Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-21

21

 

இரண்டு நாட்களாக மோகன் குடும்பத்தில்

அடித்துக் கொண்டிருந்த புயல் மெதுவாக ஓய்ந்து கொண்டிருந்த வேளையில்…..,

தாராவின் மனதில் அதே புயல் மையம் கொண்டு தாக்கத் தொடங்கியது.

“மோகன் நொடிப் பொழுதில் அவளது தீயை அணைத்து, மேல் சட்டை, கால் சட்டையை கிழித்து தன் சட்டையை போர்த்தி,

யாரிடமோ துப்பட்டவை உருவி அவளை மூடி தன்னை பூக்குவியலாக தூக்கியது மட்டும்”

அவளுக்கு நினைவுக்கு இருந்தது…

அப்புறம் ஆம்புலன்ஸில் மோகனின் குரல், தனது ஆசிரியையிடம் பேசியது கேட்ட போது தான் லேசாக கண் விழிப்பு வந்தது..

ஆனால் பயம், மருந்து ஆகியவற்றின் மயக்கத்தில் இருந்தாள் தாரா.

அன்று இரவு மீண்டும் நினைக்கும் போது

” தான் ஏதோ தவறாக செய்து தீ பிடித்தது” நினைவுக்கு வந்தது..

மற்றவை மறந்து மோகன் அவளைக் காப்பாற்ற….. அவளைத் தூக்கிய ஸ்பரிசம்….. நினைவுக்கு வந்தது..

தான் மட்டுமே உணர்ந்த அந்த ஸ்பரிச சுகம் இப்போது ஆட்டு வித்தது

தாராவை…

“தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து” நெஞ்சுக்குள் சாரக் காத்து அடிக்க துவங்கியது….

“இரண்டு வருடம் முன் தன் கையை தட்டி விட்ட மோகன் நெஞ்சில் மாற்றமா.????.”

“தன்னளவில் மரியாதையாகத் தான் மோகன் பழகி வந்தானே….”

“தான் தான் அவனை அலட்சியம் செய்தோமே…”என நினத்தாள்..

அடுத்த நாள் காலையில்,

“ரெண்டு நாள் ரெஸ்ட் எடு அப்புறம் காலேஜ் போவது பற்றி யோசிக்கலாம் என ராமசாமி சொல்லிய போது

” அப்பா….மோகன் வீட்டுக்கு மட்டும் போய் நன்றி சொல்லி வரட்டுமா???” அவன் தானே என்னை காப்பாத்தினான்!!!!…”

“எத்தனை நாளா நடக்குது இது…??”

துண்டு சீட்டை வீசி எறிந்தார் தாரா மேல்.

“மோகன் கையெழுத்தில் அந்த துண்டு சீட்டு…




ஆனால்…..அந்த கடைசி வாசகம்….

” அந்தஸ்து பற்றி கவலை வேண்டாம்….உன் அப்பா நல்லவர் தான்…. என ஆரம்பித்து…உன் வீட்டாரின் சம்மதத்துடன் உன் கை பிடிப்பேன்…” என முடிந்திருந்தது…

“அப்பா…..இது என்ன…..எங்கேயிருந்து உங்க கிட்டே கிடைத்தது….???”

“அன்றைக்கு உடை மாற்றும் போது உங்கம்மா கையில் மட்டும் கிடைத்தது…”. “வேற யாரிடமாவது கிடைச்சா என் கௌரவம் என்ன ஆகியிருக்கும்…????”

“எதுவும் கனவு கண்டு உன் வாழ்க்கையை வீணாக்காதே…”

“அவங்கப்பா வேலையை விட்டு தூக்கியாச்சு…..”

“இனி அவங்களுக்கு சோத்துக்கே லாட்டரி..”

“கண்ட சினிமா பாத்து மனசை கெடுத்துக்காதீங்க/ரெண்டு பேரும்….”

