karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று 13

13

மௌனமாய்பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன் …
உனககு புரிய வேண்டுமேயென்ற 
கவலையுடன் .

இந்த அண்ணன் சாத்விகாவிற்கு புதியவன் .அடிக்கடி அவளை மட்டம் தட்டிக்கொண்டும் , சீண்டிக்கொண்டும் இருக்கும் பழைய அண்ணனில்லை இவன் .இளக்கமற்ற அவன் பார்வையில் இவள் தங்கையென்ற எண்ணம் சிறிதளவும் இல்லாமலிருந்த்து .சண்முகபாண்டியனும் , கார்த்திக்கும் குற்றவாளிகளை மட்டுமன்றி , வீட்டு மனிதர்கள் தவிர பிற ஆட்களையும் பார்த்ததும் நா வறண்டு எச்சில் விழுங்க வைக்குமளவு கண்டிப்பும் , தங்கள் பதவிக்குரிய ஆளுமையும் கொண்டவர்கள் .

ஆனாலும் மகளை பார்த்ததும் குழைந்து போவார் சண்முகபாண்டியன் .நான் உன் அடிமை மகளே பார்வை பார்ப்பார் அவர. கார்த்திக் அவர் போன்றில்லாமல் அடிக்கடி சாத்விகாவை கண்டித்து வந்தாலும் அந்த கடின குரலுக்குப் பின் பாசமும் , அக்கறையும் இழையோடியபடி இருக்கும் .இவர்களின் இந்த பலவீன பாசத்தை பயன்படித்தி அவர்களை தன்னிஷ்டம் போல் ஆட்டுவித்து வந்தாள் சாத்விகா …

ஆனால் இப்போது ….

” அ…அண்ணா எனக்கு இந்த திருமண விசயத்தில் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது …? “

” மூன்று வருடங்களாக வராத நெருடல் எங்கிருந்து இப்போது திடீரென வந்து குதித்தது …? “

” தெரியவில்லை அண்ணா . இது என் வாழ்க்கை பிரச்சினை அல்லவா …? அதனால் நான் யோசித்து …”

” ஒரு மண்ணும் வேண்டாம் .உன் வாழ்க்கை மேல் உன்னை விட எனக்கும் , அப்பாவிற்கும் அதிக அக்கறை உண்டு .அதனால் பேசாமல் வாயை மூடிக்கொண்டு நாங்கள் காட்டும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டும் வழியை பார் …”

என்ன ஒரு உதாசீனமான பேச்சு .நம் நாட்டில் நிறைய பெண்கள் அனுபவிக்கும் பேச்சுதான் .ஆனால் இது போன்ற ஒரு அலட்சியத்தை இது நாள் வரை அனுபவித்தவளில்லை சாத்விகா .அவள் பிறந்த்து முதல் சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள் .அவளை இப்படி அவளது வாழ்வின் முக்கியமான கட்டமொன்றில் அடக்கி ஆள முயல்வதா …?

தைரியமாக தலை நிமிர்ந்தவள் ” இல்லை அண்ணா …இது என் வாழ்வின் முக்கிய நேரம் .இப்போது நான் நிதானமாக யோசித்துதான் முடிவெடுக்க போகிறேன் …எனக்கு திருப்தியில்லையென்றால் இந்த திருமணத்தை நிறுத்தவும் ….” பேசியபடி போனாள் …

” ஏய் ….” கார்த்திக்கின் வேக கத்தலில் ஸ்தம்பித்து நிறுத்தினாள் .அவளது தோள்களில் கை வைத்து உலுக்கியவன் …

” இது போன்ற முட்டாள்தனமான எண்ணங்கள் எதுவும் இருந்தால் உடனடியாக அதை நிறுத்தி விடு .இல்லாவிட்டால் நான் என் ரிவால்வருக்கு வேலை கொடுக்க வேண்டியதிருக்கும் …” உலுக்கியவளை கட்டிலில் தள்ளியவன் வெளியேற நடந்தான் .

