Entertainment lifestyles

20 வருடங்களாக ஏழை போல் வாழ்ந்த பில்லியனர்..!!

சீனாவை சேர்ந்த ஒரு மல்டி மில்லியனர் தனது மகனுக்குத் தான் ஒரு பணக்காரர் என்பதை பற்றி 20 வருடங்களாகத் தெரியாமல் வளர்த்துள்ளார். கல்லூரி வாழ்க்கையை அவர் முடித்தபின் இந்த ரகசியம் அம்பலமானது அவரது மக்கள் மட்டும் அல்லாமல் நாடே ஆச்சரியப்பட்டது.




சீனாவின் ஹுனான் பகுதியில் உள்ள பிங்ஜாங் நகரைச் சேர்ந்த ஜாங் யூடாங் என்பவரின் மகன் ஜாங் ஜிலாங். ஜாங் யூடாங், மாலா பிரின்ஸ் என்ற பிரபலமான மசாலா பொடி தயாரிக்கும் நிறுவன அதிபர். அண்மையில் அவர் தனது மலைக்க வைக்கும் சொத்து விவரத்தை வெளியிட்டார்.

இது அவரது மகன் ஜாங் ஜிலாங்குக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. 20 வருடங்களாக தந்தையின் சொத்துகள் பற்றி எந்த விவரத்தையும் அவர் அறிந்து கொண்டதில்லை. அந்தளவுக்கு அவரது தந்தை அதை ரகசியமாக வைத்திருந்தார். ஜிலாங் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் தான் இந்த விவரம் வெளியானது. உண்மையில் அவரது குடும்பம் மிகவும் பணக்காரக் குடும்பமாகும்.




பிங்ஜாங் பகுதியில் மிகச் சாதாரணமான ஒரு பிளாட்டில் ஜிலாங் குடும்பம் வசித்து வந்தது. பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மாலா பிரின்ஸ் வணிகப் பேரரசின் மூளையாக இருந்த அவரது தந்தை, குடும்பத்தின் உண்மையான நிதி நிலையை மறைத்து வைத்திருந்தார். அவரது மகனுக்கு இடைவிடாத பணி நெறிமுறையையும் வெற்றிக்கான உந்துதலையும் ஏற்படுத்துவதற்காக இப்படி செய்தார். நான் பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்கும் வரை எங்களுடைய குடும்ப செல்வத்தைப் பற்றி எனக்கு எந்த விவரமும் தெரியாது. குடும்பச் சொத்துக்களையும், பணத்தையும் சார்ந்திருக்காமல், தகுதியின் அடிப்படையில் எனது சொந்த பாதையை நான் உருவாக்க வேண்டும் என்பதே என் தந்தையின் நோக்கமாக இருந்தது என்று ஜிலோங் உள்ளூர் செய்தி சேனல்களிடம் கூறினார். இந்த நிலையில் குடும்பத்தின் உண்மையான நிதி நிலையை முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஜாங் யூடாங் தனது மகனுக்கு ஆடம்பர வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினார்.

10 மில்லியன் யுவான் மதிப்புள்ள ஆடம்பரமான வில்லாவுக்கு இடம் பெயர்ந்தார். ஜிலாங் இப்போது தனது தந்தையின் நிறுவனத்தில் சேர்ந்து தொழிலை கவனித்து வருகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!