“மோகன் தன்னை ஆம்புலன்ஸில் அழைத்து வரும் போது தன் நிலையை விளக்க சிறு காகிதத்தில் எழுதி தன் உடைக்குள் வைத்து விட்டிருக்கிறான்…”

“இந்த பூனையும் பால் குடிக்குமா….” என்று இருந்தவன்.. எப்படி தன் மனதை சொல்லி இருக்கிறான்….”

“ஆனால் அப்பா தன் முடிவை நடைமுறை படுத்த எந்த அளவுக்கும்

போவார் என தெரியுமே….”

அதனால் இரண்டு நாள் கல்லூரிக்கு போகாமல் இருந்தாள்…அங்கங்கு ஏற்பட்ட தீ காயங்கள் ஆறவில்லை இன்னும்…

நண்பர்கள் மூலம் கல்லூரியில் மோகனுக்கு ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை என கேட்டு அமைதியானாள்.

அன்று இரவு மோகனுக்கு போன் செய்யும் போது அப்பா வரவே வைத்து விட்டாள். எப்படி அவனை பார்ப்பது என யோசித்து கொண்டிருந்த போது

தீ காயங்களுக்கு மருந்து போட காரில் செல்லும் போது மோகன் பேருந்து நிறுத்தத்தில் இருந்ததை பார்த்துவிட்டாள்..

“ட்ரைவர் அண்ணா….கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க…”

மோகன் எறிக்கோ..நானும் வேலூர் பக்கம் தான் போகிறேன்..

பெரிய இடத்தில் வேலை செய்யும் டிரைவர்கள்….. வாய் மூடி இருக்கும் வரை வேலைக்கு ஆபத்து இல்லாததால் அவரும் ஒன்றும் பேசவில்லை.




“மோகன் ஏறத் தயங்க…ஏற்கனவே ஒரு சிலர் பார்க்க…வேறு வினை வேண்டாம் என ஏறிக்கொண்டான்…

” எதுக்காக அன்னிக்கு அந்த கடிதத்தை என் உடையில் மறைச்சு வெச்சே….”

“நானா ????.”

“நேத்து இரவு போன் வந்தது முதல் குழம்பிப் போன மோகனுக்கு இப்போது புரிந்தது…

” தாரா….நீ குழப்பிக்காதே….”

“அது ரசிகாவிடம் நான் கொடுத்த கடிதம்..”

“அது உன் கையில் எப்படியோ….”

மோகன் முடிக்கவில்லை..

“நெனச்சேன்…எனக்கும் இல்லாம , தனக்கு என நினைச்ச வீணாவுக்கும் இல்லாம , இவ தட்டிட்டாளா…..”

“சே…என்ன மனுஷன் டா… நீ… “

“முதல் நாள் அவள் கை நீட்டிய போதே நீ கை குலுக்கினயே….”

“அப்புறம் என்னை மட்டும் ஏன் தழுவித் தூக்கினே…”

உடல் சுகம்/உனக்கு அவ்வளோ. முக்கியமா போச்சா…’

அவள் ஆத்திரத்தை வார்த்தைகளில் கொட்ட….

” அது வீணாவுக்கு ரசிகாவிடம் கொடுத்தனுப்பிய கடிதம்….அது எப்படியோ உன்னிடம் வந்து விட்டது போல…”

தாராவுக்கு மெதுவாக விளங்கியது…

” உன்னை காப்பாற்றியது…..நீ….உங்க எங்க முதலாளி பெண் என்பதால் தான்…”

“உன் உயிரை காப்பாற்ற உன் உடைகளை கிழித்தேன்…..”

“அதையும் நானே சரி செய்யவும், வேறு யாரையும் அந்த நிலையில் உன் கூட அனுப்ப மனமில்லாம நானே ஆம்புலன்சில் ஏறினேன்…”

“அதற்கெல்லாம் உங்க அப்பா கொடுத்த பரிசு என் அப்பாவின் வேலை பறிப்பு…..”

நீ கொடுத்த மரியாதை

” உடல் சுகத்தால் தூக்கினேன் என கெட்ட பெயர்….” போதும்….”