அலைய குலைய பெட்டில் விழுந்தவள் சுதாரித்து எழுந்து …” அப்படியென்றால் ….” கோபமாக கேட்டாள் .

” நிச்சயம் உன்னை கொன்றுவிடுவேன் …” நிதானமாக சொல்லிவிட்டு வெளியேறினான் .அதிர்ந்து போய் நின்றாள் சாத்விகா .

_—————-

” என்னடா பேபி …கண்ணெல்லாம் சிவந்திருக்கிறதே …நேற்று இரவு சரியாக தூங்கவில்லையா …? ” சண்முகபாண்டியனின் கரிசனம் சாத்விகாவின் சோகத்தை தூண்ட …

” அப்பா …” என கேவியபடி அவர் மார்பில் சாய்ந்தாள் .

” அண்ணன் நேற்று நைட் என்னை ரொம்ப திட்டினான்பா .கொன்னுடுவேனெல்லாம் சொன்னான் தெரியுமா …? “

‘” என்ன கார்த்திக்  இது …? ” மகளின் தலையை வருடியபடி அப்போதுதான் உள்ளே வந்த மகனிடம் கண்டிப்பாக கேட்டார் சண்முகபாண்டியன் .

” அப்பா அவளுக்கு நீங்கள் ஒவராக செல்லம் கொடுத்து கெடுத்து வைத்நிருக்கிறீர்கள் .இனி இவள் விசயத்திலிருந்து நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் .நான் பார்த்துக் கொள்கிறேன் ….” தந்தையின் தோள்களில் சரண்டைந்திருக்கும் தங்கையை எரிச்சலாக பார்த்தபடி கூறினான் .

” ஏய் போடா …நீ ஒண்ணும் என் விசயத்தில் தலையிட வேண்டாம் .என்னை பார்த்துக்க அப்பா இருக்கிறார் …”

” ஏய் மரியாதையாக பேசு .வாடா …போடா என்றால் வாயிலேயே அறைவேன் …”

” அப்பா பாருங்கப்பா எப்படி பேசுறான்னு …நேற்றும் இப்படித்தான் பேசினான் …” சாத்விகாவின் குரலில் அழுகையின் ஆரம்ப கோடு தெரிந்த்து .

” டேய் கார்த்திக் என்னடா இது …? ” சண்முகபாண்டியன் அதட்ட …

” அப்பா இதையெல்லாம் நாம் முதலிலேயே கண்டிக்காமல் விட்டுத்தான் சுகுமாரும் , சாரதா அத்தையும் இவளை பார்த்தாலே பயப்படுகின்றனர் .இனியாவது இவளை கொஞ்சம் மாற்ற முயல்வோம் அப்பா …”

” அப்பா நான் அந்த சுகுமாரை கல்யாணம் செய்வதென்றால்தானே என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் .நான் அவனை கல்யாணம் செய்து கொள்ள போவதில்லைப்பா …”

” அடி ….” என கார்த்திக் ஆத்திரமாக எழும்போதே …

” அறிவில்லாமல் பேசாதே பேபி ….” குரல் சண்முகபாண்டியனுடையதுதான் .கத்தியதுமில்லாமல் ஒற்றை விரலை ஆட்டி எச்சரித்தபடி இருந்தார் .

” உங்கள் கல்யாணம் பேசி முடிக்கப்பட்ட ஒன்று .அதை எந்த தேதியி்ல் வைத்துக் கொள்வது என்பதற்கான தீர்மானம் மட்டும்தான் உன்னுடையது .தேதியை மட்டுமே நீ முன்னே …பின்னே மாற்றிக் கொள்ளலாமே தவிர ,கல்யாணத்தை மாற்ற முடிகிறது .புரிகிறதா …? வா கார்த்திக் நாம் கிளம்பலாம் ….”

