Samayalarai

சுவையான நாட்டு கோழி ரசம்

ரசம் என்றாலே தனி சுவை தான். அதிலும் நாட்டுக் கோழி மிளகு ரசம் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த நாட்டுக் கோழி மிளகு ரசம் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றது. தவிர, உடலில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு இவை ஒரு அருமருந்து உள்ளன.

இப்படி பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ள நாட்டுக் கோழி மிளகு ரசத்திற்கான செய்முறையை இங்கு பார்ப்போம்.




தேவையான பொருட்கள்

நாட்டு கோழி – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 15

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு– 2ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 2

இஞ்சி பூண்டு – பேஸ்ட் -2 ஸ்பூன்

பட்டை, லவங்கம் – தலா 1

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

தனியா தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2  டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லி இலை – தேவையான அளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு




செய்முறை விளக்கம்

  • மிளகு, சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

  • குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

  • அதனுடன் பொடித்த மிளகு, சீரகம், மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி,

  •  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும்.

  • இறக்கி வைத்து கறிவேப்பிலை , மல்லி இலை தூவி பரிமாறவும். சிக்கன் ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம்.

வீட்டு குறிப்பு

  • தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

  • சமைப்பதற்க்கு 1/2 மணி நேரம் முன்னதாக அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து  விடும்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!