Cinema Entertainment Serial Stories

பூக்க தவறிய பூக்கள் -9 படாபட் ஜெயலட்சுமி

இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை அவர் சந்தித்திருக்க வேண்டும்.




காதல் என்றால் பிரச்சனை இல்லாமல் இருந்திருக்குமா?. இவருடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு இருந்தது. ஒரு பத்திரிகை பேட்டி ஒன்றில் ஓராண்டு காலத்திற்குள் குடும்பத்திற்கு தேவையான பண தேவை அனைத்தையும் நிறைவு செய்து வைத்து விட்டு திருமண வாழ்விற்குள் நுழையப் போவதாக அறிவித்திருந்தார் ஜெயலட்சுமி .தன் இளைய சகோதரியின் திருமணத்தையும் முன் நின்று நடத்தினார். ஆனால் காதலர் வீட்டு தரப்பிலோ எதிர்ப்பு மிகவும் கடுமையாக இருந்தது. எவ்வளவோ ஆசைகளையும் கனவுகளையும் சுமந்திருந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல், அந்த முடிவை எடுத்தார் போலும்.




             திடீரென்று  ஒரு நாள் பத்திரிக்கைகள் அந்தத் தகவலை வெளியிட்டது.  அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு நினைவிழந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் படாபட் என்ற தகவலை தெரிவித்தன. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் கடுமையான சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியாது போய்விட்டது. 1958 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1980 ஆம் ஆண்டில் தன்னுடைய 22 வது வயதில் இந்த உலகில் இருந்து பிரிந்தார்.




                       படாபட் ஜெயலட்சுமி மரணம் அடைந்த உடனேயே அது குறித்த சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்தது. யார் அவருடைய காதலர்,, அவருக்கும் இந்த மரணத்திற்கும் தொடர்பு உண்டா? இந்த திடீர் முடிவில் பின்புலம் என்ன? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் வெளிவந்தன.




ஆனால் எந்த ஒரு கேள்வியையும் நேருக்கு நேர் தைரியமாக கேட்கும் துணிவு எவருக்கும் இல்லை. அனைவரும் தங்கள் வாயிகுள்ளாக உதடால் முணுமுணுத்துக் கொண்டனர். அவரது காதலரின் பெயரை சொல்லும் தைரியம் கூட பெரும்பாலானோருக்கு இருக்கவில்லை. அவரது காதலரின் செல்வாக்கு காரணமாகவே ‘மல மல’ என்று எழுந்த பிரச்சனை மற்றும் அதன் வேகம் ‘சட சட’ வென்று இறங்கியது.   சில நாட்களிலேயே அது சாதாரண தற்கொலையாகி, மக்கள் படாபட்டை மறக்க ஆரம்பித்தனர்.




What’s your Reaction?
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!