Entertainment lifestyles News

மழைநீரில் பேரீட்சம் பழம் சாகுபடி செய்கிறார் :முன்னாள் கமாண்டோ வீரர்

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகவே பேரீட்சம்பழம் ஊட்டச்சத்துக்காக உண்ணப்படுகிறது. பேரீட்சம்பழத்தில் நிறைய ஆன்டிஆக்ஸ்சிடென்ட்கள் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. கேன்சர் அபாயத்தையும் பேரீட்சம்பழம் குறைக்கிறது. முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜானில் உடலில் தெம்பை அதிகரிக்க நோன்பு இருப்பவர்கள் சாப்பிடுவார்கள்.




உலகின் மிகப் பெரிய அளவில் பேரீட்சம்பழத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் ஆகியவை. உலகில் உற்பத்தியாகும் பேரீட்சம்பழத்தில் 38 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்வதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மழைநீரில் ஆர்கானிக் பேரீட்சம்பழம் சாகுபடி செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் முன்னாள் கமாண்டோ வீரர்

10 ஆண்டுகளுக்கு முன்பாக ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் கமாண்டோ வீரரான முகேஷ் மாஞ்சு ஒரு விஷயத்தில் குழம்பினார். பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் ஒரேமாதிரியான தட்பவெப்பநிலைதான் இருக்கிறது. ஆனால் நம்மால் ஏன் பேரீட்சம்பழத்தை விளைவிக்க முடியவில்லை. நாமே ஏன் விளைவிக்கக் கூடாது. பேரீட்சம்பழத்துக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்க முடியாத என்று தனக்குள் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து அவர் பேரீட்சம்பழம் சாகுபடி செய்வதற்கு முடிவெடுத்தார்.
பிலானி பகுதியில் பேரீட்சம்பழத்தை முகேஷ் சாகுபடி செய்தார். கடந்த சீசனில் அவர் 5000 கிலோ பேரீட்சம் பழத்தை அறுவடை செய்தார். இதன்மூலம் முகேஷ் ரூ.12 லட்சம் லாபம் பார்த்தார்.

பேரீட்சம்பழம் விவசாயத்தைத் தொடங்குவதற்கு முன்பு முகேஷ், புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கமாண்டோவாக 15 ஆண்டுகள் பணியாற்றினார்.

குறிப்பாக விமானம் கடத்துபவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் சிறப்பு பயிற்சியைப் பெற்றிருந்தார். 2018இல் அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.

எனது பணியின் காரணமாக நான் 20 நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு தங்கியிருந்த சமயத்தில் ஹோட்டலில் இருந்து கிளம்பி அருகில் உள்ள பண்ணைகளை சென்று பார்ப்பேன். அவர்கள் மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வேன். விவசாயம் எனது டிஎன்ஏவிலேயே இருக்கிறது. எனது தந்தை விவசாயம் செய்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரைப் போல நான் பாரம்பரியமான கோதுமை, நெல் போன்ற பயிர்களை விளைவிக்க விரும்பவி்ல்லை. புதிய டெக்னாலஜியை நான் முயற்சிக்க விரும்புகிறேன். எனவே ராஜஸ்தான் போன்ற வறட்சியா பகுதியில் குறைந்த தண்ணீரில் விளையும் பயிர் பற்றி ஆராய்ந்தேன் என்றார் முகேஷ்.

பார்ஹி, குநேஜி பேரீட்சம் பழ ரகங்கள் குறைந்த தண்ணீர் விளையும். அவ்வளவு சீக்கிரம் அந்தச் செடிகள் பட்டுப்போகாது. குறைந்த பராமரிப்பில் அதிக விளைச்சலை இந்த ரகங்கள் தருகின்றன என்று முகேஷ் கூறுகிறார்.

தந்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதால் 2018இல் தனது கிராமத்துக்குத் திரும்பினார் முகேஷ். ஆறுமாதம் கழித்து அவரது தந்தை காலமானார். இதையடுத்து முகேஷ் தனது குடும்பத் தொழிலான விவசாயத்தை கவனிக்க முடிவு செய்தார். எனது தந்தை என்னை பேரீட்சம்பழம் சாகுபடி செய்யுமாறு சாகுமுன் அறிவுறுத்தினார். அதன்படியே நானும் செய்தேன் என்றார் அவர்.

பின்னர் அவர் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள சாக்ரா-போஜ்கா பேரீட்சம்பழம் பயிற்சி மையத்தில் 3 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
அந்த சமயத்தில் மாநில அரசு ராஜஸ்தானில் பேரீட்சம் பழ விவசாயத்தை ஊக்குவித்துக் கொண்டிருந்தது. இதற்கு மானிய விலையில் பேரீட்சம் பழச் செடியையும் தந்தது.

முகேஷ் 250 மஞ்சள் நிற பார்ஹி, சிவப்பு நிற குநேஜி ரகச் செடிகளை வாங்கி தனது பண்ணையில் நட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து இந்தச் செடியில் பழங்கள் காய்க்கத் தொடங்கின. பார்ஹி, குநேஜி ஆகிய ரகங்கள் அதிக விளைச்சலைத் தந்தன.




இந்த ரகங்களில் 100 செடிகள் நட்டால் ஒன்றிரண்டு பட்டுப்போகலாம். பாக்கி தாக்குப் பிடித்து விளைச்சலைத் தரும் என்று முகேஷ் தெரிவித்தார்.
பேரீட்சம்பழச் செடிகள் 80 வருடங்களுக்கு காய்க்கும் தன்மை கொண்டவை.
இதற்கு பசு, ஆட்டுச் சாணம் இட்டால் போதும். ஒரு மரத்துக்கு 150 கிலோ வருடத்துக்குப் போதும்.

பிப்ரவரி மாதத்தில் செடியில் பூக்கள் மலரும். பின்னர் காய்த்து ஜூன்- ஜூலை மாதங்களில் பழங்களை அறுவடை செய்யலாம்.

பண்ணைக்குள்ளேயே சிறிய குளத்தை முகேஷ் அமைத்துள்ளார். அதிலிருந்து 3 லட்சம் மழைநீரை எடுக்கிறார்.

மழைநீரில் நைட்ரோஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துகள் இருப்பதால் அது செடிகளுக்கு அமிர்தம் போன்றது என்கிறார் முகேஷ் ஒரு ஏக்கரில் பேரீட்சம் பழம் சாகுபடி செய்தால் ரூ.6 லட்சம் சம்பாதிக்கலாம். ஒரு மரத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாய்க்கு பழங்களை அறுவடை செய்யலாம்.

கடந்த சீசனில் முகேஷ் ரூ.12 லட்சம் வருவாய் பெற்றார்.
குருகிராம், கதில்லி, நொய்டா, சண்டீகர், ஜெய்ப்பூரில் தனது பேரீட்சம் பழங்களை முகேஷ் விற்கிறார். கடந்த 5 வருடங்களாக ஆர்கானிக் பேரீட்சம் பழத்தை உற்பத்தி செய்த முகேஷை பாராட்டி 2019ல் அக்ரிகல்சர் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் திட்டத்தின்படி கௌரவிக்கப்பட்டார்.

2020இல் ராஜஸ்தான் வேளாண்துறை அமைச்சர் அவருக்கு சிறந்த விவசாயி என்ற விருதை வழங்கினார். 2021இல் அதே விருதை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் வழங்கி கௌரவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!