இருவரும். கிளம்பி போய்விட நடப்பது புரியாமல் அந்த இடத்திலேயே வெகுநேரம் அமர்ந்திருந்தாள் சாத்விகா .

———————-

” அம்மா ….அப்பாவும் , அண்ணனும் ….” புகாரை அன்னையின் காதுக்கு கொண்டு போகும் முன்பே சௌந்தர்யா தலையசைத்து மறுத்துவட்டாள் .

” அப்பாவும் , அண்ணனும் சொல்வதை கேள் பாப்பா .அதுதான் உனக்கு நல்லது …” ஆதரவிற்காக நீட்டிய மகளின் கையை கூட பார்க்காமல் போய்விட்டாள் .

இரண்டு  பொழுதுகள் குடும்பத்தினர் அனைவர் மீதும் கோபத்தோடு சாப்பிடாமல் அறையினுள்ளேயே இருந்தாள் சாத்விகா .அவள் எதிர்பார்த்தது போல் அவள் சமாதானம் செய்யவென்று யாரும் அவள் அறைக்கு வரவில்லை .

திகு திகுவென பசியால் எரிந்த வயிற்றை அழுத்தியபடி கண்களை  மூடிக்கொண்டு கட்டிலில் படுத்தருந்தவளை மென்மையாக வருடின இரு கரங்கள் .விழித்து பார்த்தவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன் .

தட்டில் நாலு இட்லிகளுடன் அவள் முன்னே அமர்ந்திருந்தார் ரங்கநாயகி .

” எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் வயதுப்பெண் வயிற்றை காய போடலாமா …? இந்த நான்கு வாய் சாப்பிடு ….”

” பாட்டி …” ஆச்சரியமான பாட்டியின் கரிசனையில் நெகிழ்ந்தவள் …” எனக்கு வேண்டாம் பாட்டி …” வீம்பாக மறுத்தள் .

” சாப்பிடும்மா .இவர்களோடு போராட உனக்கு தெம்பு வேண்டாமா …? ” ரங்கநாயகி சொல்வது சரியாக பட , அத்தோடு பசித்த வயிறு வேறு குரல் கொடுக்க அவசரமாக இட்லிகளை விழுங்க தொடங்கினள் .

” பாட்டி நீங்களாவது புரிந்து கொள்ளுங்கள் .நானும் சுகுமாரும் எதிரெதிர் துருவங்கள் .எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் அது நிலைக்காது …”

” ம் …இதனை உன் அப்பா , அம்மாவிடம் நான் முதலிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் .என் பேச்சை யார் கேட்கிறார்கள் .ஆனால் உன் மனதை நீ மாற்றிக் கொள்ளாதே சாத்விகா .தைரியமாக போராடு …” சொல்லிவிட்டு ரங்கநாயகி போய்விட்டார் .

தனக்கு துணையாக இந்த வீட்டில் ஒரு ஆள் இருக்கிறது என்பது சாத்விகாவிற்கு பெரிய ஆறுதலாக இருந்த்து .அறையினுள் குறுக்கும் , நெடுக்குமாக நடந்தபடி யோசனையில் இருந்த போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது .

சன்னல் வழியாக பார்த்த போது சாரதாவும் , அவள் கணவர் தனசேகரும் வருவது தெரிந்த்து .இந்த இரவு நேரத்தில் இவர்கள் ஏன் திடீரென வருகிறார்கள் …? அறையை விட்டு வெளியே வந்து பார்க்க , அவர்கள் இருவரும் சண்முகபாண்டியனின் அறைக்குள் போவது தெரிந்த்து .

மெல்ல மாடியிலிருந்து இறங்கி வந்தவள் அறையினுள் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க தொடங்கினாள் .கேட்க கேட்க சாத்விகாவின் முகம் சிவந்து வண்ணம் பூசிக்கொண்டது .

What’s your Reaction?
+1
14
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!