Samayalarai

நாவூற வைக்கும் மாங்காய் சாதம் 




புளிப்பு, காரம் நிறைந்த மாங்காய் சாதம்

தினமும் சாம்பார், காரக்குழம்பு என ஒரே உணவு வகை தான் சாப்பிடுகிறீர்களா? ஒரு மாறுதலுக்காக புளிப்பு, காரம் நிறைந்த மாங்காய் சாதத்தை சாப்பிட்டு பாருங்கள்.அப்புறம் தினமும் சாப்பிட ஆசையாக இருக்கும். இதில் அதிக ஆரோக்கிய சத்தும் உள்ளது.மாங்காய் என்று சொன்னாலே எல்லோரின் நாக்கில் எச்சில் ஊறும். சரி வாங்க மாங்காய் சாதம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.




தேவையான பொருள்கள்;- 

சாதம் – 1 கப்

துருவிய தேங்காய்-3/4 கப்

வேர்க்கடலை – 1/2 கப்

பச்சை மிளகாய் – 8-10

மாங்காய் – 2

கடுகு – 1/2 ஸ்பூன்

கடலை பருப்பு – 1/2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்

வெந்தயம் – 1/2 ஸ்பூன்

மஞ்சள் – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

பெருங்காயம் – தேவையான அளவு




செய்முறை விளக்கம் :- 

  • முதலில் தேவையான அளவு அரிசி எடுத்து நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.பிறகு குக்கரில் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் விதம் ஊற்றி அடுப்பில் வேக வைக்கவும்.

  • 10-15 நிமிடங்கள் சாதம் வெந்த பிறகு அதில் எண்ணெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.ஒரு மாங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.

  • பின்னர் வெந்தயத்தை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவை கொண்டு பொன்னிறமாக வதக்கவும்.

  • அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறி விட வேண்டும். பிறகு குக்கரில் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.

  • 2 நிமிடம் கழித்த பிறகு அதில் துருவிய மாங்காய், வெந்தய பொடி, தேவையான உப்பு ஆகியவை சேர்த்து சாதம் உடையாத அளவுக்கு கிளறி விடவும்.

  • கடைசியில் கொத்தமல்லி இலையை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். நாவூறும் புளிப்பான மாங்காய் சாதம் தயார்.

 


வீட்டு குறிப்பு

  • பூசணி அல்வா செய்யும் போது, பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பிறகு செய்தால் அல்வா பொலபொலவென  அருமையாக வரும்.

  • சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது, சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!