Entertainment lifestyles News

200 முறை பெயிலான ஐடியாவை 140 கோடி லாபம் தரும் நிறுவனமாக்கிய பெண்- யார் இவர்?

செல்லப்பிராணிகள் மீது எல்லாருக்கும் அன்பிருக்கும். அதிலும் பெண்களை சொல்லவே தேவையில்லை. ராஷி நரங் என்ற பெண் அவரது செல்லப்பிராணி மீது வைத்த அன்பு அவரது 140 கோடி நிறுவனத்தைத் தொடங்க காரணமாக இருந்தது.

Heads Up For Tails என்பது அவரது நிறுவனம். டெல்லியில் அவரது வீட்டில் கூடுதலாக இருந்த அறையை தனது அலுவலகமாக மாற்றிக்கொண்டார்.

இவரிடம் ஒரு லேப்ரடர் நாய் இருந்திருக்கிறது. அந்த நாய்க்காக அவர் எளிமையான விளையாட்டுப் பொம்மைகள், துணிகள் உருவாக்கினார்.




இந்தியாவில் அந்த நேரத்தில் செல்லபிராணிகளுக்கான பொருட்களை விற்கும் நிறுவனங்கள் குறைவாகதான் இருந்தன.

ஆரம்பித்த உடனேயே அவரது நிறுவனம் உச்சத்தைத் தொடவில்லை. கடினமான 15 ஆண்டுகளுக்கு பிறகு 2022ம் ஆண்டில் அந்த நிறுவனம் 140 கோடி ரூபாய் விற்பனையை எட்டியுள்ளது.

தொடக்கத்தில் அவர் விற்பனையாளர்களை அனுகியபோது யாரும் நாய்களுக்கான  பொருட்களை விற்பனை செய்யத் தயாராக இல்லை.

200க்கும் மேற்பட்ட கடைகள் இவரது பொருட்கள் விற்பனையாகும் என நம்பவில்லை. பலமுறை தோல்வியையும் ஏமாற்றத்தையுமே எதிர்கொண்டார்.




பின்னர் சிறிய கடைகள், kiosks மூலம் இவரது பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினார்.

2008ம் ஆண்டு இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்காக துணிச்சலுடன் தனது HR வேலையை விட்டு வெளியேறினார்.

ராஷி நரங் இங்கிலாந்தில் உள்ள  Cardiff University-யில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷியின் கணவர் வேறு நாட்டுக்கு சென்ற போது அவரும் உடன் சென்றார். எனினும் தொடர்ந்து இந்தியாவில் வியாபாரத்தை நடத்தி வந்தார்.

2016ம் ஆண்டு அவர் மீண்டும் இந்தியா திரும்பியபோது தி பெட் ஸ்டோர் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொழிலை முன்னடத்தினார்.

2021ம் ஆண்டு அவருக்கு 277 கோடி முதலீடு கிடைத்தது. செல்லப்பிராணிகளுக்காக புதுமையான பொருட்களை உருவாக்கினர். செல்லபிராணிகளுக்காக ஷாபிங் செய்வதையும் சுவாரஸ்யமான விஷயமாக உருவாக்கியது இவர்கள் பிசினஸ் வெற்றியின் ரகசியம்.

தனது செல்லபிராணிக்கு சட்டைத் தைப்பதில் தொடங்கிய பயணம் இந்தியாவிலேயே முன்னணியான நிறுவனத்தை உருவாக்கியதில் முடிந்தது. ராஷியின் கதையை ஒரு வரலாறு என அழைப்பது மிகையல்ல.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!