நான் இங்கேயே இறங்கிக்கறேன்…சார் நிறுத்துங்க…”

இறங்கிக் கொண்டான்…

“நான் தான் ஏதோ ஆத்திரத்தில் பேசி விட்டேனோ…????

மோகன் இன்னும் அந்த வீணாவை தான் நினைச்சுண்டிருக்கினா…”

என்ன வசியம் பண்ணி வெச்சுருக்கா இவனை….??

அப்பாவை மீறி நான் எதுவும் செய்ய முடியாது..




ஆனால் அந்தஸ்து அது இது என எழுதி இருந்தானே….”

“அப்போது வீணாவுக்கும் இவனுக்கும் ஏதோ அந்தஸ்து பிரச்சனை இருக்கும் போல..”

அப்பா கோவிந்தனுக்கு  செஞ்சதும் நல்லது தான்….மேலும் மோகனின் அந்தஸ்து குறையும் என அப்பாவுக்கு தப்பாம மகள் நினைத்தாள்.

வழியில் இறங்கிய மோகன்…

“கொஞ்ச நேரத்தில் என்ன பேச்சு பேசி விட்டாள்..???”

“என்ன நடப்பது என எடுத்தெறிந்து பேசுவது இவர்களது சுபாவம் போல…” என யோசித்து கல்லூரிக்கு வந்து சேர்ந்தான்.

கல்லூரிக்கு வந்து படிக்கத் தொடங்கினான்…

ஏதோ மாத சாப்பாட்டுக்கு வீட்டு சேமிப்பு , தனம் பாட்டியின் பென்ஷன் பணம் வெச்சுகிட்டு ஓட்டலாம்…மற்ற செலவு…

முரளி படிப்புக்கு அடுத்த காலாண்டுக்கு பிறகு பணம் கட்ட வேண்டுமே… பத்தாவது படிக்கிறான்..”

“மேலே படிக்க வைக்க வேண்டுமே என வீட்டை பற்றின லேசான சோகம் அவனை துரத்தியது..

அப்பாவுக்கு வேலை இல்லையே…

அடுத்தவரிடம் உதவி கேட்டு அப்பா, அம்மா இருவருக்கும் பழக்கம் இல்லையே….

திடீரென ஒரு யோசனை…ஒவ்வொரு திங்களும் கலெக்டர் பொது மக்களை பார்ப்பாரே…

“வரும் திங்கள் மதியம் கலெக்டர் அலுவலகத்தில் போய் அவரை பார்த்து உதவி கேட்கலாமா…”

“தனக்கு உதவுவார் என்ற நம்பிக்கை வந்தது….”

கல்லூரியில் சொல்லி விட்டு கலெக்டரை பார்க்க போனான்…”

“பேர் ,விவரம் என சீட்டில் எழுதி கொடுக்க சொன்னார்கள்…”அவன் முறை வந்தது..

” வாப்பா..உன் கல்லூரி மூலம் நீ செய்த தீரச் செயல் கேள்வி பட்டேன்…உனக்கு சுதந்திர தின தீரச்செயல் விருது கூட ஏற்பாடு செய்யலாம்…ஆனால் அது என் கையில் இல்லையே..அதில் அரசியல் உள்ளதே….”

“அடுத்த வாரம் வா…உனக்கு எப்படி உதவி செய்வது என யோசித்து வைக்கிறேன்…”

” சார் எங்க அப்பாவுக்கு ஏதாவது வேலை…அல்லது எனக்கு பகுதி நேர வேலை….என இழுக்க…”

“கண்டிப்பாக யாரிடமாவது சொல்லி சிபாரிசு செய்கிறேன்…”

ஏதோ லேசான நம்பிக்கையோடு வீடு வந்து விவரம் சொன்னான்..

அன்று இரவு தொலைக் காட்சி செய்திகள்..

தலைப்பு செய்தி…

“வேலூர் மாவட்ட தலைவர் உட்பட பதினைந்து பேர் இட மாற்றம்…”

என்ற செய்தி இடி போல தாக்கியது…




What’s your Reaction?
+1
7
+1
9
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!