தோட்டக் கலை

உருளைக்கிழங்கில் கூட ரோஸ் செடி வளர்க்கலாம்

நகர்ப்புறங்களில் கிராமங்களைப் போன்று இட வசதியெல்லாம் பெரும்பாலும் இருக்காது. தொட்டிச் செடிகள் தான் வளர்க்க முடியும். அதில் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அது கூட சரியாக செட் ஆகாது. ஆனால் வீட்டில் ஒரு ரோஜா செடி இருந்தால் அது கொத்து கொத்தாக ரோஜா பூத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கு இப்போவே உங்க கிச்சனுக்குப் போங்க.




ரெண்டு பெரிய சைஸ் உருளைக் கிழங்கு எடுத்துட்டு வாங்க. எதுக்குன்னு கேட்கறிங்களா? ரோஜா வளர்க்கத்தான். ஆமாங்க. தொட்டியோ, மண்ணோ தேவையில்லை.

  • வெறும் உருளைக் கிழங்குல ரோஜா செடியோட தண்டை வெட்டி வெச்சே செடி வளர்க்கலாம். ஒரு உருளைக் கிழங்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு இடத்தில் சிறிய ஓட்டை போட வேண்டும்.




  • பின் ரோஜா குச்சியை நுனிப் பகுதியை கிராஸாக சீவி விட்டு அந்த உருளைக் கிழங்குக்குள் சொருகிவிடுங்கள். அதை அப்படியே தூக்கி மண்ணிலோ அல்லது தொட்டிக்குள்ளோ வைத்து மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். பிறகு வழக்கம் போல தொட்டியில் நீர் விடுங்கள்.

  • மிக வேகமாகவும் செழித்தும் வளரும். நிறைய பூக்கள் பூக்கும். இதற்கு ரோஜா செடி தேவையில்லை. ரோஜாவை வெட்டிய குச்சிகள் மட்டும் இருந்தாலே போதும். அதிலேயே செடி வளர்த்துவிடலாம்.

இப்பவே இந்த மாதிரி  ரோஜா செடி வளர்த்து பாருங்க.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!