Samayalarai

அருமையான கரம் மசாலா பொடி செய்வது எப்படி?

 கரம் மசாலா பொடி

மசாலா பொருட்களுக்கு புகழ் பெற்ற நாடு தான் இந்தியா. இங்கு ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் பல்வேறு வகையான மசாலா பொருட்களை நாம் பார்க்க முடியும்.அப்படி மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலாதான் கரம் மசாலா தூள். கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது.  இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு, இலவங்கபட்டை, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கருப்பு மிளகு இவற்றின் கலவையாக கரம் மசாலா உள்ளது. இந்திய உணவுகளில் சுவையையும் வாசனையையும் அதிகரிக்க முக்கிய பொருளாக கரம் மசாலா உள்ளது.  ஆனால் உணவில் சுவையை சேர்ப்பதை தாண்டி இன்னும் பல விஷயங்களை கரம் மசாலா பயன்படுகிறது.




தேவையான பொருள்கள் :.

தனியா – கால் கப்

ஏலக்காய் – 2 தேக்கரண்டி

கருப்பு ஏலக்காய் – 3

மிளகு – 2 தேக்கரண்டி

கிராம்பு – 2 தேக்கரண்டி

சோம்பு – ஒரு தேக்கரண்டி

அன்னாசிப்பூ – 4

ஒரு இன்ச் அளவில் பட்டை – 4

ஜாதிக்காய் – பாதி (அ) ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி

பிரியாணி இலை – 2

சிகப்பு மிளகாய் – 4 (காரத்திற்கேற்ப)

சீரகம் – 2 தேக்கரண்டி

ஜாதிபத்திரி – ஒன்று

பொடியாக நறுக்கிய காய்ந்த பூண்டு – ஒரு தேக்கரண்டி

சுக்கு – சிறிது (அ) சுக்குப்பொடி – ஒரு தேக்கரண்டி




 செய்முறை:

  • தேவையான வற்றை அளந்து எடுத்துக் கொள்ளவும். கருப்பு ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காயை நசுக்கி வைக்கவும்.

  • ஒவ்வொன்றாக சிறுதீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக சூடு போக ஆற வைக்கவும்.

  • ஆறியதும் விரும்பிய பதத்தில் மெஷினில் கொடுத்து அரைக்கவும். மணமான கரம் மசாலா பொடி தயார்.

டிப்ஸ்

  • உங்கள் வீட்டு அருகில் மெஷின் இல்லாதவர்கள் குறைவாக எடுத்து வீட்டில் உள்ள மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள்.

  • இந்த அளவில் சரி பாதி அளவு எடுத்து மிக்ஸியில் நீங்களே நைசாக அரைத்து கொள்ளுங்கள்.




வீட்டு குறிப்பு

  • ஒரு மெல்லிய துணிக்குள் ஆரஞ்சு தோலை வைத்து அதை சமையல்  அறையில் கட்டி தொங்க விடுங்கள். இவ்வாறு செய்தால் பூச்சிகளினால் ஏற்படும் தொல்லைகள் எளிமையாக நீங்கும்.

  • சமையல் அறையின் மூலை முடுக்கு போன்ற பகுதிகளில் மஞ்சள் மற்றும் உப்பை கலந்து சிறிதளவு தூவி விடுங்கள். இதில் இருக்கும் கிருமி நாசினி தன்மை இந்த பூச்சிகள்   வருவதை தடுத்து விடும். மேலும், உணவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடங்களில் கூட சிறிதளவு இந்த கலவையை தூவி விடுங்கள், செலவே இல்லாமல் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!