தோட்டக் கலை

மாடித்தோட்டத்தில் விளையும் திராட்சை கொடி

திராட்சை கொடி சாகுபடி பொறுத்தவரை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பயிரிப்படுகின்றன. குறிப்பாக குளிர்காலம் மற்றும் மழை காலங்களில் பயரிடக்கூடாது. ஏன் என்றால் அப்போது பயிரிட்டால் செவட்டை நோய் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். எனவே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திராட்சை சாகுபடி செய்வது மிகவும் சிறந்தது.

  • செம்மண் மற்றும் மணல் கலந்து தொட்டியை நிரப்ப வேண்டும் அல்லது வண்டல் மண் கலந்து தொட்டியை நிரப்ப வேண்டும்.மண் கலவை கலந்த உடனே திராட்சை குச்சிகளையோ அல்லது விதைகளையோ விதைக்க கூடாது. இரண்டு நாட்களுக்கு பிறகு தான் செடிகளை நடவேண்டும்.

  • இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.

  • திராட்சை விதை கிடைக்க வில்லை என்றால் குச்சிகளை வாங்கி நடலாம், திராட்சை குச்சிகளும் மிக எளிதில் வளரக்கூடியது.




  • குச்சிகளை நட்டவுடன் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்தால் போதும்.

பந்தல் அமைக்கும் முறை:

  • மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும், நான்கு மூலைகளில் வைக்க வேண்டும்.




  • அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம்.

  • வேணும் என்றால் தரையில் திராட்சை கொடிகளை நட்டு மாடி பகுதிக்கு ஏற்றிவிட்டால் திராட்சை கொடிகள் நன்றாக வளரும். அதிகளவு காய்களும் பிடிக்கும். அதாவது கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் தரையில் திராட்சை கொடியை நட்டு மடியில் ஏற்றி விடவும்.




உரம் :

  • திராட்சை சாகுபடிக்கு உரங்களாக கடலை பிண்ணாக்கு, வேப்பம்பிண்ணாக்கு, மண்புழு உரங்கள் ஆகியவற்றை அடி உரங்களாக இடலாம்.

  • அதாவது கடலை பிண்ணாக்கு, வேப்பம்பிண்ணாக்கு மற்றும் மண்புழு உரங்கள் ஆகியவற்றை ஒரு ஒவ்வொரு கைப்பிடி எடுத்து கொடியின் வேர் பகுதியில் உரங்களை இட வேண்டும்.

  • பூச்சி தாக்குதல்களுக்கு வேப்பம்பிண்ணாக்கு, தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளிக்க வேண்டும் அல்லது இஞ்சி பூண்டு விழுது அரைத்து அவற்றை தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளிக்கலாம். இவ்வாறு தெளிப்பதினால் பூச்சி தாக்குதல்கள் சரியாகும்.




  • பயிர் பாதுகாப்பிற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யாவை தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளித்து விட வேண்டும்.

அறுவடை:

திராட்சை கொடியில் காய் பிடிப்பதற்கு குறைந்தது 15 மாதங்கள் ஆகும். அதன்பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!