Cinema Entertainment

ரோமியோ விமர்சனம்..

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் ஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது ரோமியோ திரைப்படம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த ரோமியோ திரைப்படம் இந்த சம்மர் விடுமுறையை டார்கெட் செய்து வெளியாகி இருக்கிறது.

ரோமியோ' காதல் கதை: திரை விமர்சனம் | தமிழ் சினிமா புதுமை

விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படம் சம்மர் பிளாக்பஸ்டராக மாறுமா? அல்லது மற்றொரு விஜய் ஆண்டனி படமாக மாறி விடுமா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ரோமியோ கதை: டிரெய்லரில் பார்க்கும் போதே இந்த படம் அப்படியே ஷாருக்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான ரப்னே பனாதி ஜோடி படம் போலவே இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. படத்தை பார்த்தாலும் அதே கதை தான். ஆனால், கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் செய்து இதை புதிய கதையாக விநாயக் வைத்தியநாதன் மாற்றியுள்ளார். மலேசியாவில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊர் திரும்பும் 35 வயது நபரான விஜய் ஆண்டனிக்கு நடிகையாக ஆசைப்படும் மிருணாளினி ரவியை திருமணம் செய்து வைக்கின்றனர். விருப்பமில்லாமல் திருமணம் செய்துக் கொள்ளும் மிருணாளினி ரவி விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மனைவியை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கும் விஜய் ஆண்டனி மனைவிக்கு பிடித்தவராக மாற முயற்சி செய்வதும் இறுதியில் என்ன ஆனது என்பதும் தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: சமீப காலமாக வெளியான விஜய் ஆண்டனி படங்களுக்கும் இந்த படத்துக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. படத்தை கடைசி வரை ஜாலியாக ரசித்து, சிரித்து பார்க்க முடிகிறது. இப்படித்தான் கதை போகும் என்று தெரிந்தாலும், திரைக்கதையில் தனது மேஜிக்கை இயக்குநர் நிகழ்த்தி உள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவியின் நடிப்பு சூப்பர். கூடவே லவ் குருவாக வரும் யோகி பாபு, ஷாரா மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டவர்களின் காமெடி காட்சிகள் ரகளை.

Romeo Movie Review Tamil Vijay Antony Mirnalini Ravi Starring Romeo Review Rating Is The Movie Worth Watching | Romeo Movie Review: விஜய் ஆண்டனியின் காதல் கலாட்டா.. “ரோமியோ” படத்தின் விமர்சனம் இதோ!

ஆக்‌ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி, காதல் நாயகனாக நடித்திருக்கிறார். தன்னை வெறுத்தாலும் தனது மனைவியை ஒருதலையாக காதலிக்கும் அவரது நடிப்பு, அறிவு என்ற கதாபாத்திரத்தின் ஆழ்மனதில் இருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்துகிறது. தனது வழக்கமான உடல் மொழிகளை சில இடங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும், இது பழைய விஜய் ஆண்டனி இல்லை, என்பதை தனது நடிப்பு மூலம் நிரூபித்திருக்கிறார். நடனம் மற்றும் காமெடியிலும் அசத்தியிருக்கிறார்.

பிளஸ்: விஜய் ஆண்டனியின் நடிப்பும் இசையும் இந்த படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஜாலியான படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தால் போதும் என நினைத்து உழைப்பை கொட்டியிருப்பது தெரிகிறது. மிருணாளினி ரவி தனக்கு இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு முடிந்த வரை ஸ்கோர் செய்திருக்கிறார்.

காதல் கதையாக இருந்தாலும், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன், திருமணத்திற்குப் பிறகு பெண்களின் கனவு எப்படி சிதைந்து போகிறது என்பதை பற்றி பேசியிப்பதோடு, பெண்களுக்கும், அவர்களது கனவுகளுக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்க வேண்டும் என்ற மெசஜை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

மைனஸ்: ஒரு 2 மணி நேரத்தில் இந்த படத்தை இன்னமும் கிரிஸ்ப்பாக முடித்திருக்கலாம். இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுவையாகி விட்டது. ஆனால், ப்ரீ கிளைமேக்ஸில் இயக்குநர் அதை சரி செய்தது சிறப்பான விஷயம். சில பாடல்களை நீக்கியிருந்தால் இன்னமும் பெட்டராக மாறியிருப்பான் இந்த ரோமியோ. ஆனால், தியேட்டருக்குச் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் போர் அடிக்காது. விஜய் ஆண்டனியின் இந்த படத்துக்கு மக்கள் ஆதரவு அளித்தால் நிச்சயம் சம்மர் ஹிட் படமாக மாறும். ஆனால், அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில், இந்த ‘ரோமியோ’ ரசிகர்களின் இதயங்களை வெல்வார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!