Cinema Entertainment

திருமணத்துக்கு தயாராகும் கீர்த்தி சுரேஷ்?

பிரபாஸ் இப்படி செய்வாருன்னு நினைக்கல… சூர்யா சொன்ன சுவாரஸ்யம்!




 நடிகர் சூர்யாவுக்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பதை சொல்லி தெரிய தேவையில்லை. அவர் ‘கஜினி’ படத்திலிருந்து தெலுங்கிலும் தனது ஒவ்வொரு படத்தையும் வெளியிட்டு வருகிறார். ‘ஆகாசம் நீ ஹத்து ரா’, ‘ஜெய் பீம்’ போன்ற படங்களின் மூலம் மீண்டும் நல்ல வரவேற்பை பெற்ற சூர்யா, அடுத்தடுத்த படங்களை தெலுங்கில் அறிவித்து வருகிறார்.




ஏசியாநெட் உடனான ஒரு நேர்காணலின் போது, பிரபாஸ் வீட்டில் சமைத்த உணவு குறித்து சூர்யா பகிர்ந்து கொண்டார். ”நான் ஷூட்டிங்கில் ஹைதராபாத்தில் இருந்தபோது,பிரபாஸ் என்னை அழைத்து இரவு உணவிற்கு அழைத்தார். நான் வருகிறேன் என்று சொன்னேன், ஆனால் எனது படப்பிடிப்பு இரண்டு மணி நேரம் தாமதமாகி விட்டது. மாலை 6 மணிக்கு தொடங்க இருந்த ஷூட்டிங், இரவு 8 மணிக்கு தொடங்கி இரவு 11:30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. நான் பிரபாஸை பிறகு சந்திக்கலாம் என்று நினைத்தேன், அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் எனவும் திட்டமிட்டிருந்தேன். அன்று இரவு ஹோட்டல் உணவு அல்லது தயாரிப்பு நிறுவன மெஸ்ஸில் இருந்து சாப்பாடு வரும் என நினைத்தேன்.

இரவு 11.30 மணியளவில், ஹோட்டலின் தாழ்வாரத்தில் பிரபாஸ் எனக்காக சாப்பிடாமல் காத்துக்கொண்டிருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் அம்மா தயாரித்த உணவை எனக்கு கொண்டு வந்தார். என் வாழ்நாளில் அவ்வளவு சுவையான பிரியாணி சாப்பிட்டதில்லை” என்றார் சூர்யா.




நடிப்புக்கு டாட்டா… திருமணத்துக்கு தயாராகும் கீர்த்தி சுரேஷ்?

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 




‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், முன்னாள் கதாநாயகி மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் மகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மிக இளம் வயதிலேயே ‘மகாநடி / நடிகையர் திலகம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது அவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியாக உள்ளார்.

கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் வதந்திகள் பரவி வருகிறது. அவருக்கும் கேரளாவை சேர்ந்த அரசியல் தொடர்புள்ள தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. 30 வயதான நடிகை அதை மறுத்தார். இப்போது மீண்டும் கீர்த்தியின் திருமணம் குறித்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன.




மேனகாவும் சுரேஷும் ஏற்கனவே மாப்பிள்ளை தேட ஆரம்பித்து விட்டதாகவும், கீர்த்தியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அவர்களின் மூதாதையர் வீட்டிற்கும், அங்குள்ள குலதெய்வ கோவிலுக்கு சமீபத்தில் கீர்த்தியின் குடும்பத்தினர் சென்று வந்தனர். திருமணத்தை நல்லபடியாக நடத்தவே, அவர்கள் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்தி, படங்களில் நடிப்பதை மெதுவாக நிறுத்திவிட்டு, திரைப்படத் தயாரிப்பில் கவனம் செலுத்துவார் என்று சில சோர்ஸ்கள் கூறுகின்றன. ஆனால் இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!