Samayalarai

தர்பூசணி ஐஸ் கிரீம்

 சமையல் குறிப்புகள்

தர்பூசணி ஐஸ்கிரீம்

கோடை என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறையும், குழுமையான ஐஸ் கிரீமும்  தான். கோடை காலங்களில் வெப்பம் அதிகரித்து உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. இந்த சமயங்களில் குளிர்ச்சியான பானங்கள்  சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் சோர்வை நீக்குகிறது. அப்படி உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பழத்தில் நாம் சுவையான குளு குளு ஐஸ் கிரீம் செய்வது பற்றி தெரிஞ்சுக்கலாம்




தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது. தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை போக்க முடியும். சரி இனி தர்பூசணி கொண்டு வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி – 2 கப்

சர்க்கரை – தேவையான அளவு

பிரெஷ் கிரீம் – 2 ஸ்பூன்

ரோஸ் எசன்ஸ் – ஒரு துளி




செய்முறை :

  • தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின் அதில் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  • அடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • மைய அரைத்து அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.

  • 2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.




டிப்ஸ்

  • பால் பவுடர் சேர்த்தால் இன்னும் ருசி அதிகமாக இருக்கும்.  கடையில் வாங்குவது போல் டேஸ்ட் இருக்கும்.

வீட்டுகுறிப்பு

  • செப்பு பாத்திரங்களை சுத்தம் செய்யும் லிக்விட்: இதற்கு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் அரை ஸ்பூன் அளவு சேர்த்து மூன்றையும் ஒன்றாக கலந்து பாட்டிலில் ஊற்றி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • ரப்பர் பேண்டை துடைப்பத்தில் இரண்டு மூன்று சுற்றுகள் சற்று இறுக்கமாக போட்டு விட்டால் தொடப்பமும் தளர்வாகாது குச்சிகளும் கழண்டு விழாது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!