Entertainment Samayalarai

வாயில் எச்சி ஊறும் கே எஃப் சி சிக்கன்

கேஎஃப்சி சிக்கன்

ஃப்ரைடு சிக்கன் எனச் சொல்லப்படும் கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் பெயரை கேட்டாலே, நாவில் எச்சில் ஊறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் கேஎஃப்சி சிக்கன் முதலிடத்தில் உள்ளது. பர்த்டே பார்ட்டி தொடங்கி கெட் டூ கெதர் வரை கேஎஃப்சி சிக்கன் இல்லாமல் கொண்டாட்டங்கள் முழுமையடைவதில்லை. அதே போல் மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கேஎஃப்சி சிக்கன்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப்படுகின்றன. விடுமுறை நாட்களில் கூலாக வீட்டில் இருந்தப்படி, குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கும் கேஎஃப்சி சிக்கன்கள் தேவைப்படுக்கின்றன.




அடிக்கடி வெளி உணவுகளை வாங்கி சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதல் விளைவிக்கும். அதற்காக சாப்பிடாமலும் இருக்க முடியாது. இதற்கு சிறந்த தீர்வு வீட்டிலேயே செய்து சாப்பிடுவது.

வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் இருக்கும், குழந்தைகளுக்கும் பயப்படாமல் கொடுக்கலாம். எனவே, இந்த பதிவில் வீட்டிலேயே கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.




தேவையான பொருட்கள்

  • சிக்கன் லெக் பீஸ்  – 8

  • பால் – 1 கப்

  • முட்டை – 1

  • இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்

  • பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

  • மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்

  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு

  • எலுமிச்சை சாறு – ½ பழம்

  • மைதா – 1 கப்

  • சோள மாவு – 1/2 கப்

  • தனியா தூள் – ½ டீஸ்பூன்

  • சீரக தூள் – 1/2 டீஸ்பூன்

  • பூண்டு தூள் – 1 டீஸ்பூன்

  • எண்ணெய் – தேவையான அளவு




செய்முறை விளக்கம்

  • முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் மற்றும் பாலுடன் முட்டையை உடைத்து ஊற்றவும்.

  • பின்பு அதனுடன், இஞ்சி விழுது, பூண்டு விழுது, 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

  • இப்போது அதில் கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து ஃபிரிட்ஜில் வைத்து 2 மணி நேரம் அப்படியே ஊற விடவும்.

  • பின்பு, தட்டில் மைதா, சோள மாவு, தனியா தூள், சீரக தூள், பூண்டு தூள், 1 டீஸ்பூன் மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.




  • இதில் ஊற வைத்துள்ள கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  • இப்போது காய்ந்த எண்ணெயில் கோழி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கேஎஃப்சி பிரைடு சிக்கன் தயார்.

நீங்களும் விடுமுறை நாட்களில் இந்த செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே சுவையான கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும்.




வீட்டு குறிப்பு

  • ஒரு டம்ளர் தண்ணீரில் நாலு ஸ்பூன் உப்பு, சிட்டிகை பெருங்காயத்தூள் கலந்து எறும்பு வரும் பகுதிகளில் தெளித்தால் அவை ஓடியே போய்விடும்.

  • வாஷிங் மிஷினில் நாம் எப்போது துணி துவைப்பதாக இருந்தாலும் மெஷினின் கொள்ளவிற்கு கொஞ்சம் குறைவாகத் தான் நாம் துணிகளை போட வேண்டும். இப்படி போடும் போது மட்டும் தான் துணிகள் நன்றாக துவைத்து கறைகள் முழுவதுமாக நீங்கும். அது மட்டுமின்றி வாஷிங் மிஷினும் நீண்ட நாள் பழுதாகாமல் இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!