lifestyles News

8000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பெண்கள் அசத்தல்

இந்தியா இப்போது பெண்களால் உருவாக்கப்பட்ட 8,000 ஸ்டார்ட் அப்களின் உறைவிடமாக உள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் தொடங்கப்பட்டவை ஆகும்.

இந்திய டெக் துறையில் பெண் தொழில்முனைவோரின் ஸ்டார்ட் அப்கள் மொத்த எண்ணிக்கையில் 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதில் முதலீட்டை பெற்ற நிறுவனங்களில் 14 சதவீதமாகும்.




பெண்கள் நிறுவிய ஸ்டார்ட் அப்கள் 14.8 சதவீத பங்குடன் ஒட்டுமொத்த இந்திய டெக் தொழில்துறையில் செயல்படுகின்றன. இவற்றின் மொத்த முதலீடு 155 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டெல்லி- என்சிஆர் பகுதியில் தான் அதிகளவு பெண்கள் நிறுவிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதைத் தொடர்ந்து பெங்களூரு, மும்பையில் உள்ளன. பெண்கள் நிறுவிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 2000க்கும் மேல் முதலீடுகளைப் பெற்றுள்ளன, மீதம் 6000 நிறுவனங்கள் முதலீடுகளைப் பெறவில்லை. இதில் 590க்கும் மேற்பட்டவை 30,000 அமெரிக்க டாலருக்கும் மேல் வருவாய் பெறுபவை.

கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிகப்படியான முதலீடு கிடைத்துள்ளது. 2020 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய ஸ்டார்ட் அப்கள் நிறுவனங்கள் திரட்டப்பட்ட முதலீடுகளில் 15 சதவீத முதலீடுகள் பெண்கள் தலைமையில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெற்றுள்ளன. 2024இன் முதல் இரண்டு மாதங்களில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு வந்துள்ளது. பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்களில் 2300 நிறுவனங்கள் முதலீடுகளைப் பெற்றுள்ளன. அவற்றில் 13.4 சதவீதம் சீரிஸ் ஏ நிலைக்கு முன்னேறியுள்ளது.




3 சதவீதம் சீரிஸ் சி நிலை அல்லது அதற்கு அப்பால் சென்றுள்ளது. பெண் நிறுவனர்களைக் கொண்ட நிறுவனங்களால் திரட்டப்பட்ட நிதியின் அடிப்படையில், இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. B2C இ-காமர்ஸ் ஸ்பேஸ் 3,434 நிறுவனங்களுடன் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து 1,355 இன்டர்நெட் ஃப்ர்ஸ்ட் கம்பெனிகள் மற்றும் சாப்ட்வேர்-அஸ்-அ-சர்வீஸ் நிறுவனங்கள் 1181 உள்ளன. LetsVenture, Wellfound  மற்றும் Venture Catalysts ஆகியவை இந்த இடத்தில் மிகவும் சுறுசுறுப்பான முதலீட்டாளர்களாக உள்ளன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!