வர்லை. காத்திருக்கையில் அவள்  முன்  ஒரு கார் நிதானமா வந்து  நிற்குது, பின் கதவை  திறந்து  விடறார்  கார்  ஓனர். நாயகி  கொஞ்சம்  யோசிச்சு  பின்  வேற  வழி இல்லாம  அதில்  ஏறிக்கறா . யாரும்  எதும் பேசலை. கார்  பாட்டுக்குப்போய்க்கிட்டு இருக்கு . கொஞ்சம்  தூரம்  போனதும் இது நான் போக வேண்டிய வழி இல்லையே? காரை நிறுத்துங்கனு நாயகி சொல்லியும்  கார் ஓனர்  அதை சட்டை செய்யலை ஒரு தனிமையான  இடத்துல  நிக்குது.   கார்  ஓனர் இறங்கி  பின் கதவைத்திறந்து  உள்ளே  போறார்.10  நிமிசம்  கழிஞ்சு  காரை நாயகி  வீட்டுக்கு  அருகே  தெரு  முனையில்  டிராப்  பண்ணிட்டு  போய்டுது  கார். நாயகியின்  அம்மா  விபரம்  அறிந்து   அவள்  தலையில் ஒரு குடம் தண்ணீர்  ஊற்றிஅவ்ளோ  தான்  நீ சுத்தம்  ஆகிட்டே  அப்டிங்கறா. அதான் கதை




இந்தப்படத்துல  நாயகிக்கு அதே சம்பவம் நடக்குது , ஆனா  வீட்ல  ஆர்ப்பாட்டம் பண்ணி  ஊரைக்கூட்டி  அவமானப்படுத்திடறாங்க. கெட்டுப்போனவளுக்கு இங்கே இடம்  இல்லைனு  துரத்தி  விட்றாங்க நாயகி  ஒரு உறவுக்காரர் (  தாய்மாமா) வீட்ல தங்கி  மேல்  படிப்பு  படிக்கறா. 12  வருடங்கள்  கழித்து  ஒரு ஃபிஸ்ல  அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசரா  ஒர்க் பண்றதைக்காட்றாங்க

 நாயகி  தன்னை  இந்த  நிலைக்கு ஆளாக்கின  பணக்காரரை  ஒரு எழுத்தாளர்  மூலமா அடையாளம்  தெரிஞ்சுக்கறா. அந்தப்பணச்க்காரருக்கு  ஒரு குடும்பம் இருக்கு , மனைவி 3   வாரிசுகள் . இதுக்குப்பிறகு  நடக்கும்  சம்பவங்கள்  தான் மிச்ச்ச  மீதி  திரைக்கதை

இந்த  படத்துல  குறிப்பிட்டுச்சொல்லவேண்டியது  2 அம்சங்கள் . கதாசிரியரின்  திரைக்கதை  அமைப்பும், நாயகியின்  கேரக்டர் ஸ்கெட்சும். அந்தக்காலத்துலயே  அபாரமான  புரட்சிப்பெண்ணா  வடிவமைக்கப்பட்ட  கேரக்டர்  ( பிற்காலத்தில்  வந்த  ஆர் சி சக்தியின்  சிறை  கூட இதே  கதை  அமைப்பின் சாயல் தான் , புதிய  பாதை கூட )

Sila Nerangalil Sila Manithargal full Tamil Movie 1977 சில நேரங்களில் சில மனிதர்கள் தமிழ்படம் - YouTube

 நாயகியா  அபாரமான  உடல் மொழி , அட்டகாசமான  நடிப்பு  என  கலக்கி  இருந்தார்  லட்சுமி . அப்பாவிப்பெண்ணாக  காரில்  ஏறும்போது  ஒரு வித  நடுக்கம் காட்டிய  அவர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசராக  காட்டும் கெத்து  அழகு . மாமா, அம்மா  முன் சோபாவில் கால் மேல் போட்டு அமரும் கம்பீரமும்  அருமை / சபலிஸ்ட்  மாமாவை   லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  பண்ணுவதும்  , க்ளைமாக்ஸில்  பொங்குவதும்  அற்புதம் .




சோர்வாகவே  இருக்கும்  அவர்  நாயகனைக்கண்டதும்  சூரியனைக்கண்ட  தாமரை மாதிரி , சூரிய காந்திப்பூ மாதிரி  நந்தியாவட்டை இதழ் போல சிரிப்பது கண்கொள்ளாக்காட்சி . க்ளைமாக்ஸில் அவர்  குடைக்குள்  மழை  பார்த்திபன்   மாதிரி  , மயக்கம் என்ன  தனுஷ்  மாதிரி கற்பனையில்  கற்பிதம்  செய்து  வாழ்வது  உருக்கம். 

 நாயகனா  ஸ்ரீகாந்த் . இவர்  தான் ஒன்றும் அவ்ளோ நல்லவன் கிடையாது  என  வெளிப்படையாக  சொல்லிக்கொல்லும் கெட்டவன்  என  கேரக்ட்சர்  ஸ்கெட்ச்  அமைக்கப்பட்டாலும்  கதாசிரியர்  அந்த கேரக்டர்  மேல்  மரியாதை அல்லது  பரிதாபம்  ஏற்படும் வகையில்  தான்  அமைத்திருக்கிறார்.  எனக்கு  அப்டி ஏதும்  பரிதாபம் வரவில்லை . ஒரு வேளை  அந்தக்கால  லேடீஸ்  ஆடியன்சுக்கு  அப்டி  உணர்வு  வந்திருக்கலாம். 

சபலிஸ்ட்  மாமாவாக  வருபவர்  நடிப்பு  கனகச்சிதம். ரைட்டர்  ஏகே  வாக  வரும் நாகேஷ்  கேரக்டரை  ஜே கே  தன்னைப்போலவே  சாயலில்  அமைத்திருக்கிறார். 

லட்சுமியின் அம்மா  கேரக்டர்  கூட நல்ல நடிப்பு , ஆனா  அவர் சகோதரர் , நங்கையா  போன்றவர்கள்  நடிப்பு  நாடகத்தனம் . அதே போல்  ஆஃபீசில்  லட்சுமியின்   உதவியாளராக வரும்  பெண்மணியின் நடிப்பில் , உடல் மொழியில்  ஒரு செயற்கைத்தன்மை  எட்டிப்பார்க்கிரது. 

 எம் எஸ் வி இசை  அருமை. அந்தக்காலத்தில்  வந்த  அபூர்வமான  கதை அம்சம் கொண்ட  நல்ல  படம் , பார்க்காதவங்க  பாருங்க , லேடீஸூக்கு ரொம்பப்பிடிக்கும் .




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!